மொழி உரிமை மாநாட்டுச் செய்திகள்
பிற படங்களுக்குச் சொடுக்கிக் காண்க: http://thiru2050photos.blogspot.in/2015/09/blog-post_30.html தொன்மை மொழியான தமிழ் முதலான இந்தியாவின் பல்வேறு மொழிகளின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, பத்திரிக்கையாளரும், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கினைப்பாளருமான திரு. ஆழி செந்தில்நாதன் அரும்பெரும் முயற்சியாக, “மொழி உரிமை மாநாடு” சென்னையில் இரண்டு இடங்களில் இரு நாளாக (புரட்டாசி 02 & 03, 2046 / செப். 19 & 20, 2015) நடைபெற்றது, தமிழ் முதலான பல்வேறு மொழி உரிமைக்கான தீர்மானங்களை உருவாக்குவதற்காகப் பல்வேறு தமிழ் அறிஞர்களும், செயல்வீரர்களும் வல்லுநர்களும், இணைந்து…
தினத்தந்தி தமிழர்களின் சொத்து – தங்கர் பச்சான்
சி.பா.ஆதித்தனார் 111-வது பிறந்தநாள் மற்றும் இலக்கிய பரிசளிப்பு விழா நேற்று மாலை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு உரூ.2 இலட்சம் ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்காகப் பெற்ற தங்கர்பச்சான் ஏற்புரையாற்றினார். அப்பொழுது பின்வருமாறு தெரிவித்தார்: இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இலக்கியத் தரத்தை உயர்த்துவதற்காகத் தரப்படுகின்றன என்பதைவிட இலக்கியவாதிகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்காகவே தரப்படுவதாக உணர்கிறேன். திரைப்படத் துறையைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் என் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது இலக்கியத்தின் வழியாகத்தான். திரைப்படப் படைப்பாற்றலுக்காக எனக்கு…
தமிழனுக்குச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் – வெ. இராமசுப்பிரமணியன்
90 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழனுக்குச் சிறுதொழில், தன்முன்னேற்றம்பற்றிச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் என்று உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் புகழாரம் சூட்டினார். சி.பா.ஆதித்தனாரின் 111-ஆவது பிறந்தநாள் இலக்கியப் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் ஆற்றிய தலைமையுரை வருமாறு:- தமிழனின் அடையாளம் 73 ஆண்டுகளாகத் தமிழர்களின் அடையாளமாகவும், பத்திரிகைத் துறையில் அருந்திறல் புரிந்தும் ‘தினத்தந்தி’ வந்து கொண்டிருக்கிறது. ஒரு நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால் பொதுவாக அதற்கு நல்ல நேரம் இருக்க…
இனி என்ன செய்யப்போகிறோம் நாம்? – இனப் படுகொலைக்கு எதிரானவர்கள் கேள்வி!
இனி என்ன செய்யப்போகிறோம் நாம்? இனப் படுகொலைக்கு எதிரான செய்தியாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள் குழு கேள்வி! “தமிழரைக் காப்பாற்றத் தவறிய ஆற்றல்கள் இலங்கையைக் காப்பாற்றத் துடிப்பது ஏன்”? என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆவணி 27, 204613-09-2015 அன்று சென்னை, மயிலாப்பூர் நகரமேம்பாட்டுக்கட்டளை நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கலந்து கொண்ட இக் கருத்தரங்கத்தி்ல், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவையில் தனி ஈழம் அமையவும், இலங்கையின் மீது இனப்படுகொலை-போர்க்குற்றத்திற்கு எதிரான பன்னாட்டு விசாரணை…
வட அமெரிக்காவில் பெரியார் பிறந்த நாள் விழா
வட அமெரிக்காவில் வைக்கம் வீரர் தந்தை பெரியார் பிறந்த நாள் பெரு விழா பல்வேறு அமைப்புகள் பங்கு கொண்ட பயனுறு கருத்தரங்கம் பிரீமாண்டு, செப்.15 வட அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பிரீமாண்டு நகரில், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் 137-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, சமூக நீதிக் கருத் தரங்கமாக ஆவணி 26, 2046 /செப்டம்பர் 12-ஆம் நாள் சனிக்கிழமை வெகு சிறப்பாகக் கொண் டாடப்பட்டது. பெரியார் பன்னாட்டமைப்பு, அறிஞர் அம்பேத்கர் சீக்கியர் அமைப்பு, இந்திய அமெரிக்க முசுலீம் அமைப்பு, அம்பேத்கர்…
வ.உ.சி.விழா – ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்
ஆவணி 21, 2046 / செப்.07, 2015
வரலாற்றுக் கல்விக்கான கையேடாக ‘வடகரை’ புதினம்
வரலாற்றுக் கல்விக்கான கையேடாக ‘வடகரை’ புதினம் வெளிவந்துள்ளது – நூல் அறிமுகவிழாவில் எழுத்தாளர் இமையம் பேச்சு திருச்சி.செப்.07. ’உயிர் எழுத்து’ பதிப்பகத்தின் சார்பில் திருச்சியில் தமிழக வேளாண்மைத்துறை இயக்குநர் முனைவர் மு. இராசேந்திரன் இ.ஆ.ப.,எழுதிய ‘வடகரை- ஒரு வம்சத்தின் வரலாறு’ புதினம் அறிமுக விழா திருச்சி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்குத் தலைமையேற்ற எழுத்தாளர் இமையம் பேசும்போது, “ஒரு நல்ல நூல் என்பது அதனைப் படிக்கும் வாசகருக்கு, நாமும் இப்படி எழுத வேண்டுமென்கிற ஆசையைத் தூண்ட வேண்டும். இந்த ‘வடகரை’ நூலைப்…
நயினைத்தவம் மணிவிழா
நயினைத்தவம். அவர்களின் மணிவிழா சென்னை மேற்கு மாம்பலம் ஆனந்து சந்திரசேகரரங்கில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் ஆவணி 20, 2046 / செப்.09, 2015 காலை நடைபெற்றது. பெருங்கவிக்கோ வா.மு.சே.தலைமையில் கவிக்கொணடல் மா.செங்குட்டுவன், மேனாள் மாநகரத்தலைவர்(மேயர்) சா.கணேசன், மறைமலை இலக்குவனார் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். கனடாநாட்டுத்தமிழ் .எழுத்தாளர் நயினைத் தவம் ஏற்புரையாற்றினார். தமிழ்ப்பணிவா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார். கவிச்சிங்கம் கண்மதியன் நன்றிநவின்றார். – மறைமலை இலக்குவனார்
“இலட்சுமி என்னும் பயணி” – நூல் வெளியீட்டு விழா!
“இலட்சுமி என்னும் பயணி” – நூல் வெளியீட்டு விழா! மகளிர் ஆயம் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மனைவியுமான தோழர் இலட்சுமி எழுதிய “இலட்சுமி என்னும் பயணி” நூல் வெளியீட்டு விழா, சென்னையில் ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 காலை சென்னையில் கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. 1970களில் – இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலக் கட்டங்களில் பொது வாழ்வில் ஈடுபட்ட தோழர் இலட்சுமி தம்முடைய தொழிற்சங்கப்பணி, இயக்கப்பணி தொடர்பான பட்டறிவுகளை…
தொல்காப்பியர் சிலை உருவாக்க ஆய்வு
(சொடுக்கிப் பார்த்தால் பெரிதாகத் தெரியும்.) [embpicasa id=”6188742364614723745″] முதல் நான்கு படங்கள் முனைவர் முகிலை இராசபாண்டியன், இலக்குவனார் திருவள்ளுவன், செந்தமிழ்ச்சித்தன், அரிமா கந்தசாமி, ஆதித்தன் ஆகியோர் ஆவணி 5, 2046 / ஆக.22, 2015 அன்று பார்வையிட்ட பொழுது எடுக்கப்பெற்றவை. அதற்கு முந்தைய பார்வையில் தெரிவித்தவற்றுள் ஆறு நிறைவேற்றப்படாமல் இருந்தன. அவற்றைச் சரி செய்யுமாறு அப்பொழுது தெரிவிக்கப்பட்டது. மேலும் தலைமுடி வழித்துச் சீவப்பட்டதுபோல் அல்லாமல் சற்று எழுந்து வளைந்து செல்வதுபோல் இருக்க வேண்டும் என்று பேரா.முகிலை இராசபாண்டியன் தெரிவித்தார். அவ்வாறே இப்பொழுது அமைந்துள்ளது. முடிவுறும்…
மூளைச் சலவைக்கு உள்ளாகும் இந்தியர்கள்- மின்னஞ்சல் சிவா ஐயாத்துரை
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கத்தில்’சுவாசம் சாப்ட்’ விருதுகள் தொழிற்துறை சார்ந்த வல்லுநர்கள் 75 பேர்களுக்கு வழங்கப்பட்டன. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ‘சுவாசம் சாப்ட்டு’ தலைவர் கிருட்டிணன், செயல் அதிகாரி கார்த்திகேயன், நிதி அதிகாரி கணேசு, கோவிலுார் ஆதினம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமி, மரு. சுரேந்திரன், வித்யாகிரி பள்ளி முதல்வர் சுவாமிநாதன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராகப் பங்கேற்ற மின்னஞ்சலை(‘இ மெயிலை’)க் கண்டுபித்த சிவா ஐயாத்துரை, “வெளிநாட்டவரால் நாம் மூளைச் சலவை செய்யப்படுகிறோம்” என்றார். அவர் உரை வருமாறு:- …
அனைத்துலகப் போதிதருமர் மாநாடு – நிகழ்ச்சிப் படங்கள்
ஆசியவியல் நிறுவனம், சென்னை (Institute of Asian Studies, Chennai) சீயோன் பயிற்றகம், தென் கொரியா (Institute of Seon, South Korea) சாஓலின் கோயில், சீனா (Shaolin Temple, China) உலகப் போதிதருமர் பேரவை, சப்பான் (World Association of Bhodhidarma, Japan) ஞாலப் போதிதருமர் ஒன்றியப் பேரவை, ஆங்காங்கு (United Universe Bodhidharma Association, Hong Kong) புலம் பெயர்ந்த தமிழர்க்கான பன்னாட்டுப் பேரவை, மொரிசீயசு (International Association of Tamil Diaspora, Mauritius) இந்தியக் கலை-பண்பாட்டு உறவு பேரவை, புதுதில்லி…
