கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைப்போட்டி 2018

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைப்போட்டி 2018    விதிகள்:  1200 சொற்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே அனுப்ப வேண்டும். போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுகதை இதற்கு முன் அச்சிதழிலோ இணையத்தளத்திலோ வெளியாகவில்லை என்றும் போட்டி முடிவுகள் வரும் வரை வெளியீட்டிற்காக எதற்கும் அனுப்பப் போவதில்லை என்றும் உறுதி மொழி அளித்தல் வேண்டும். அனுப்பப்படும் சிறுகதை சொந்தப்படைப்பு என்று மின்னஞ்சல்வழி உறுதிமொழி அனுப்ப வேண்டும். சிறுகதை பாமினி எழுத்துருவில் அல்லது சீருரு (பானிகோடு) எழுத்துருவில் மட்டுமே அனுப்ப வேண்டும்….

புலமைத் தென்றல் பொன்.சுந்தரராசுவிற்குப் பாராட்டு

  கார்த்திகை 23  ஞாயிற்றுக்கிழமை 09.12.2018 மாலை 5.00 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை ‘இப்படியும் ஒரு பிழைப்பு’ நூல் வெளியீடும் எழுத்தாளர் புலமைத் தென்றல் பொன்.சுந்தரராசுவிற்குப் பாராட்டும் தலைமை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்   புலவர் இளஞ்செழியன், தலைவர், உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை

அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி! – இரவிக்குமார்

அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி! தமிழறிஞர் அ.அ.மணவாளன் (ஆவணி 21, 1936 / 06.09.1935 – கார்த்திகை 14, 2049 / 30.11.2018)  தமிழறிஞரும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மேனாள் தலைவரும் (1989-1996) சரசுவதி சம்மான் விருது பெற்றவருமான பேராசிரியர் அ.அ.மணவாளன் நேற்று (கார்த்திகை 14, 2049 / நவம்பர் 30) மறைந்தார். அண்மைக் காலமாக உடல் நலிவுற்று மருத்துவம் பெற்று வந்த அவர் பண்டுவம் பலனளிக்காமல் 30.11.2018 அன்று இரவு 8 மணிக்குக் காலமானார். அவருக்குத்  திருமதி சரசுவதி என்ற மனைவியும்,…

கனடாக் காவியம் – நூல் வெளியீடு

கார்த்திகை 23, 2049 / 09.12.2018 பிற்பகல் 2.00 சுகார்பரோ SCARBOROUGH கனடாக் காவியம் – நூல் வெளியீடு நூலாசிரியர்: தீவகம் வே.இராசலிங்கம்  

குவிகம் இல்லம்: அளவலாவல்

கார்த்திகை 16, 2049 / திசம்பர் 02, 2018 முற்பகல் 11.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவலாவல் ஒளிப்படக்கலைஞர் எழுத்தாளர் ‘கிளிக்கு’  இரவி திருவாட்டி இரவிச்சந்திரன் தொடர்பிற்கு : 97910 69435, 89396 04745   இல்லம் அடைய

சப்பான் தமிழ்ச்சங்கம் : தமிழர் திருநாள் தி.பி. 2050 / கி.பி. 2019

தை 26, 2050   2019ஆம் வருடம் பிப்ரவரி 9 நேரம்:-11மணி முதல் 6 மணி வரை கொமட்சுகவா சகுரா அரங்கம் சப்பான் தமிழ்ச்சங்கம் தமிழர் திருநாள் அனைவருக்கும் அன்புநிறைந்த இனிய வணக்கம்! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 26, 2050 /   2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 9ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச் சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம். நம் மொழி, பண்பாடு, வாழ்வியல் சார்ந்த தமிழியல் கூறுகளை…

இலங்கைக் கல்வி மேம்பாட்டு அரங்கம்(ஐ.இ.) கருத்தரங்கு

மார்கழி 21, 2049  சனிக்கிழமை 05.01.2019 பிற்பகல் 2.00-5.00 உயர்வாசற் குன்று முருகன் ஆலயம் தலைமை: பேரா.நடராசா சிரீ கந்தராசா இலங்கைக் கல்வி மேம்பாட்டு அரங்கம்(ஐ.இ.) கருத்தரங்கு கருப்பொருள்:  இலங்கை வடமாகாணக்கல்வி நிலை தொடர்பிற்கு: சச்சிதானந்தன், தலைவர் – 07788 196426 சிவலிங்கம், செயலாளர் – 07984 079371 திருவாட்டி தேவநாதன், பொருளாளர் – 07973 287038

புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு, சென்னை

கார்த்திகை 14, 2049 வெள்ளி  30.11.2018 பிற்பகல் 3.00 பவளவிழா கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு பொழிஞர்:  கவிஞர் அ.வெண்ணிலா தமிழ் இலக்கியத்துறை சென்னைப்பல்கலைக்கழகம்

கவிஞர் முருகேசிற்கு அரசின் ‘நூலக ஆர்வலர்’ விருது

கவிஞர் முருகேசிற்குத் தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் ‘நூலக ஆர்வலர் 2018’ விருது வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் கடந்த ஏழாண்டுகளாகச் சிறப்பான முறையில் நூலக வளர்ச்சிக்கு உறுதுணையாக பல்வேறு செயல்பாடுகளைச் செய்தமைக்காக நூலக வாசகர் வட்டம் சார்பில் அதன் தலைவர் கவிஞர் மு.முருகேசிற்குத் தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில்‘நூலக ஆர்வலர் விருது – 2018’ வழங்கப்பட்டது. தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் நூலக வளர்ச்சிக்காகச் சிறந்த முறையில் செயல்படும் நூலக வாசகர்…

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் – 6 ஆவது கூட்டம்

கார்த்திகை 13, 2049 / வியாழக்கிழமை / 29.11.2018 மாலை 5.45 கிளை நூலகம், 7 இராகவன் குடியிருப்பு 3 ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 6 ஆவது கூட்டம் தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள் தொடர் உரை: முனைவர் வ.வெ.சு (காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து வருகிற நேர் தெரு; அசோக்நகர் நோக்கி வரவேண்டும்) பேசுவோர் குறிப்பு : விவேகானந்தர் கல்லூரியின் முதல்வராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இலக்கியப் பேச்சாளர்….

தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் சூசையப்பர்  கல்லூரி-இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இலக்கியங்களை இழிவு படுத்தும் நோக்கில் சூசையப்பர்  கல்லூரி திருச்சிராப்பள்ளியில் உள்ள  தூய சூசையப்பர் கல்லூரி, வரும் திசம்பர் 6, 7 நாள்களில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்திருந்தது. கருத்தரங்கம் நடத்துவது இதழியல் துறை. தமிழ் முதல் இதழான சுதேசமித்திரன் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது 1882இல். இதழ்களில் இடம் பெறும் தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தினால் தமிழின் இதழ்கள் அறிமுகத்திற்கு – 1882 இற்கு – முந்தைய இலக்கியங்கள் பொருண்மையில் அடங்கா.  ‘பெண்கள் குறித்த நிறை குறைகள்’ எனப் பொதுவான தலைப்புகளாக இருப்பின் நடுநிலை ஆய்வாகக் கருதலாம்….

மாவீரர் நாள் வணக்கமும் உறுதிமொழியும்

மாவீரர் நாள் வணக்கம் தாய்மண் காக்க தம்முயிர் நீத்த மாவீரர்களை வணங்கிப் போற்றுவோம்! விடுதலைப்போரிலும் இன அழிப்புப் படுகொலைகளிலும் உயிர்நீத்த மக்களும் மாவீரர்களே! அவர்களையும் தலைவணங்கிப் போற்றுவோம்! அவர்கள் கனவை நனவாக்குவதே உண்மை வணக்கம் என்பதால் அவர்களின் கனவை நனவாக்குவோம்!   மாவீரர் நாள் உறுதிமொழி   “மொழியாகி, எங்கள் மூச்சாகி – நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடு இங்கு துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம் தமிழீழப் போரில்…