குவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு

வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் குவைத்தில் வெளியீடு புரட்டாசி 17, 2050 / 04.010.2019. மாலை ‘கல்தா’ திரைப்படப் பாடலின் இசை வெளியீடு மிகச் சிறப்பாக அரங்கம் நிறைந்த குவைத்து வாழ் தமிழர்களின் முன்னிலையில் பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோடு நடந்தேறியது. இத்திரைப் படத்தின் இயக்குநர் திரு. அரி உத்திரா, ஏற்கெனவே தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும் எனும் இரண்டு சமூகப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாகச் சிவநிசாந்து, கதாநாயகியாக அயிரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தக் கல்தா திரைப்படத்தின் “கண்ணான கண்ணுக்குள்ள”…

கலைமகள் ஒளவையார் திருவிழா, திருவையாறு

புரட்டாசி 20, 2050 / 07.10.2019 திங்கள் காலை 9.00 முதல் இரவு 8.00 ஒளவைக் கோட்டம், திருவையாறு ஒளவையின் மின் எழில் திருத்தேர் உலா காந்தியடிகள் கவிதாஞ்சலி, நூல் வெளியீட்டு விழா, தலைமை அமைச்சர், அமைச்சர்கள் பொறுப்பேற்கும் விழா, ஒளவை விருது வழங்கு விழா, நாட்டுப்புற ஆடற்கலை

ஆர்சாவில் தமிழக இளைஞருக்கு விருது

ஆர்சாவில் தமிழக இளைஞர் சே.ஆசிக்கு அகமது விருது பெற்றார்! ஆர்சா இந்தியச் சங்கத்தில் நடந்த ஓணம் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் சே.ஆசிக்கு அகமது பொது நலச் சேவைக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். சே.ஆசிக்கு அகமது திருச்சி சமால் முகம்மது கல்லூரியில் இளநிலை வேதியியல் பட்டம் பயின்றவர். தற்போது சார்சாவில் உள்ள குவைத்து மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணியின் ஒரு பகுதியாக எதிர்பாராத நிலையில் மரணமடைபவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றி சார்சாவில் நல்லடக்கம் செய்யவோ சொந்த…

கீழடி உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், ஒளிபரப்பு 7/10 இல் காலை 9.00-9.30

புரட்டாசி 19, 2050 / 7.10.2019 காலை 9.00-9.30 கீழடி குறித்து உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன்  நெறியாளர் திரு பாண்டியன் தமிழன் குரல் நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சி

இலக்கிய அமுதம் : கோமல் சுவாமிநாதன் – இந்திரன்

புரட்டாசி 19, 2050 / ஞாயிறு / 6.10.2019  மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017 இலக்கிய அமுதம் – கோமல் சுவாமிநாதனும் அவரது சுபமங்களாவும் : இலக்கியத் திறனாய்வாளர் இந்திரன்

திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை!

திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை! தில்லியில் கடந்த 23,24 ஆம் நாள்களில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய, தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன் நிறைவு விழாவிலும் தன்னார்வத்துடன் பங்கேற்றார். அப்போது அவர் “பிரான்சில் 06., 07.08.2020 இல் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அரசு நிதி யுதவி செய்யும். இந்த மாநாடு முடிந்து விட்டாலும் சிறிய அளவு உதவியேனும் செய்வோம். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு…

தேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்

ஆத்மாநாம் அறக்கட்டளைஅகநி வெளியீடு இணைந்து நடத்தும்‘தேவரடியார் கலையேவாழ்வாக’ முனைவர் அ.வெண்ணிலாவின் ஆய்வுநூல் குறித்த விவாத அரங்கம்புரட்டாசி 04, 2050 சனி 21.09.2019 மாலை 5.30அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் தளம், கோட்டூர்புரம் – கவிஞர் மு.முருகேசு  

விருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50

நிகழ்வு 50 காவேரியிலிருந்து கங்கை வரை – மிதிகைப் (மோட்டார் சைக்கிள்) பயணப் பட்டறிவுகள் சிறப்புரை :   பிரபு ,  மயிலாடுதுறை      மூகாம்பிகை வளாகம்     சி.பி. இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே     ஆறாவது தளம்      மயிலாப்பூர்      சென்னை 600 004 புரட்டாசி 04, 2050  / 21.09.2019  (சனிக்கிழமை)நேரம்  மாலை 6.00 மணி அன்புடன் வரவேற்கும் அழகிய சிங்கர் 9444113205

பெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல! இலக்குவனார் திருவள்ளுவன்

பெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல! மதுரை மாநகரில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தை மேம்படுத்திச் சிறப்பாக  மாற்றி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதிய கட்டுமானத்திற்கான வரைபடம் 20.1.2019 அன்று  வெளி யிடப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் கோபுர வடிவத்தில் வரைபடம் வெளி வந்ததால் கடும் எதிர்ப்பு வந்ததாகவும் அவ்வாறு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.  ஆனால், அண்மையில் மதுரையில் உள்ளாட்சித் துறை அமைச்சர்  வேலுமணி, கோபுரம் வடிவிலான  வரைபட அடிப்படையிலேயே மதுரை பெரியார் பேருந்து நிலைய முகப்பு அமையும்…