உதவி கேட்கும் முன்னாள் போராளி அன்பரசன் என்னும் கிருபாகரன் செல்லத்துரை

அன்புடையீர் வணக்கம்.  அன்பரசன் என்னும் முன்னாள் போராளி எழுதியுள்ள  மடலைப் படிக்கவும்.  இவர் 2016 மார்ச்சு மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்தமாதிரி சென்ற கிழமை இவர் ஒரு   நேர்ச்சியில்(வாகன விபத்தில்) சிக்கி யாழ்ப்பாணம் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  மிதிவண்டியில் சென்றுகொண்டு இருந்த இவரை எதிரே வந்த  ஊர்தி  மோதியுள்ளது. சென்ற சனிக்கிழமை அவருக்கு அறுவை  மருத்துவம் செய்யப்பட்டது. எனக்குக் காலும் கையும் இருக்கிறது நான் உழைத்து முன்னேறுவேன் எனச் சொல்லிவந்த அவருக்கு இந்த நேர்ச்சி/விபத்து இடியாக இறங்கியுள்ளது….

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தனித்தன்மையைக் காக்க இணையுமாறு வேண்டுகோள்!

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தனித்தன்மையைக் காக்க இணையுமாறு வேண்டுகோள்! அன்புடையீர், வணக்கம். தமிழ்நாட்டில்(சென்னையில்) இயங்கும் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தைத் திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும்  முயற்சியில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை இறங்கியுள்ளதை அறிவீர்கள்.   தமிழ்வளர்ச்சிப்பணிகளையும் ஆய்வுப்பணிகளையும் முற்றிலும்  நிறுத்துவதற்கான முயற்சி இது. இதனை முறியடிக்கும் வகையில் வரும் ஞாயிறு ஆடி 07, 2048 / 23.07.207 அன்று  முற்பகல் சென்னையில் தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள், அனைத்திந்தியத் தமிழ்ப்பேரவை ஆகிய உறுப்பு அமைப்புகள் சார்பாகக் கூட்டம் நடத்த உள்ளோம். இதில்…

கதிராமங்கலம் கதறல் – ஆவணப்படம் : இணையத்தளத்தில் காணலாம்

கதிராமங்கலம் கதறல் – ஆவணப்படம் இணையத்தளத்தில் காணலாம்   காவிரிப்படுகையின் கதிராமங்கலத்தில் இந்திய அரசின் எண்ணெய்-எரிவளிக் கழகத்துக்காக தமிழ்நாடு காவல்துறை பல்லாயிரக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தது நாமறிந்த செய்தி!   அங்கு நடந்தது என்ன என்பதையும், காவிரிப்படுகையில் எ.எ.(ஓ.என்.ஜி.சி.) நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பல்வேறு நேர்காணல்கள் மற்றும் செய்திகளுடன் தொகுத்து, “கதிராமங்கலம் கதறல்” என்ற புதிய ஆவணப்படத்தை பன்மைவெளி வெளியீட்டகம் உருவாக்கியது. ஏற்கெனவே, கடந்த 2016ஆம் ஆண்டு சனவரியில் தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆவணப்படுத்தும் முதல் ஆவணப்படமான “மொழிப்போர்…

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா: பேராளர் கட்டணமும் புரவலர் நன்கொடையும்

இணையத்தமிழார்வலர்களுக்கு, வணக்கம்.      மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் உலகத்தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (கல்வியியல், தொழில் நுட்பப்பிரிவு) உலகத் தமிழ் இணைய மாநாட்டை ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய மூன்றுநாள் கோலாலம்பூரில் நடத்த வுள்ளது. தமிழ்க்கணிமைஆய்வு தொடர்பாகக் கருத்தரங்கம், பயிலரங்கங்கள் நடைபெறவுள்ளன.    தமிழறிஞர்கள், தமிழ்க் கணிமை வல்லுநர்கள், பேராசிரியர்கள்,ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் அனைவரும் உலகளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.   கட்டுரை வர  வேண்டிய நாள் : ஆனி 31, 2048…

திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளியின் 27 ஆம் ஆண்டு விழா

  பேரன்புடையீர்! வணக்கம், வருக! (திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளி) திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளி இராசாராம் தெரு, அரங்கநாதபுரம், மேடவாக்கம், சென்னை-100. 27 ஆம் ஆண்டு விழா திருவள்ளுவர் சிலை திறப்பு : உ.சகாயம், இ.ஆ.ப.   பள்ளியின் நூலகத் திறப்பு: திருவாட்டி இந்துமதி வசந்தகுமார்   மேல்கட்டடத் திறப்பு:  எழுத்தாளர் அசயன் பாலா கணிணிமையத் திறப்பு:  திரு.ச.அரங்கநாதன் சான்றோர்களின் வாழ்த்துரைகளும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. சிறப்புமிகு விழாவிற்குத் தாங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். இங்ஙனம்: ஆசிரியர்கள் – மாணவர்கள்….

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திருச்சிராப்பள்ளி.

  தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திருச்சிராப்பள்ளி.   ஆனி/ஆடவை 31, 2048 / சூலை 15, 2017 காலை 9.45 முதல் இரவு 7.30 வரை தூய வளனார் கல்லூரிக்குமுகாய மன்றம், திருச்சிராப்பள்ளி

கருணாகரன் நினைவுத் திருக்குறள் நூலகத்தின் வெள்ளி விழா, சென்னை

ஆனி 27, 2048 / சூலை 11, 2017 காலை 7.00- காலை 9.00 கருணாகரன் நினைவுத் திருக்குறள் நூலகத்தின் வெள்ளி விழா, சென்னை   நினைவில் வாழும் பொறிஞர் கருணாகரன் பாற்கரன் 53 ஆவது பிறந்தநாள் குறளகம் தொகுதி 100, மனை 4374 5ஆம்  தெரு, 3ஆம் முதன்மைச்சாலை, அறிஞர் அண்ணா நகர், சென்னை 600 040

திலகவதியார் திருவருள் ஆதீனம் : 4ஆம் ஆண்டு திருமுறை மாநாடு

ஆனி 31 & 32, 2048 / சூலை 15 & 16, 2017 திலகவதியார் திருவருள் ஆதீனம் திருமுறை மாநாட்டுக் குழு 4ஆம் ஆண்டு திருமுறை மாநாடு நகர் மன்றம், புதுக்கோட்டை 622001

‘செம்மொழியின் செழுமைக்குத் திரைத்துறையின் பங்கு’ -இலக்கியவீதி நிகழ்வு

அன்புடையீர்! வணக்கம் . இவ்வாண்டு  இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டுத் தொடக்க விழா என்பதைப் பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   இலக்கியவீதியும்  சிரீ கிருட்டிணா  இனிப்புகள் நிறுவனமும் இணைந்து நடத்தும்  ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ என்கிற தொடரின்,  இந்த ஆண்டுக்கான ஆறாம்   நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.   ஆனி 27, 2048 / 11.07.2017. செவ்வாயன்று மாலை 06.30 மணிக்கு மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ‘செம்மொழியின்  செழுமைக்குத் திரைத்துறையின் பங்கு’ என்கிற நிகழ்ச்சி நடைபெறுகிறது. –   வாழ்த்துரை :…

4 நாள் கல்வெட்டுப் படிப்புப் பயிற்சி – தஞ்சாவூர்

தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சை 4 நாள் கல்வெட்டுப் படிப்புப்  பயிற்சி ஆடி 5-8, 2048 / சூலை 18 – 21 கங்கை கொண்ட சோழபுரம்                                                                          இவ்வாண்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் 2017 ஆம்…

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா:ஆய்வுச் சுருக்க நாள் நீட்டிப்பு

  உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு, மலேசியா உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாளில் நடைபெற உள்ள உலகத்தமிழ் இணைய மாநாட்டிற்கான ஆய்வுச் சுருக்கம் அனுப்பும் இறுதி நாள்  ஆனி 13, 2048 /30  சூன் 30, 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளோர்  விரைவாக அனுப்ப வேண்டப்படுகின்றனர். கட்டுரை வரப் பெற்ற 3 நாளில் ஏற்பும் அறிவிக்கப்பெறும். முழுமையான கட்டுரை வர  வேண்டிய நாள் :…

வவுனியாவில் இலக்கிய விழா

  ஆடி 21, 2048 ஞாயிறு ஆகத்து 06, 2017 வவுனியாவில் இலக்கிய விழா தமிழ் விருட்சம் சமூக அமைப்பு செல்லமுத்து வெளியீட்டகம் இனிய நந்தவனம் பதிப்பகம்