குவிகம் இல்லம்: அளவளாவல்: இரா.இராசு
சித்திரை 22, 2050 –ஞாயிறு- 05.05.2019 மாலை 5.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல்: இரா.இராசு ஆசிரியர், சுற்றுச்சூழல் இலக்கிய ஆர்வலர் தொடர்பிற்கு: சுந்தரராசன் 94425 25191
தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பாவேந்தர் விழா-நிகழ்வுப் படங்கள்
நிகழ்ந்த நாள்: வைகாசி 14, 2050 சனி 27.04.2019 மாலை 04.30 இடம்: முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62 படங்களைப் பெரிதாகக் காணச் சொடுக்குக.
வலைத்தமிழ் பல்சுவை மாத இதழ் வெளியீடு, வாசிங்டன்
வலைத்தமிழ் பல்சுவை மாத இதழ் வெளியீடு, வாசிங்டன் தமிழ் வளர்ச்சி சார்ந்த ஆக்கப்பூர்வமான அனைத்துச் செயற்பாடுகளையும் இருகரம் கொண்டு வரவேற்று அறிமுகப்படுத்தி வருவது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம். இச்சங்கம் மிகப்பெரிய அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியில் நடத்திய சித்திரை விழாவில் வலைத்தமிழ் பல்சுவை மாத இதழை வெளியிட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தியது. தமிழ்ச்சங்கத் தலைவர், செயற்குழு , வாசிங்டன் பகுதியிலுள்ள ஆசிரியர் குழு உறுப்பினர்கள், ஆர்வலர்கள், நிகழ்ச்சியை நெறிப்படுத்திய பேரவையின் மேனாள் தலைவர் திரு.நாஞ்சில் பீற்றர் என அனைவருக்கும் வலைத்தமிழ் ஆசிரியர் குழு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டது …..
#தமிழக-வேலை-தமிழருக்கே பரப்புரைக்கான சுட்டுரைக் குறிப்புகள்
#தமிழக-வேலை-தமிழருக்கே #Tamilnadu-Jobs-For-Tamils சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம் சுட்டுரை மாதிரிக் குறிப்புகள் 1 . தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே வெளி மாநிலத்தவர்க்கு அல்ல! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils 2 . தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் – தொழிற்சாலைகளில் 90% தமிழர்களையே பணிக்கு அமர்த்து! 10% மேலுள்ள வெளியாரை வெளியேற்று! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils 3. தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100% தமிழர்களுக்கே வழங்கு!வெளியாருக்கு தமிழ்நாட்டில் அரசுப்பணி அளிக்காதே! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils 4. தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை வழங்காதே! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils 5 . 1956ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று, தமிழர்களின் கல்வி, வணிகம், வேலை வாய்ப்பு களைப் பாதுகாக்கவே ‘தமிழ்நாடு’ மொழிவழித் தாயகமாக உருவானது. தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரைக் குடியமர்த்தி இந்நோக்கத்தை இந்திய அரசே சிதைக்காதே! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils 6. தமிழ்நாடு அரசுப் பணிகளில், தமிழ் மொழி அறிவு இல்லாத –…
சாகித்திய அகாதெமியின் இலக்கிய அரங்கம், குன்றத்தூர்
சித்திரை 20, 2050 வெள்ளி 03.05.2019 காலை 10.30 அன்னை பூரணம் கல்வி வளாகம், குன்றத்தூர் சாகித்திய அகாதெமி முனைவர் கோ.ஆலந்தூர் மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் இணைந்து நடத்தும் இலக்கிய அரங்கம் வாழ்வும் இலக்கியமும் தலைமை: வைகைச் செல்வி வாழ்த்துரை: மோ.பாட்டழகன் பங்கேற்போர்: வே.சிரீஇலதா – சங்க இலக்கியத்தில் பெண்களின் நிலை செ.முத்துச்செல்வன் – இடைக்கால இலக்கியத்தில் பெண்களின் நிலை பா.சம்பத்குமார் – சமக்கால இல்ககியத்தில் பெண்களின் நிலை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், பிரித்தானியா, மேல் விவரம்
வைகாசி 04, 2050 சனி மே 18, 2019 நண்பகல் 2.00 மணி – மாலை 5.00மணி திருப்புமுனை சந்திப்பு / சேரிங்கு கிராசு / Charing Cross நிலக்கீழ் தொடரி நிலையம் அண்மையில் குகை முனைச் சதுக்கம் / திராபல்கர் சதுக்கம் / TRAFALGAR SQUARE இலண்டன் / London WC2N 5DN முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தாயக விடுதலைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்போம்! அயராதுசெயல்படுவோம்! அனைத்து நாடுகைளயும் எம்பக்கம் திருப்புவோம்! தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தொடர்புகளுக்கு: பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) 02088080465, 07814486087, 07734397383, 07943100035,…
#தமிழக-வேலை-தமிழருக்கே #Tamilnadu-Jobs-For-Tamils சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம்
சித்திரை 20, 2050 – 2019 மே 3 – காலை 8 மணி முதல் சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம் ஏன்? பல்லாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் அரசியல், வரலாறு, பண்பாடு, தாயகம் ஆகியவற்றை தமிழர்களுக்கே உறுதி செய்யும் வகையில்தான் பல போராட்டங்களுக்குப் பிறகு 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள், தமிழர்களுக்குரிய தாயகமாக “தமிழ்நாடு” அமைக்கப்பட்டது. இன்று “தமிழ்நாடு” அமைக்கப்பட்ட நோக்கங்கள் சிதைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் தொழில் – வணிகம் – வேலை வாய்ப்பு அனைத்தும் பிற மாநிலத்தவரால்…
கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’
இலக்கிய வீதி அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’ வழங்கப் பெற்றது. இலக்கிய வீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம் இணைந்துநடத்தும் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வில், தமிழில் கவிதைத் தளத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’ சென்னையில்நடைபெற்ற விழாவில் வழங்கப்பெற்றது. 42-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், திறனாய்வு நூல்களை எழுதியுள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இவரை மேலும் சிறப்பிக்கும் வகையில்…
தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் பாவேந்தர் விழா – பாவரங்கம், கருத்தரங்கம்
வைகாசி 14, 2050 சனி 27.04.2019 மாலை 04.30. முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62 தலைமை: த.மணிசேரன் பங்கேற்பு: தொடக்கவுரை: அ.சி.சின்னப்பத்தமிழர் முழக்கம் எழுப்பல் – தமிழ்நேயன் சிறப்புரைகள்: பாவேந்தரும் தமிழும் – மறை தி.தாயுமானவன் வ.சுப.மாணிக்கனார் – செந்தமிழ்வாணன் பெரியாரும் திருக்குறளும் – வாலாசா வல்லவன் பரிமேலழகர் முதல் நாகசாமி வரை – இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துரை – அன்பு, சோம.பொன்னுச்சாமி, க.ச.கலையரசன், சேகர், ச.அழகுஒளி
ஒளவை தி.க.சண்முகம் 107ஆவது பிறந்த நாள் விழா
வைகாசி 13, 2050 வெள்ளி 26.04.2019 மாலை 5.30 உருசியப் பண்பாட்டு மைய அரங்கம், கத்தூரிரங்கன் சாலை, சென்னை 600 018 சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம்
மடிப்பாக்கத்தில் புத்தகக் காட்சி
சென்னை மடிப்பாக்கத்தில் புத்தகக் காட்சி சென்னை மடிப்பாக்கத்தில் வைகாசி 07, 2050 சனி 20.04.2019 அன்று மாலை 5.00 மணியளவில் கணேசு மகால் மண்டபத்தில் புத்தகக்காட்சி தொடங்கியது. உலகப்புத்தக நாளை முன்னிட்டு மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் இதன் தொடக்க விழாவில் இதன் நிறுவனர் எழுத்தாளர் வீரபாலன் வரவேற்புரையாற்றினார். திரைப்பட நடிகர் அருள்மணி புத்தகக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இயக்குநர் இராசி அழகப்பன் விற்பனையைத் தொடக்கி வைத்தார். எழுத்தாளர் பசுமைக்குமார், இதழாளர் சுந்தர புத்தன், நடிகர் எழுத்தாளர் கணேசு பரபு ஆகியோர் தொடக்கத்தில் புத்தகங்கள் வாங்கினர்….
இலக்கியச் சிந்தனை 586 + குவிகம் இலக்கிய வாசல் 49
சித்திரை 14, 2050 சனி 27.04.2019 மாலை 6.15 சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 மேடை தரும் உற்சாகம்: நடிகர்,எழுத்தாளர், பேச்சாளர் தொலைக்காட்சித் தொடர் ஆசிரியர், தொகுப்புரைஞர், கவிஞர் சி.வி.சந்திர சேகரன்
