மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசியக் கல்வி நாள்

மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசியக் கல்வி நாள் தேவகோட்டை:  தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசியக் கல்வி நாள் விழா நடைபெற்றது. அனைவரும் ஏதாவது  பயிர்த்தொழிலில் ஈடுபட தலைமையர் பேபி இராணி  அறிவுறுத்தினார்.   விழாவிற்கு வந்தவர்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வரவேற்றார். ஓய்வு பெற்ற நகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.   தனியார்  வேளாண் கல்லூரித் தலைமையர்(டீன்) பேபிஇராணி தலைமை தாங்கினார். அவர்…

செல்வி ப.இரா.நிகாரிகாவின் இசைப்பேழை வெளியீடு, சென்னை

   மரு.இராசுகுமார்-சுவர்ணசிரீயின் திருமகளும் முனைவர் வை.பழனிச்சாமி  இ.ஆ.ப.(நி) – மணிமேகலை, திரு பழனியப்பன்-முத்துராதா ஆகியோரின் அன்புப்பெயர்த்தியுமான 7-ஆம்வகுப்பு பயிலும் செல்வி ப.இரா.நிகாரிகாவின் ‘அழகு தமிழ் முருகா‘ என்னும் இறைப்பாடல்கள் ஒலிப்பேழை, சென்னை உருசியக் கலை-பண்பாட்டு மையத்தில் ஐப்பசி 20,2047 / நவம்பர் 05,2016  மாலை வெளியிடப்பட்டது. இசையறிஞர் பாலமுரளிகிருட்டிணா ஒலிப்பேழையை வெளியிடத் தமிழ்ப்புரவலர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார். திரு வை. பழனிச்சாமி இ..ஆ.ப., வரவேற்புரை யாற்றினார். நல்லி குப்புசாமி, இந்தியப் பண்பாட்டு உறவுக்குழு (ICCR), மண்டல இயக்குநர் திரு ஐயனார், மரு.சீர்காழி சிவசிதம்பரம், ஒலிப்பேழையின்…

வட்டு இந்து இளைஞர் சங்கத்தின் தீபாவளிக்கான சிறப்பளிப்புகள்

  வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் தீபாவளி நாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்குப் புத்தாடைகளும் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன..   எமது புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த பரஞ்சோதிஉலோகஞானம், தன் தந்தை பரஞ்சோதி (17.10.2016),  தங்கை இராசேசுவரி (16.10.2016) பிறந்த  நாள்களை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விழிப்புலனற்ற, சிறப்புத் தேவைக்குரிய இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்குச் சிறப்பு நண்பகல் உணவினை வழங்கி வைத்துள்ளதுடன். தீபாவளி  நாளினை முன்னிட்டு இல்ல மாணவர்களுக்கு  ஏறத்தாழ 1,13,000  உரூபா பெறுமதியான புத்தாடைகளையும் வட்டு…

மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி : திருமுருகாற்றுப்படை ஒப்பித்தல் போட்டி : மாணவர்களுக்குப் பாராட்டு

மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி :  திருமுருகாற்றுப்படை ஒப்பித்தல் போட்டி : மாணவர்களுக்குப் பாராட்டு    தேவகோட்டை: சௌபாக்கிய துருக்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற திருமுருகாற்றுப்படை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பாராட்டு விழா  நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை  வாசுகி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பரிசு பெற்ற மாணவர்களான திவ்விய பாரதி, அசய், பிரசித்து, கனிட்கா, முத்தையன், திவ்வியசிரீ, சத்தியா, அம்முசிரீ.மகாலெட்சுமி, அசய் பிரகாசு, பாக்கியலெட்சுமி, நந்தகுமார், இராசேசு, உமா மகேசுவரி,…

கல்வெட்டுகள் கருத்தரங்கம், கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழா

கல்வெட்டுகள் கருத்தரங்கம்,  கல்வெட்டில் திருக்குறள் பாகம் 3 நூல் வெளியீட்டு விழா எசு.எசு.எம். கல்லூரி வளாகம், குமாரபாளையம்  நாமக்கல் மாவட்டம் புரட்டாசி 06, 2047 / 22.09.2016 

தமிழ் உலகச் சந்திப்பு – ஒளிப்படங்கள்

காண்க : ‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்’ – சென்னையில் நடைபெற்ற தமிழ் உலகச் சந்திப்பு! [embpicasa id=”6336870438017678481″]

சிகாகோவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

சிகாகோவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா  பிறந்த நாள் விழா புலம் பெயர்ந்த நாட்டில் புத்துணர்வூட்டிய புதுமைப் புரட்சியாளர்கள் பிறந்தநாள்  செப்டம்பர் 18: தந்தை பெரியார், அறிவுச் சூரியன் அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள்களைத்  ‘தன்மானஎழுச்சி’ நாளென்று கொண்டாடினர் சிகாகோநகர் வாழ் தமிழர்கள்..   சிகாகோ பெருநகர் பெரியார் பன்னாட்டமைப்புச் செயலாளர் திருவாட்டி அருள்செல்வி வீரமணி தலைமையில், உதவி இயக்குநர் திரு.வ.ச.பாபு, சிந்தனைச் சிறப்பு உரையாளர் முனைவர் திரு.பிரான்சி சு.சவரிமுத்து ஆகியோர் முன்னிலையில் இந்த நாள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.   பல்துறை…

மாணிக்கவாசகம் பள்ளியில், ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கும் பங்கேற்றோருக்கும் பாராட்டு

மாணிக்கவாசகம் பள்ளியில், ஓவியப்போட்டியில்  வென்றவர்களுக்கும் பங்கேற்றோருக்கும் பாராட்டு தேவகோட்டை,  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  வாணாள் காப்பீட்டுக் கழகம் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவிற்கு வந்தவர்களைப் பள்ளி மாணவர்  இராசேசு வரவேற்றார். பள்ளித்தலைமை ஆசிரியர்  இலெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  வாணாள் காப்பீட்டுக்கழகம்(எல்.ஐ.சி.) சார்பாக நடைபெற்ற ஓவிய போட்டிகளில் பங்கு பெற்று முதலிடம் பிடித்த 3 ஆம் வகுப்பு மாணவர் பாலமுருகன்,  மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர் கிசோர்குமார்…

பௌத்த மயமாகும் தமிழர் தாயகம்-ஐ.நா.மன்றத்தில் அம்பலப்படுத்திய பி.த.பேரவை

பௌத்த மயமாகும் தமிழர் தாயகம்   ஐ. நா. சிறப்பு நிகழ்வில் மறைக்கப்பட்ட உண்மைகளை மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம் அனைவர் கவனத்தையும் ஈர்த்த பிரித்தானியத் தமிழர் பேரவை   செனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைக் கழகத்தின் 33 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள்,  பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானியத் தமிழர் பேரவை  அளித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய “நல்லாட்சி” அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது.    நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள்…

கவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்கியப் பரிசு

கவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக்   குழந்தை இலக்கியப் பரிசு  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ‘கு.சின்னப்பபாரதி குழந்தை இலக்கியப் பரிசு’ வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய குழந்தைகளுக்கான சிறுகதை நூலுக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. 2015- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (ஆவணி 09, 2047 /  செட்டம்பர் 25)  தேனியில் நடைபெற்றது;…