தமிழ் முகில் – மூன்றாமாண்டு சிறப்பு மலர்

தமிழ் முகில் – வாழ்வியல் இதழ் மூன்றாமாண்டு சிறப்பு மலர் கட்டுரைகள், கவிதைகள் முதலான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வைகாசி 10 – 15, 2050 24.05.2019 முதல் 29.05.2019 வரை நடைபெறும் அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாட்டில் வெளியிடப் பெறும். சிறப்பு மலருக்கான கட்டுரைகள், கவிதைகள் முதலான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. படைப்புகள் அனுப்புவதற்கான இறுதி நாள்: 30.04.2019 படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி: முனைவர் மு.கலைவேந்தன் ஆசிரியர், தமிழ் முகில் – வாழ்வியல் இதழ் 153, வடக்கு வீதி,…

மறவாதே! 21.04.2019 பாவேந்தர் நினைவு நாள்!

மறவாதே! 21.04.2019   பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்! “பண்பட்ட ஞானம் பகுத்தறிவாம்! அவ்வழியில் மண்ணின் மாத்தமிழர் மாண்புறுக! – விண்வரை பெண்ணினமும் ஆணினமும் பேணுங் கருத்தொன்றித் தண்ணிழல்போல் வாழ்க தழைத்து“ எனவுரைக்கும் பாவேந்தர் இன்றமிழ்ப் பாச்சொல் நனவாக்கிப் பண்பாட்டை நாடு! – இனம்மொழி மண்ணுரிமை போற்று! மறவாதே! நல்லொழுக்கம் கண்ணெனக் காத்துயர்வைக் காண்! – மணிமேகலை குப்புசாமி

‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’: நூல் அறிமுக விழா, மதுரை

சித்திரை 12, 2050, வியாழன்,  25.04.2019, மாலை 6.00 மணி  விக்டோரியா எட்வர்டு மன்றம் (தொடரி நிலையம் அருகில்), மதுரை ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’ நூல் அறிமுக விழா தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (அமைப்பு செயலாளர்) வரவேற்பு: சுப.முருகானந்தம் (மாவட்ட துணைச் செயலாளர்) முன்னிலை: தே.எடிசன்ராசா (தென்மாவட்டப் பரப்புரைக் குழுத் தலைவர்) சே.முனியசாமி (மாவட்டத் தலைவர்) அ.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்) தொடக்க உரை: முனைவர் நம்.சீனிவாசன் (தமிழ்த்துறை தலைவர், மன்னர் கல்லூரி) நூல் அறிமுகம்:…

குவிகம் இல்லம்: அளவளாவல்: சி.ஆர்.ஈசுவரன்

சித்திரை 08, 2050 ஞாயிறு 21.04.2019 மாலை 5.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல்:சி.ஆர்.ஈசுவரன்,தொலைக்காட்சி/குறும்பட / நாடக ஆசிரியர் தொடர்பிற்கு: சுந்தரராசன் 94425 25191

10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல், பிரித்தானியா

10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல், பிரித்தானியா  வைகாசி 04, 2050 சனி மே 18, 2019  ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், விடுதலை வேட்கையோடு எம் மண்ணின்  விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட, கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காகவும் இலண்டன் மாநகரில் அணி திரள்வோம் வாரீர்! நிகழ்வு தொடர்பான மேலதிகத் தகவல்கள் பின்னர்அறியத்தரப்படும் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம். தொடர்புகளுக்கு: சங்கீத்து பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) 02088080465, 07814486087, 07734397383, 07943100035, 07508365678, 07974726095, 07769770710, 07888 709739 https://www.facebook.com/303646176403023/posts/

கவிஞர் வித்யாசாகருக்கு ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’

கவிஞர்  வித்யாசாகருக்கு  ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’  ‘குவைத்து, தாய்மண் கலை இலக்கியப் பேரவை’  கடந்தவாரம் ஞாயிற்றுக் கிழமை  மாலை மிகச் சிறப்பாக அறிஞர் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தது. அறிஞர்கள் பலரும், அனைத்துக் குவைத்து தமிழ் மன்றங்களின் தலைவர்களும் நிருவாகிகளும், பொறியாளர்கள் பலருமென ஒருங்கிணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களோடு தொண்டர்களாகச் சேர்ந்து பிற கட்சிகள் எனும் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் ஒன்றுகூடி ஒத்துமையாய் “குவைத்து, தாய்மண் கலை இலக்கியப் பேரவையின்” பேரன்பில் இணைந்து சிறப்பாக இவ்விழாவை ” குவைத்தின் மிர்காப்பு நகரில் கொண்டாடியது. தாய்த்தமிழகத்தில் வருடந்தோறும் கலைப் பணி மற்றும் சமூகப் பணியாற்றும் சிறந்த ஒரு மனிதநேயரைத் தேர்ந்தெடுத்து ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் தனது திருக்கரங்களால் வருடந்தோறும் …

சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்

சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம் இலக்கிய அமைப்புகளின் சார்பில் சித்திரை முதல் நாள், 14/4/19 அன்று மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்பாக நடந்தது. அன்று ஞாயிறு என்பதாலும் சித்திரை முதல் நாள் என்பதனாலும் நிலவிய நிகழ்ச்சி நெருக்கடிகளைப் புறந்தள்ளி நல்ல கூட்டம் கூடியது. வேறொரு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய கவிஞர் மு.மேத்தா இந் நிகழ்வைக் கேள்விப்பட்டு சிலம்பொலியார்க்குப் புகழவணக்கம் செலுத்த வந்தது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மின்னூர் சீனிவாசன், வேணு குணசேகரன், ஏர்வாடி இராதாகிருட்டிணன், அமுதா பாலகிருட்டிணன், இரவி தமிழ்வாணன்,பெரு.மதியழகன், தமிழமுதன், தமிழ்முதல்வன், முனைவர்…

பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாள்

  பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும் சித்திரை 7, 2050 சனி 20.04.2019 மாலை 6.00 இலண்டன் சித்திரை 8, 2050 ஞாயிறு 21.04.2019 மாலை 5.00 இலெசிசுடர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரித்தானியா

கருத்தில் வாழும் கவிஞர் கந்தர்வன்

சித்திரை 13, 2050 வெள்ளி 26.04.2019 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம் கீழ மாடவீதி, மயிலாப்பூர்,சென்னை 600 004.   கருத்தில் வாழும் கவிஞர்கள் நிகழ்வு 16 அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் மு.முருகேசு முன்னிலை:  இலக்கிய வீதி இனியவன் தலைமை: வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன் சிறப்புரை: கவிஞர் தங்கம் மூர்த்தி பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர்  இலக்கியவீதி  அமைப்பு  திரு கிருட்டிணா இனிப்பகம்  

கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 முடிவுகள்

காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்க் குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட நான்காவது ஆண்டு கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 (வள்ளுவராண்டு 2050)  முடிவுகள் முதலாவது பரிசு :  ‘பொறி’  : த. இராசராசேசுவரி (குப்பிழான் -இலங்கை) – 10000 உரூ.  சான்றிதழ்.  இரண்டாவது பரிசு :  ‘மறந்திட்டமா” : வி. நிசாந்தன் (இலங்கை) – 7500 உரூ.  சான்றிதழ்.  மூன்றாவது பரிசு : ‘புலம்பெயர் பறவைகள்’ : கேசாயினி எட்மண்டு  (மட்டக்களப்பு – இலங்கை) – 5000 உரூ.  சான்றிதழ்.    நடுவர் பரிசு…

இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா

சித்திரை முதல் நாள், 2050 14-4-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00  ஏவி.எம். இராசேசுவரி கல்யாண மண்டபம்  இராதாகிருட்டிணன் சாலை, சென்னை -4 இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா ஆதி இலட்சுமணன் நினைவுப் பரிசு பெறுநர் : ஒளவை நடராசன் சிறந்த நூல் பரிசு பெறுநர்: திரு நல்லி குப்புசாமி திரு வெ.இறையன்பு இ.ஆ.ப. சிறந்த கதைக்கான பரிசு பெறுநர் : திரு சி.முருகேசு பாபு சிறப்புரை : திருமதி விசாலாட்சி சுப்பிரமணியன்– கலைஞரின் புதினங்கள்

மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2019, சென்னை

சித்திரை 02, 2050  செவ்வாய்க் கிழமை16.04.2019 இராணி சீதை அரங்கம் 603, அண்ணாசாலை, சென்னை 600 006 விருதாளர்கள்  : வெளி இரங்கராசன்,யூமா வாசுகி தொடர்பிற்கு – 98843 96054