‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர் நிகழ்ச்சி, சென்னை
அன்புடையீர், வணக்கம் . இலக்கியவீதியும் கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும் ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ என்கிற தொடர் நிகழ்ச்சி வைகாசி 30, 2048 செவ்வாய் / 13.06.2017. செம்மொழி செழுமைக்குத் தமிழிசையின் பங்கு தலைமை : தாமரைத்திரு நல்லி குப்புசாமி முன்னிலை : இலக்கியவீதி இனியவன் சிறப்புரை : கலைமாமணி சாரதா நம்பி ஆரூரன் அன்னம் விருது பெறுபவர் : இசைக் கலைஞர் தி. கலைமகன் நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி என்றென்றும் அன்புடன் – இலக்கியவீதி…
வேதவல்லி அங்கயற்கண்ணி அறக்கட்டளைப் பொழிவு, மதுரை
ஆனி 06, 2048 / சூன் 20, 2017 மாலை 4.00 முதுமுனைவர் இரா.மோகன் திருவள்ளுவர் மன்றம், மதுரை
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நடைபெறும் தொடர்போராட்டங்களில் அணிதிரள்க!
நிலமீட்டெடுப்பு – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகத் திங்களன்று நடைபெறும் தொடர்போராட்டங்களில் உணர்வுடன் பெருந்தொகையில் அணிதிரள்க! தமிழீழத் தாயகத்தில் சிறிலங்காப் படையினரால் பறிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக உண்மைநிலையினை அறிந்து கொள்வதற்காகவும் எமது மக்கள் நடாத்தி வரும் தொடர் போராட்டங்களுக்குத் தோழமை தெரிவித்து புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு கவனயீர்ப்பு போராட்டங்களில் மக்களை அணிதிரள தலைமையர் வி. உருத்ரகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை வைகாசி 29, 2048…
திருவள்ளுவர் பிறந்த நாளை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மாற்ற வேண்டா! – மறைமலை இலக்குவனார்
தமிழர் நாகரிகம் தமிழர் பண்பாடு குறித்த தமிழ்ச்சான்றோர் வகுத்த முடிவுகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மாற்ற வேண்டா! கடவுள் வழிபாட்டில் ஊறிய நாம் பல்வேறு வடிவங்களைக் கற்பித்து வழிபடுகிறோம். ஓராற்றல் அஃதே பேராற்றல், அதற்கு வடிவம் இல்லை, அடியும் இல்லை, முடியும் இல்லை எனத் தெரிந்தும் முருகன் என்றும் கண்ணன் என்றும் சிவன் என்றும் திருமால் என்றும் ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரம் திருநாமம் நாம் வழங்கிக் கொண்டாடுகிறோம். இஃது நம்பிக்கை. இங்கே ஆராய்ச்சிக்கு இடமில்லை. பிறந்தநாள் கொண்டாடுகிறோம். யாருக்கு? ஆதியும் அந்தமும்…
அவதூறு பரப்புவதை ஆளுநர் கிரண் பேடி நிறுத்துக! – முதல்வர் வி.நாராயணசாமி
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதை ஆளுநர் கிரண் பேடி நிறுத்துக! புதுச்சேரி: அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதைப் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என, முதல்வர் வி.நாராயணசாமி எச்சரித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் அவர் ம.சே.கு.(Centac) மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது: முந்தைய ஆண்டுகளில் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு இட ஒதுக்கீட்டு முறை இல்லை. தற்போது இந்த அரசின் விடா முயற்சியால் 50 விழுக்காடு இட…
தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு
செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் எசுஆர்எம் பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும், தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 7-ஆம் ஆண்டு (2017-2018) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கைகள் தொடங்கிவிட்டன. சூன் 2017-இல் வகுப்புகள் தொடக்கம் பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமனை புகுவிழா முதலான வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு, நாட்பூசைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும்….
தமிழர்களின் சிக்கல்களை அறியாதவர் வடக்கு ஆளுநர்!
தமிழர்களின் சிக்கல்களை அறியாதவர் வடக்கு ஆளுநர்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு! வடக்குமாகாண ஆளுநர் தமிழ் மொழியைப் பேச மட்டும் தெரிந்து கொண்டுள்ளாரே தவிர, தமிழர்களின் சிக்கல்கள் தொடர்பான உண்மைகளைத் தெரிந்து கொள்ளாதவராக இருக்கிறார். இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் இணைப்பாளர் இலீலாதேவி ஆனந்த நடராசா குற்றம்சாட்டினார். கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த பிப்பிரவரி மாதம் 20ஆம் நாள் முதல் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை 100…
பூவுலகு: சுற்றுச்சூழலுக்கான தமிழின் முதல் செயலி – மின்னிதழ்
பூவுலகு: சுற்றுச்சூழலுக்கான தமிழின் முதல் செயலி – மின்னிதழ் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை திணை அடிப்படைகளில் கட்டுரைகள் சூழலியல் ஒளிப்படக்கட்டுரை சூழலியல் நிகழ்வுகள் பூவுலகின் நண்பர்கள் யார்? சுற்றுச்சூழல் இணைப்புகள் அறிமுக எழுத்தாளர் படைப்புகள் சூழலியல் நூல்கள் அறிமுகம் சூழல் இன்று பூவுலகின் நண்பன் பூவுலகு நூல் அங்காடி பூவுலகு விலையில்லா நூல்கள் சூழலியல் நூல்கள் அறிமுகம் சுற்றுச்சூழல் திரைப்படம் பூவுலகு காணொளிகள் பூவு – குழந்தைகளுக்கான சூழலியல் சூழலியல் கலை, இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல் சூழலியல் செவ்வி சித்த மருத்துவ சூழலியல் நதிகளைத் தொலைத்தோம் மரங்களின் நிழலில் வாழ்வோம் சூழலியல்-தத்துவம்,கொள்கை,அறிக்கைகள் சூழலியல் சொல் நிலைத்துவமான, கவித்துவமான படைப்புகளுடன் பூவுலகு மின்னிதழ் இந்த இணைப்பில் சென்று உங்கள் மொபைலில் செயலியை தரவிறக்கம் செய்யுங்கள் www.poovulagu.in…
உலகலாவிய சிறுகதைப் போட்டி
பேரன்புடையீர், வணக்கம். மலேசியா நாட்டில் உலகலாவிய சிறுகதைப் போட்டி! தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017 மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். இவ் உலகம் தழுவிய சிறுகதைப் போட்டியின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை…
இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி 29ஆம் ஆண்டாக நடத்தப்படவுள்ளது. ஆய்வுநூல்கள், மொழிபெயர்ப்பு, புதினங்கள், சிறுகதை, சிறார் நூல்கள், கவிதை, கட்டுரை, குறும்படம், ஆவணப்படம் என ஒன்பது பிரிவுகளில் இரண்டு சமப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. கவிதை, கட்டுரை நூல்கள், 2016, 2017 இல் வெளிவந்தவையாக இருக்கவேண்டும். படங்கள் 2016, 2017 இல் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும். மற்ற வகைகள் 2013க்குப் பின் வெளிவந்திருக்க வேண்டும். கையெழுத்துப்படிகளும் ஏற்றுக்கொள்ளப்படும். 2012க்குப் பிறகு இப்போட்டிகளில் ஏற்கெனவே பரிசு பெற்றவர்கள்…
பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’ வேதனையுடன் விடை பெறுகிறது! – சு.குமணராசன்
பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’ வேதனையுடன் விடை பெறுகிறது! அன்புருவான எம் இனிய தமிழ் உறவுகளுக்கு, அன்பான வணக்கம். வாழ்த்துகள். ‘தமிழ் இலெமுரியா’ தன் தளிர் நடைப் பயணத்தில் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து இன்று பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. எண்ணிப் பார்க்கையில் இதயம் பூத்துக் குலுங்குகின்றது. செய்தியும் செயலும் இனிக்கின்றது. அன்புடை அறம், போருடைப் புறம், ஈரடி அறிவு, நாலடி நலம், எட்டுத் தொகைக் காட்டும் கட்டுக்கடங்காக் கருத்துக் களஞ்சியம், பத்துப்பாட்டின் பரந்த நோக்கு என உலகையே வியக்க வைக்கும்…
பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு, மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா
பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு ஆகத்து 2017 மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா அன்புடையீர், வணக்கம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், மற்றும் பல தமிழ் அமைப்புகளோடு இணைந்து, வாசிங்டன் வட்டாரத்தில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாடு, இந்த ஆண்டு ஆகத்து மாதம் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டை ஒட்டி, குறுந்தொகை சார்ந்த கட்டுரைகள் அடங்கிய மலர் ஒன்று வெளியிடப்படும். இம் மலரில் வெளியிடுவதற்கு, தமிழறிஞர்களிடமிருந்து குறுந்தொகை பற்றிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தங்கள் கட்டுரைகளை ஆனி 16 / சூன் 30, 2017 நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகளுக்கான விதிமுறைகள்; அனுப்பப்படும் படைப்பானது, ‘குறுந்தொகை’ சார்ந்தோ குறுந்தொகையில் இடம்…
