இலக்குவனார் பரப்பிய உள்ளேன் ஐயா. . .! – கே.பி.அம்பிகாபதி, தினமணி கதிர்

பள்ளிகள், கல்லூரிகளில் “எஸ் சார்’ என்று மாணவர்கள் வருகைப் பதிவைத் தெரிவித்த நிலையை மாற்றிய புகழுக்குச் சொந்தக்காரர் சி.இலக்குவனார். இவர் தமிழாசிரியர்,  பேராசிரியர்,  தமிழ் ஆய்வாளர்,   மொழிப் போர் தியாகி என்று பல்வேறு பன்முகங்களைக் கொண்டவர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு கிராமத்தில் 1909-ஆம் ஆண்டு நவ. 17-இல் பிறந்த இவர்,  1973-ஆம் ஆண்டு செப். 3-இல் மறைவுற்றார்.  முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆசிரியர்.  கவிஞர் இன்குலாப்,  முனைவர் கே. காளிமுத்து, நா. காமராசன், பா. செயப்பிரகாசம், முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியன்…

தனித்தமிழியக்க வேர்களும் விழுதுகளும்நூல் வெளியீடும் வழித்தோன்றல்கள் சிறப்பிக்கப்படலும்

தனித்தமிழியக்க வேர்களும் விழுதுகளும்நூல் வெளியீடு ஆடி 01, 2053 / 17.07.2022ஞாயிறு மாலை 5.00 – இரவு 7.30 பீமாசு உணவுவிடுதிநூறடிச் சாலை, வடபழனி, சென்னை நூல் வெளியிட்டுச் சிறப்புரை:மாண்பமை கல்விக்கோ விசுவநாதன், வேந்தர், வே.தொ.ப.; நிறுவுநர், தமிழியக்கம்ஏற்பாடு: மறை.தாயுமானவன்தமிழியக்கமும் மறைலை அடிகள் கல்வி அறக்கட்டளையும் முழு விவரங்கட்கு அழைப்பிதழ் காண்க.

தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்! -பெ.மணியரசன்

தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்! வள்ளலார் வழி ஆன்மிகச் சான்றோராக விளங்கிய தவத்திரு ஊரன் அடிகளார் இன்று (14.7.2022) அடக்கம் ஆனார்கள் என்ற செய்தி மிகவும் துயரமளிக்கிறது. வள்ளலார் வழியில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, வடலூர் சன்மார்க்க நிலைய வளாகத்தையே தமது வாழ்விடமாக்கிக் கொண்டவர் ஊரன் அடிகளார். நான் திருச்சி தேசியக் கல்லூரியில் புகுமுக வகுப்பு (பி.யூ.சி) படிக்கும் போது, தங்கிப் படித்த திருச்சி சிந்தாமணி பாப்பம்பாள் சத்திர அறக்கட்டளை விடுதியில் ஒரு சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்பாகச் சைவநெறி, வள்ளலார்நெறி ஆகியவை…

முனைவர் பூமா பொன்னவைக்கோ மறைந்தார்

திருவாட்டி முனைவர் பூமா பொன்னவைக்கோ விடை பெற்றார் கணவர் பேராசிரியர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களுருக்கேற்ற தமிழார்வம் மிக்க மனை மாண்பினராகத் திகழ்ந்த, அனைவரிடமும் கனிவாகவும் எளிமையாகவும் பழகும் முனைவர் பூமா பொன்னவைக்கோ அவர்கள் ஆனி 17, 2053 வெள்ளி இரவு 11.45 மணியளவில் பிரியா விடை பெற்றார். அவரது குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். அன்னாரின் நினைவேந்தல் படையல் ஆனி 25, 2053 / 09.07.2022 சனி இரவு 7.00 காரியம் மறுநாள் ஞாயிறு காலை 9.00 மணி நிகழ்விடம்: கோ இல்லம், எண்…

தமிழன்னைக்குப் பெருமை சேர்க்க வருகிறாள் தமிழணங்கு

  உலகத் தமிழர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தும் முயற்சி நடைபெறுவதால் ‘தமிழராய் இணைவோம்‘ என்ற இலக்குடன் தமிழணங்கு மாத இதழ் தொடங்கப்பட்டுள்ளது. இணையத்திலும் அச்சிலும் வெளிவருகிறது. தமிழ் மரபு, பண்பாடு, சமயம், வரலாறு, மொழி இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. rajetamiljuly1@gmail.com  க்கு கட்டுரைகளை அனுப்புங்கள். முதல் இதழ் 134 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது. விலை உரூ120/- ஆசிரியர்: முனைவர் செ. இராசேசுவரி amazon.in amazon.com தளங்களில் வாங்கலாம்.

முனைவர் வை.பழனிச்சாமி இ.ஆ.ப. வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு

அகதாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எசு. நூல் வெளியீட்டு விழா ஆனி 25, 2053 சனி 09.07.2022 மாலை 5.00 உருசியக் கலாச்சார மையம் 74, கத்தூரிரங்கன் சாலை, தேனாம்பேட்டை சென்னை மாலை 5.00 தேநீர் விருந்து நூல் வெளியீடு: திரு வைகோ, நா.உ. தலைமை: தாமரைத்திரு நல்லி குப்புசாமி வாழ்த்துரை: திரு பார்த்தசாரதி, நிறுவனர், வலைத்தமிழ் முனைவர் வி.பொன்ராசு, நூலாசிரியர் உரை: எழுத்தாளர் இராணிமைந்தன் வரவேற்புரை :செல்வி ப.இரா.நிகரிகா நன்றியுரை: மரு.ப.இராசுகுமார் இன்னிசை ஏந்தல் ஆத்மநாதன் இன்னிசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.

அகில் இரிசி இராசசேகரனின் நூல் வெளியீட்டு விழா

அகில் இரிசி இராசசேகரனின் Rock Art of Madurai – The Pre History of Civilization நூல் வெளியீடு ஆனி 24, 2053 வெள்ளி 08.07.2022 மாலை 6.00  ‘பி’ தொகுதி கருத்தரங்கக் கூடம், அமெரிக்கன் கல்லூரி, மதுரை அன்புடன் நெருஞ்சி இலக்கிய இயக்கம், தஞ்சாவூர்

பரமக்குடிச் சிறுவனுக்கு  முனைவர் பட்டம்

பள்ளிக்கூடச் சிறுவனுக்கு  முனைவர் பட்டம் பள்ளிக்கூடப் பொறுப்பாளர்கள் பாராட்டு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆயிர வைசிய பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 5  ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் த. சந்தோசு கண்ணா. இந்த மாணவருக்கு அண்மையில் மதுரையில் நடந்த விழாவில் பன்னாட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இளம் அகவையில் மகிழுந்துபற்றிய பல செய்திகளை மிகவும் துல்லியமாகக் கூறி வருவதால் முனைவர் வழங்கப்பட்டது. இவர் ஏற்கெனவே ஆசிய ஆவண ஏடு(Asia Book of Record), இந்திய ஆவண ஏடு(India Book…

‘புலம்பெயர் மணற்துகள்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா – சார்சா

சார்சாவில் மலையாள எழுத்தாளர் இசுமாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாள் : ஆனி 16, 2053 03 / சூலை 2022 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 9.30 மணி முதல் 12 மணி வரை இடம் : சார்சா அரண்மனை(பேலசு)உறைவகம், சார்சா தலைமை: முகிப்புல் உலமா அல்காசு ஏ. முகம்மது மஃகரூபுப் பங்குதாரர், சங்கீதா உணவகம், துபாய் முன்னிலை: முனைவர் ஆ. முகம்மது முகைதீன் நிறுவனத் தலைவர், கல்லிடைக்குறிச்சி தேசியக்…

இன அழிப்பிற்கு நீதி கோரும் தொடர் உரையாடல், 30.06.2022

இன அழிப்பிற்கு நீதி கோரும் தொடர் உரையாடல் 59 ஆனி 16, 2053 / 30.06.2022 இரவு 7.00 இருட்டில் இலங்கை அடையாள எண் 864 136 8094 புகு எண் 12345 பேசுநர் தோழர் தியாகு தோழர் செந்தில்

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 7,8 & 9 : இணைய அரங்கம் – சூலை 03,2022

  தமிழ்க்காப்புக்கழகம்  ஆளுமையர் உரை 7,8 & 9 : இணைய அரங்கம் ஆனி 19, 2053 ஞாயிறு , சூலை 03, 2022, காலை 10.00 “இயக்கமும் நானும்” முனைவர் இல.அம்பலவாணன் நிறுவன இயக்குநர், மக்கள்  மேம்பாட்டு வினையகம் தலைமையிடம் : திருச்சிராப்பள்ளி பேராசிரியர் முனைவர் ந.மணிமேகலை இயக்குநர், மகளிரியல் துறைத் தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோழர் ப. பரிமளா தலைவர், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மன்றம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி /…

11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சார்சா, சூலை 2023

உலகத்தமிழராய்ச்சி மன்றம்(IATR) இலிங்கன் தொழில் மேலாண்மைப் பல்கலைக்கழகம் சார்சா, ஐக்கிய அரபு அமீரகம் 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆய்வுச் சுருக்கம் சேர வேண்டிய நாள்:  புரட்டாசி 13, 2053 / 30.09.2022 ஆய்வுக் கட்டுரை மின்னஞ்சல்வழிச் சேர வேண்டிய நாள்: பங்குனி 17, 2054 / 31.03.2023 மின்வரி: abstract2023@gmail.com தொடர்பு முகவரி : 9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர், சென்னை 600 017 பேசி 28340488, 96770 37474, 98422 81957, 96000 07819 www.iatrinternational.org  / 11worldtamilconf@gmail.com ஆன்றோர்(தான்சிரீ)…