‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் திறனாய்வு – பேரா.சுப.வீ.
அன்புடையீர், வணக்கம். எங்கள் பேரவையின் சார்பில், வரும் வைகாசி 05, 2050 ஞாயிற்றுக் கிழமை (19.05.2019) மாலை 6.30 மணிக்குச், சென்னை, இராயப்பேட்டை, இலாயிட்சு சாலை, இந்திய அலுவலர் சங்கம் (Indian Officers’Association)கலையரங்கில், பேரறிஞர் அண்ணா பற்றிய ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்னும் நூல் திறனாய்வு அரங்கம் நடைபெற உள்ளது. திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தலைமையில், பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் நூலைத் திறனாய்வு செய்கின்றார். அன்புடன், துரை.செ.கண்ணன் ஊடகத்துறைப் பொறுப்பாளர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை
அளவளாவல் : உமா இராசு
வைகாசி 05, 2050 / 19.05.2019 மாலை 5.300 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல்: திருமதி உமா இராசு
முள்ளிவாய்க்கால் துயர 10 ஆம் ஆண்டு நினைவு நாள் – அரசவைத் தொடக்க 3 ஆம் ஆண்டு
வைகாசி 03, 2050 / மே 17, 2019 முற்பகல் 9.00 – நண்பகல் 12.00 பிலடெல்பியா
பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது – இலக்குவனார் திருவள்ளுவன், மாலைமுரசு
பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது தமிழ் அறிஞர்கள் கண்டனம் சென்னை, மே 11 பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது என்று தமிழ் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணாக்கர்களுக்குத் தரமான தமிழறிவை ஊட்டித் தமிழ்ப்பற்றை வளர்க்க வேண்டியது கல்வித்துறையின் கடமை. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள கல்வித்துறையோ தமிழைத் தவணை முறையில் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு மேனிலைப்பள்ளிகளில் – 11, 12 ஆம் வகுப்புகளில்…
சாகித்ய அகாதெமி விருதாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்!
தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழி எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்(75) நெல்லையில் இன்று காலை காலமானார். முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் ஊரில் பிறந்தவர். இவர் மனைவியின் பெயர் சலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளிட்டுள்ளார். 1997இல் சாய்வு நாற்காலி என்னும் புதினத்திற்குத் தமிழுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பெற்றது. கன்னியாகுமரியில் இருந்து நெல்லைக்கு மாறிக் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த சில நாள்களாக…
மொழிப்போர் ஈகி திருப்பூர் பெரியசாமிக்கு உதவுங்கள்! – பெ. மணியரசன்
நோயில் துன்புறும் மொழிப்போர் ஈகி திருப்பூர் பெரியசாமி அவர்களுக்கு உதவுங்கள்!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள் அன்பார்ந்த தமிழ்ப் பெருமக்களே ! மொழிப்போர் ஈகியர், திருப்பூர் ப. பெரியசாமி அவர்களைத் தமிழ் உணர்வாளர்கள் நன்கு அறிவர். 1965 இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் திருப்பூரில் கலந்து கொண்டு போராடியவர் திரு. பெரியசாமி அவர்கள். அப்போது அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கிளைச் செயலாளராக இருந்தார். இப்போது அவருக்கு அகவை 83. இந்தித் திணிப்பை எதிர்த்து அவர் ஏற்றிய கருப்புக் கொடியை இறக்கச் சொல்லி காவல் துறை பெரியசாமிக்குக் கட்டளையிட்டது. கருப்புக் கொடியை இறக்க மறுத்துவிட்டார் பெரியசாமி. 1965 – இந்தி எதிர்ப்புப் போர் என்பது, தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய உரிமைப் போராட்ட நிகழ்வாகும். திருப்பூரில் ஏராளமானவர்களைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அதேபோல், குமாரபாளையம் – பொள்ளாச்சி ஆகிய இடங்களிலும்இந்தியை எதிர்த்த தமிழர்களை சுட்டுக் கொன்று அவர்தம் பிணங்களைச் சரக்குந்தில் ஏற்றிச் சென்று காவல்துறையினர் எரித்தனர். தமிழ்நாடு முழுவதும் முந்நூறு பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், கொல்லப்பட்டவர்களின் உண்மையானஎண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை என்றும்…
நினைவேந்தல் நாளில் கறுப்புப்பட்டி அணிவோம்! மரம் நாட்டுவோம்! –வி.உருத்திரகுமாரன்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம்! ஆளுக்கொரு மரம் நாட்டுவோம்! – தலைமையர் வி.உருத்திரகுமாரன் பெரும் இனவழிப்பொன்றின் ஊடாகத் தமிழர் தேசத்தை வன் கவர்வு செய்த, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் கூட்டுப்பெருந்துயரின் நாளாகிய தமிழீத் தேசியத் துக்க நாளில், இரண்டு செயற்பாடுகளைத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ்…
இலக்கிய அமுதம் : கு.அழகிரிசாமியின் படைப்புகள்
சித்திரை 28, 2050 – சனி – 11.05.2019 மாலை 5.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 இலக்கிய அமுதம் : கதைப்பேரரசர் கு.அழகிரிசாமியின் படைப்புகள் தலைமை : திரு இராய செல்லப்பா சிறப்புரை: திரு கடற்கரை மத்தவிலாசம் அங்கதம் ஏ.இராமச்சந்திரன் – ஏ. சாரங்கராசன் தங்கள் வரவை அன்புடன் எதிர்நோக்கும் தொடர்பிற்கு : சுந்தரராசன் 9442525191 இல்லம் அடைய
காஞ்சி மணிமொழியார் 120ஆவது பிறந்த நாள் விழா
சித்திரை 26,2050 வியாழன் 09.05.2019 மாலை 5 மணி அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல்,வேப்பேரி, சென்னை – 600 007. காஞ்சி மணிமொழியார் 120ஆவது பிறந்த நாள் விழா தலைமை: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் – திராவிடர் கழகம்) தமிழ்த் தாய் வாழ்த்து : திருக்குறள் இசைமாமணி சொ.பத்மநாபன் வரவேற்புரை : புலவர் ஆசி.திருமாலடிமை உரை நிகழ்த்துவோர்: நாடாளுமன்ற உறுப்பினர் தி. கோ. சீ. இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்பாளர், திமுக) சட்டமன்ற உறுப்பினர் செ.அன்பழகன் (சென்னை மேற்கு…
இலக்குவனார் ஆராய்ச்சி நூலகம் – நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை
தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லம் – தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் படிப்பகம் ஆக உருவாக்க நடவடிக்கை எடுப்போம்!- நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதித் தேர்தல் அறிக்கை
பாவலர் தமிழேந்தி விடைபெற்றார்!
பாவலர் தமிழேந்தி விடைபெற்றார்! அடுத்தடுத்து இப்படியா ? ‘சிந்தனையாளன்‘ இதழைப் பார்த்தவுடன்அதன் இறுதிப்பக்கத்தை ஆவலுடன்தேடுவோர் மிகுதி. இதழ்தோறும் இறுதிப்பக்கத்தில் இடம்பெற்றிருப்பதுபாவலர் தமிழேந்தியின் பாடல். ” நடப்பு அரசியலை வெளிப்படையாகப்பாடுவோர் அருகிவிட்ட தமிழ் இலக்கியச் சூழலில் தமிழேந்தி மட்டுமேஅந்தத் தனித்தன்மையைக் காப்பாற்றிவருகிறார் ” என்று பாவலர் அறிவுமதி வியந்து பேசுவது வழக்கம். ‘சிந்தனையாளன்’ இறுதிப் பக்கக் கவிதையாக இனித் தமிழேந்தி வரமாட்டார்.அரசியல் கவிதை அற்றுப்போகாமல்காப்பாற்றிய பாவலர் தமிழேந்தியின்பயணம் நின்றுவிட்டது. தமிழின விடியலுக்கான எல்லாப் போராட்டங்களிலும் மார்க்சியப் பெரியாரியப்பொதுவுடைமைக் கட்சி சார்பில் எழுச்சிமுழக்கமிடும் போராளித் தமிழேந்திகுரலை இனிக் கேட்க வாய்ப்பில்லை!…
பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் – 175
சித்திரை 21, 2050 சனிக்கிழமை, 4-5-2019, மாலை 6 மணி அம்பேத்கர் திடல், தொடர் வண்டிச் சாலை, கொரட்டூர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 129 ஆம் பிறந்த நாள் விழா! வரவேற்புரை: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர் -தி.க) தலைமை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர் – தி.மு.க) முன்னிலை: த.வ.இலால், இர.விமலன் (பகுதித் துணைச் செ – தி.மு.க) வி.பன்னீர் செல்வம் (அமைப்புச் செயலாளர்) தே.செ. கோபால் (மண்டலச் செயலாளர் ) பா.தென்னரசு (ஆவடி மாவட்டத் தலைவர்) சிறப்புரை: வழக்குரைஞர் மதிவதனி நன்றியுரை: சி.செ.அறிவுமதி (திராவிட…
