கவிச்சிங்கம் கண்மதியன் 4 நூல்கள் வெளியீடு
அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம் ஆனந்த சேவா சங்கம் இணைந்து நடத்தும் கவிச்சிங்கம் கண்மதியன் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா அகவை எண்பது நிறைவு விழா கல்வி வள்ளல் கலசலிங்கம் விருதாளர் – பொறிஞர் மா.பிரியதர்சினி ஆனி 02, 2053 16,06,2022 வியாழன் மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை
ஐவருக்குச் செம்மொழி வேள் விருது – பாராட்டு விழா 2022, சென்னை
மும்பை இலெமுரியா அறக்கட்டளை, தமிழ் அறக்கட்டளை, பெங்களூரு ஆகியன சார்பில் “செம்மொழி வேள்” விருது – பாராட்டு விழா 2022 தலைமை : முனைவர் மு.ஆறுமுகம் அமெரிக்காவின் ஆர்வர்டுபல்கலைக் கழகத் தமிழ்இருக்கை ஆட்சிக்குழு உறுப்பினர் வரவேற்புரை : மும்பை சு.குமணராசன் மும்பை இலெமுரியாஅறக்கட்டளை நிறுவனத்தலைவர் நிகழ்விடம் : சென்னை இராசாஅண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை இராசரத்தினம் கலையரங்கம் நாள் : வைகாசி 29, 2053 /12.6.2022 ஞாயிறு மாலை 5.30 மணி செம்மொழிவேள் விருது, பாராட்டுவிழா – 2022, நிகழ்ச்சிக்கு நிகழ்த்துகிறார். முதன்மை விருந்தினர்…
ஆளுமையர் உரை 2 & 3 : பேரா. வெ.அரங்கராசன் & புதிய மாதவி
தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 2 & 3 : இணைய அரங்கம் நாள்: வைகாசி 22 , 2053 ஞாயிறு சூன் 05.2022 காலை 10.00 ஆளுமையர் உரைகள் : எழுத்தும் நானும் பேராசிரியர் வெ.அரங்கராசன் எழுத்தாளர் புதிய மாதவி, மும்பை கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: தமிழாசிரியை உரூபி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் தொகுப்புரை: தோழர் தியாகு நன்றியுரை: …
திருக்குட நன்னீராட்டு விழா முதலிய பெரு விழா, திருவையாறு
அருள்தரு ஒளவைத் திருக்கோயில்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாதிருவள்ளுவர் சிலை திறப்பு விழாநாட்டுப்புற இசை நிகழ்ச்சி ஒளவைத் தமிழ் வாழ்வியல் கருத்தரங்கம் வைகாசி 20,21,22,23, 2053 * 03-06.06.2022 ஒளவைக்கோட்டம், திருவையாறு, தமிழ்நாடு
சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ்
சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ் சிறுவர் சிறுமியர் குறள்நெறி வழி நடைபோட வந்துள்ள திங்கள் மின்னிதழ் குறள் விருந்து. உலகத்திருக்குறள் இணையக் கல்விக்கழகத்தால் இலவச இணைய இதழாக வெளியிடப்பெறுகிறது. இதன் ஆசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார். பொறுப்பாசிரியர் முற்போக்குப்பாவலர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு. முனைவர் முரசு நெடுமாறன் சிறப்பாசிரியராக உள்ளார். பொறி தி.ஈழக்கதிர் இணை ஆசிரியராக உள்ளார். கம்போடியா அங்கோர் தமிழ்ச்சங்கப் பொருளாளராகவும் உள்ள இதன் பொறுப்பாசிரியர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு எழுதிய தலைமைப்பண்பிற்கு உயிர்நேயம் தேவை என வலியுறுத்தும் வகுப்பறை-சிறுவர் கதை விருந்து…
திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா
திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் உறைவகத்தில்(ஓட்டலில்) மே 18, 2022 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. விழாவில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், அமைச்சர்கள் அன்பில் மகேசு பொய்யாமொழி, மனோ தங்கராசு, நாகர்கோவில் மாநகரத் துணைத் தலைவர் மேரி பிரின்சி இலதா, வழக்குரைஞர் இராசீவுகாந்தி, முனைவர் அருட்பணி எசு.தனிசுலால், ஐயா பாலபிரசாபதி அடிகளார், முனைவர் ஆனந்து முதலானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்…
இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளன் விடுதலை
இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் புதுதில்லி: இராசீவு படுகொலை வழக்கில் வஞ்சகமாகக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முன்னாள் தலைமையமைச்சர் இராசீவு படுகொலை வழக்கில் வாணாள் தண்டனையில் துன்புற்று வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, செயக்குமார், இராபருட்டு பயசு, இரவிச்சந்திரன். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த செயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூடித் தீர்மானித்தது. ஆனால் கு.பு.து.(சிபிஐ) விசாரித்த வழக்கு…
திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா, கன்னியாகுமரி, 18.05.22
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் உறைவகம் இன்று (வைகாசி 04, 2053 / மே 18, 2022) மாலை 6 மணி பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி, அமைச்சர் மனோ தங்கராசு, நாகர்கோவில் துணை மாநகரத் தலைவர் மேரி பிரின்சி இலதா வழக்கறிஞர் இராசீவுகாந்தி, முனைவர் அருட்பணி எசு.தனிசுலால், ஐயா பாலபிரசாபதி அடிகளார், முனைவர் ஆனந்து பங்கேற்க உள்ளனர்.
தமிழ்க்காப்புக்கழகம்ஆளுமையர் உரை: திரு தி.கோ.சீ.இளங்கோவன், நா.உ.,
தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் 1 : இணைய அரங்கம் நாள்: வைகாசி 08 , 2053 ஞாயிறு 22.05.2022 காலை 10.00 ஆளுமையர் உரை: திரு தி.கோ.சீ.இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சிறப்புரை: மக்கள் மன்றங்களும் நானும் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் நன்றியுரை: தமிழாசிரியை திருவாட்டி உரூபி
முதசு குடியிருப்போர் நலச்சங்கத் தொடக்க விழா
முருகப்பா நகர் தருமர் நகர் சுப்பிரமணி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடக்க விழா சித்திரை 18, 2053 – 01.05.2022 மாலை 4.00 முருகப்பா நகர் முதன்மைச்சாலை, மடிப்பாக்கம், சென்னை 600 091
கருஞ்சட்டை விருது வழங்கும் விழா
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் கருஞ்சட்டை விருது வழங்கும் விழா சித்திரை 16, 2053 / ஏப்பிரல் 29, 2022மாலை 6.00சர் பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர்,சென்னை கருஞ்சட்டை விருது பெறுநர் : திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொருளாளர் எழில்.இளங்கோவன், திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் கொளத்தூர் சின்னராசு அறிமுக உரை: பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பங்கேற்பு :அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், திராவிடர் கழகப் பரப்புரைச் அருள்மொழி,சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, செ.கருணாநிதி
சிற்சபேசன் என்னும் சிரிப்பலை ஓய்ந்தது!
பட்டிமன்ற முன்னோடி, நயத்தக்க நகைச்சுவைக்குப் பலருக்கு ஆசானாக விளங்கிய சிறந்த சொற்பொழிவாளர், மேலாண்மை வல்லுநர், பேராசிரியர் முனைவர் திரு. கண. சிற்சபேசன் அவர்கள் இன்று – சித்திரை 04, 2053 / ஏப்பிரல் 17, 2022 – காலை 10.15 மணி அளவில் காலமானர்கள். குடும்பத்தினரின் ஆழ்ந்த துயரத்தில் அகரமுதல மின்னிதழ், தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் பங்கேற்கின்றன.
