திருக்குறள் நாள்காட்டி வெளியீட்டு விழா – ஒளிப்படங்கள்

திருக்குறள் தென்றல் ஓமன் தங்கமணியின் திருக்குறள் நாள்காட்டி வெளியிடல், விருதுகள் வழங்கல் விழாவின் ஒளிப்படங்கள். பெரிதாகக் காணச் சொடுக்கவும்.

கவி ஓவியா இலக்கியமன்றம், திறனாய்வுத் திருவிழா – மன்னை பாசந்திக்குப் பாராட்டு

கவி ஓவியா இலக்கியமன்றம் திறனாய்வுத் திருவிழா “சிறுதுளியில் சிகரம்” நூலாசிரியர் மன்னை பாசந்திக்குச் சாகித்ய அகாதமியைச் சேர்ந்த முனைவர் இராமகுருநாதன்  பாராட்டிதழ்  வழங்கல்  நாள் :  ஐப்பசி 30, 2045 நவம்பர் 16, 2014 சென்னை

பதினெண்கீழ்க்கணக்குத் தேசியக்கருத்தரங்கம்

தாகூர்கலைக்கல்லூரியில் பதினெண்கீழ்க்கணக்கு தேசியக்கருத்தரங்கம் ஐப்பசி 13, 2045, அக்.30,2014 அன்றுநடைபெற்றது. முனைவர் செல்வம் தலைமையில் முனைவர் வச்சிரவேலு வரவேற்றுப் பேசினார். கல்லுாரி முதல்வர் முனைவர் பிச்சை மணி முன்னிலை வகித்தார். தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் கருத்தரங்க மலரை வெளியிட்டுச் சிறப்புரை நிகழ்த்தினார். திரளான மாணவர்களும் பேராசிரியர்களும் அதில் கலந்து கொண்டனர்.

‘இலக்கிய வீதி இனியவன்’ நூல் வெளியீட்டுப் படங்கள்

  இராணிமைந்தன் நூல் வெளியீடு   சென்னை யில் புரட்டாசி 26, 2045 / 12.10.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு எழுத்தாளர் இராணிமைந்தன் எழுதிய ‘இலக்கியவீதி  இனியவன்’ வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு நடைபெற்றது. உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரும் பங்கேற்கும் திருமண விழா போன்ற குடும்ப விழாவாக இலக்கிய   வீதி இனி்யவனின்  அன்பர்கள், படைப்பாளர்கள், சுற்றத்தினர், கம்பன் கழகத்தினர், என அனைவரும்  பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, கவிஞர் மலர்மகன் வரவேற்புரை யாற்றினார்.அருளாளர் இராம.வீரப்பன் தலைமையில் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் …

தேனிப் பகுதியில் ஈகைத்திருநாள் (பக்கிரீத்து) கொண்டாட்டம்

தேனிப் பகுதியில் ஈகைத்திருநாள் கொண்டாடப்பட்டது. தேவதானப்பட்டி பகுதியில் ஈகைத்திருநாளை முன்னிட்டுத் தத்தம் வசதிக்கேற்ப ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அறுத்துப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். பள்ளிவாசல்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தில் குள்ளப்புரம் பள்ளிவாசலிலும், செயமங்கலத்தில் செயமங்கலம் பள்ளிவாசலிலும், பொம்மிநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி பகுதிகளில் உள்ள இசுலாமியர்கள் ஈகைத்திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். இவை தவிர தமிழ்நாடு தவுஃகித்து சமாத்து அமைப்பினர் 7.30 மணிக்கே ஈகைத்திருநாளைக் கொண்டாடினார்கள். மற்ற பள்ளிவாசல்களில் 9.00 மணிமுதல் 9.30 மணிவரை ஈகைத்திருநாள் கொண்டாடினார்கள். ஈகைத்திருநாளை முன்னிட்டு அறுக்கப்படும் கால்நடைகளை…

ஐரோப்பியப் பண்டுவ மருத்துவக் கழகத்தின் மதிப்புமிகு உறுப்பினர் வீரப்பன்

   ஐரோப்பியப் பண்டுவ மருத்துவக் கழகம்(European Society of Intensive Care Medicine)  மரு. சிதம்பரம் வீரப்பன் அவர்களுக்கு  மதிப்புமிகு உறுப்பினர் (Honorary Member) எனும் விருதை நிகழாண்டு புரட்டாசி 11-15, 2045 / செப். 27 – அக்.1 நாள்களில் பார்சலோனா நகரில்  நிகழ்ந்த 27-ஆம் அனைத்துலக மாநாட்டில்,  வழங்கியது.  இதுகாறும் பதின்மூவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இவ்விருது, 4 ஆண்டுகள் கழித்து வழங்கப்பெறுவதும், இவ்விருதை வாங்கும் முதல் ஆசியர், இந்தியர், தமிழர் இவர்தாம் என்பதும் இச்சிறப்பைக்கூட்டுவன.   இக்கழகம் 7000 உறுப்பினர்களைக் கொண்டது;…

சிலம்பொலிச்செல்லப்பன் அவர்களின் 85 ஆம் பிறந்தநாள் விழா – இளங்கோ விருது வழங்கல்

 புரட்டாசி 5, 2045 / 21.09.2014 : தமிழறிஞர் சிலம்பொலிச்செல்லப்பன் அவர்களின் 85 ஆம் அகவை நிறைவை யொட்டிச், “சிலப்பதிகாரப் பெரு விழா’’ எனும் விழா சென்னை ஏ.வி.எம். இராசேசுவரி அரங்கில் நடைபெற்றது. காலையில், பிறந்த நாளை முன்னிட்டுச் சிலப்பதிகார அறக்கட்டளையை, தி.மு.க. பொதுச்செயலர்  பேராசிரியர் க.அன்பழகன்  தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, “இளங்கோ விருதினை’’ நீதியரசர் அரு.இலக்குமணன் அவர்கள் வழங்கினார். விருதுடன் ‘பூம்புகார் சிற்பி’ என்ற பட்டமும், ஓர் இலட்ச உரூபாய்க்கான பொற்கிழியும் வழங்கப்பட்டன….

ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா – ஒளிப்படங்கள்

சென்னையில் புரட்டாசி 11, 2045 / 27.09.2014  அன்று நடந்த   ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா, கவிஞர் கவிமுகில் நூல்கள் வெளியீட்டு விழா, கவியரங்கம் பல்வகை விருதுகள் வழங்கிய விழா  ஒளிப்படங்கள்   படங்களைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.    

உத்தமம் தமிழ்க்கணிமைப் பரிசு பெறும் த.சீனிவாசன்

செல்வா-குமரி அறக்கட்டளை வழங்கும் 2014 ஆம் ஆண்டிற்கான உத்தமம் தமிழ்க்கணிமைப் பரிசை திறமூல ஆர்வலர் திரு. த. சீனிவாசன் வென்றுள்ளார்.   இளைஞரான இவருக்கு நல்ல கணிநிரல்அறிவும் பட்டறிவும் இருப்பதுடன், நல்லஉள்ளமும், தமிழார்வமும், தன்னறிவைப் பகிரும் பேருள்ளமும் கொண்டுள்ளார். பல இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியாகவும்விளங்குகின்றார்.  ‘கணியம்’ என்னும் மின்னிதழில் ஏறத்தாழ இரண்டாண்டுகளாக நல்ல பங்களிப்புகள் செய்து வருகின்றார். இவையனைத்தும்   படைப்புப்பொதுமை (‘கிரியேட்டிவ் காமன்சு’) பகிர்வுரிமத்தின்கீழ் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளத்தக்கவை.  பார்க்கவும்: http://www.kaniyam.com/  இந்திய இலினக்ஃசு (Linux) பயனர் குழுவின் சென்னைக்கிளையின்தலைவராகவும் திரு த.சீனிவாசன் இருக்கின்றார். இவரது…

புதுச்சேரியில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்தக்திற்கான ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி தனித்தமிழ் இயக்கம், கலைஇலக்கியப் பெருமன்றம்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து  புரட்டாசி 4, 2045 / 20.09.2014புதுச்சேரியில் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியும் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டியும் ஆர்ப்பாட்டம் செய்தன.  கவிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் திரளான தமிழார்வலர்கள் பங்கேற்றனர்.