தேவகோட்டையில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவி சக்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கண் தானம் ஏ.சி. அறக்கட்டளை பொறுப்பாளர் அருணாச்சலம் கண்தானம் குறித்துப் பேசுகையில், “இந்தியக் கண் வங்கிகளின் கூட்டமைப்பின் அறிக்கைக்கிணங்க நமது நாட்டில் நூறாயிரக்கணக்கானவர்கள் கருவிழி குறைபாட்டால் பார்வையற்றவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் அகவையினர். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கில்தான் கண்தானம் பெறப்படுகிறது. நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற…
தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது.
தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் செயல்படும் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். இவரது எழுத்து முயற்சியில் இதுவரை 15 கவிதை நூல்கள், 6 கட்டுரை நூல்கள், 6 தொகுப்பு நூல்கள், ஒரு சிறுகதை நூல், 100-க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. வந்தவாசி நூலக…
கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் இலக்குவனார் நினைவரங்கப்படங்கள்
ஆவணி 21, 2047 / செட்டம்பர் 06, 2016 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6331751115871356225″]
துபாய் (இ)ரேஃகா இசை-நடனப் பயிற்சிப் பள்ளியில் , கோடைக் காலச் சிறப்புப் பயிற்சி முகாம்
துபாய் : துபாய் (இ)ரேஃகா இசை-நடனப் பயிற்சிப் பள்ளியில் , கோடைக் காலச் சிறப்புப் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளின் இசை நடன நிகழ்ச்சி கடந்த 2 ஆம் நாள் கல்ஃப் முன்முறைப் பள்ளியில் நடை பெற்றது. ,,சிறுவர் சிறுமிகள் ஆடல் பாடலுடன் இசைக்கருவிகளையும் வாசித்து வந்திருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்கள். மேலும் இங்கு தொடர்ச்சியாகப் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களில் சில பதிவிசை(கரோக்கி)யுடன் இணைந்து பாடல்களைப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள். மேலும் இந்தப் பள்ளியின் நடன ஆசிரியர்கள் ஐதர், மற்றும் …
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்ற நிகழ்வுப்படங்கள்
ஆவணி 19, 2047 / செட்டம்பர் 04, 2016 பிற்பகல் 3.00 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6326518922753393713″]
விசயலட்சுமி இளஞ்செழியன் மலர் வெளியீட்டுப் படங்கள்
ஆவணி 18, 2047 / செட்டம்பர் 03, 2016 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6326508811090817729″]
எதிர்காலத்திற்கான பாதை அமைப்பு அன்பளிப்பு
கிளிநொச்சி சிறப்புத் தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்புக்கு இலண்டனைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்பான எதிர்காலத்திற்கான பாதை(PATH TO THE FUTURE) வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாகப் பல கட்டங்களாக 326,815 உரூபாய் பெறுமதியான பொருட்கள்- நிதி முதலியன அன்பளிப்பு. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரம் பகுதியில் சிறப்புத் தேவைக்குரிய மாற்றுவலுவுடைய மற்றும் முற்றிலும் இயங்க முடியாத பிள்ளைகள் எனத் தொடக்கக்கட்டமாக 14 பிள்ளைகளுடன் இவ்வமைப்பு இயங்கி வருகின்றது. இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி இல்லப் பிள்ளைகளைப் பேணுவதில் பல இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும்…
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இரண்டு மிதிவண்டிகள் அன்பளிப்பு
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இரண்டு மிதிவண்டிகள் அன்பளிப்பு எமது புலம்பெயர் உறவான இலண்டன் மாநகரைச் சேர்ந்த சந்தியா, தன் 12 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு இரண்டு மாணவிகளுக்குப் புதிய மிதிவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளார். மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின் பரிந்துரையின் கீழ் வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்திடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்து வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்க முன்னாள் தலைவரும், கனடா கிளைச் சங்க முன்னாள் தலைவரும்…
தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம் :நிகழ்ச்சிப்படங்கள்
முனைவர் க.தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம் கி.இ.க. / ஒய்எம்சிஏ அரங்கில் முனைவர் பேராசிரியர் மறைமலைஇலக்குவனார் தலைமையில் நடைபெற்றது. பாவலர் பூங்குழலி பெருமாள் ஆய்வுரை நிகழ்த்தினார். செயலாளர் பக்தவத்சலம் வரவேற்புரை கூறினார். தமிழமல்லன் ஏற்புரை நிகழ்த்தினார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6318203804646403777″]
புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்ற நிகழ்ச்சிப் படங்கள், ஆக.2016
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6318205494196543281″]
கண்டியில் ‘தேசியத் தமிழ் மொழி நாள்’!
கண்டியில் ‘தேசியத் தமிழ் மொழி நாள்’! தேசியத் தமிழ் மொழி நாள் விழாவைக் கண்டி மாநகரில் கொண்டாடுவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய அளவில் காணப்படும் தமிழ் மொழி மூலமான கல்விக்கூடங்களுக்கிடையில் தமிழ் மொழி தொடர்பான போட்டிகள் வலய மாகாண அளவிலும் தேசிய அளவிலும் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசியத் தமிழ் மொழி நாளும் கண்டி மாநகரில் வெகு கோலாகலமாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தேசியத் தமிழ் மொழி நாள் விழா…
மாநிலக்கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பிறந்த நாள்
மாநிலக்கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன், ஆடி 17, 2047 / ஆகத்து 01, 2016, அன்று (01) தன் 64ஆவது பிறந்த நாளை ஆலய வழிபாட்டின் பின் நுவரெலியா நம்முயிர்காப்போம்(எசு..ஓ.எசு.) சிறார் ஊரில் சிறுவர்களுடன் கொண்டாடினார். (படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்)
