இலக்கியம் கூறும் தமிழர் இல்லறம் (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  14–  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  15 7. இல்லறம்   ‘இல்லறம்’ என்பது வீட்டிலிருந்து வாழும் அறநெறி என்னும் பொருளதாகும்.  இல்லற வாழ்வே மக்களை மாக்களினின்றும் வேறு பிரித்து உயர்த்துவதாகும்.  மக்களும் மாக்கள்போல் பசித்தபோது கிடைத்தனவற்றை உண்டு, உறக்கம் வந்தபோது உறங்கி, அவ்வப்போது பொருந்தியோருடன் விரும்பியஞான்று மணந்து, வேண்டாதஞான்று தணந்து நாளைக் கழித்த காலம் உண்டு.  மரங்களிலும் மலைப்புழைகளிலும் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்த காலம் அது.  நாளாக நாளாக அறிவு…

ஔவையார் 3 – இரா.இராகவையங்கார்

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 11. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார். : 12 3. ஔவையார் (தொடர்ச்சி) ஒரு காலத்தவரும் ஒரு தன்மையரும் ஆதல்பற்றி இவரது ஓருடற்பிறப்பு ஒருவழியான் வலிபெறுவதாகும். இப்பிறப்பையும் அதிகமான்பாலே பெரிதுமுறலாகும். அதுவும் அவன் பரிசில் நீட்டித்தபோது ஔவையார் அவனைச் சினந்து, அதிகமான், ‘தன்னறி யலன்கொல் என்னறி யலன்கொல்’ என்றது ஔவையார்க்கும் அவ்வதிகற்கும் உளதாகிய இவ்வுறவினையே குறிப்பாற் றெரித்துக் கூறப்பட்டதெனக் கொள்ளுதற்கும் இயைதலின் நீங்கும் என்க. இவ்வாறு கொள்ளுதலே பண்டுதொட்டு வழங்கும் உலகவழக்கிற்கும் செய்யுள்வழக்கிற்கும் இயைபுடைத்தாகும். ஔவையார் பெண்ணையாற்றங்…

இலக்கியம் கூறும் தமிழர் கல்வி (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  13 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  14 6. கல்வி பழந்தமிழ் நாட்டில் கல்வியின் சிறப்பை யாவரும் உணர்ந்திருந்தனர்.  கல்வியற்ற மக்களை விலங்குகளோ டொப்பவே கருதினர் என்பது, “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்  கற்றாரோடு ஏனை யவர் ”        ( குறள்-410) என்னும் வள்ளுவர் வாய்மொழியால் அறியலாகும்.  அரசரும் இவ் வுண்மை தெளிந்து தம் கடனாற்றினார் என்பது பின்வரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் தெளியலாகும். “ உற்றுழி உதவியும்…

ஒளவையார்:2 : ந. சஞ்சீவி

(ஒளவையார்:1: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 11 2. ஒளவையார் (தொடர்ச்சி) அதிகமான், அருளும் ஆண்மையும் ஒருங்கே வடிவெடுத்தாற்போன்று விளங்கிய கடையெழுவள்ளல்களுள் ஒருவனாய்த் திகழும் பெருமை பெற்றவன். தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அதிகமான் நாடு, புனல் வளமும் பூவார் காவின் அழகு வளமும் ஒரு சேரப்பெற்றுப் புலவர் பாடும் புகழ் படைத்திருந்தது. அதிகமான் நாடு பெற்றிருந்த இயற்கைத் திறத்தினும் அவன் நாட்டு மக்கள் பெற்றிருந்த ஆண்மைத் திறனும் அவர்கள் தலைவனான அதிகமான் கொடைத் திறனுமே பல்லாயிர மடங்கு பெரியனவாய்…

ஔவையார் : 2 : – இரா.இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– 11 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 10. தொடர்ச்சி) 3. ஔவையார் தொடர்ச்சி)    அதிகமான் தகடூரில் வதிந்தனர். வள்ளுவர், மயிலையிலும் கூடலிலும் வதிந்தனர். ஔவையார் பெண்ணையாற்றங்கரைக்கணுள்ள புல்வேளூரிலும் அதியமானூரிலும் திருக்கோவலூரிலும் வதிந்தனர். மேற்காட்டிய ‘கபில ரதிகமான்’ என்னும் வெண்பாவானே உப்பை யிருந்தது ஊற்றுக்காடென்பதும் உணரப்படும். இவ்வாறு குடியானும் இடத்தானும் வேற்றுமை பெரிதுடைய இவர்கள் ஓருடற் பிறப்பினரென்பது என்னையெனின், இவர்களைப் பெற்ற தந்தையுந் தாயுந் தேச சஞ்சாரிகளாய் ஓரோரிடத்து ஒவ்வோர் காலத்து இவரைப் பெற்றுவிட்டனராக, இவர்களை எடுத்துவளர்த்தார் வேறு வேறிடத்து வேறு…

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 13 – சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  12–  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  13 5.அரசு (தொடர்ச்சி) அரசாள்வோன் மகன் அரசனாக அமரும் வழிமுறைக் கொள்கை பிற்காலத்தே நிலைத்துவிட்ட போதிலும் பண்டைத் தமிழகத்தில் அரசமரபு என ஒரு மரபு இருந்திலது. அரசாள்வோர் அரசர் எனப்பட்டனரே யன்றி அரசாளும் மரபிற் பிறந்தோர்க்குத்தான் அரசு உரியது எனக் கருதினாரிலர். வடநாட்டில் இராசனுக்குரியது இராச்சியம் எனக் கருதப்பட்டதேயன்றி ‘இராச்சியம்’ புரிவோன் ‘இராசன்’ என்று கொள்ளப்பட்டிலது.  அங்கு அரசாளுவதற் குரிய மரபு எனச் சத்திரியர்…

ஒளவையார்:1: ந. சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள் – 10 2. ஒளவையார்   ‘-ஒண்டமிழே!பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில்புண்களெல்லாம் ஆறப் புரிகண்டாய்.’ [1] எனப் புனல் மதுரைச் சொக்கர் அழகில் சொக்கி மயங்கிய தலைவி, தான் அவர்பால் மாலை வாங்கி வரத் தூதாக அனுப்பும் தீந்தமிழிடம் கூறுகிறாள். என்னே அத்தலைவியின் பேருள்ளம்! பேருள்ளம் படைத்த அத் தலைவியின் வாயினின்றும் பிறந்த அச்சொற்களில் எவ்வளவு ஆழ்ந்த உண்மை அடங்கியுள்ளது! ———–[1]. தமிழ்விடுதூது———- உலக மொழிகளுள்ளேயே-இலக்கியங்களுள்ளேயே-தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தனிச் சிறப்புண்டு. அத்தகைய சிறப்பினை நம் அருந்தமிழ் மொழி பெறுதற்குரிய…

ஔவையார் – 1 : இரா.இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் : 10 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 9. தொடர்ச்சி) 3. ஔவையார் இந் நல்லிசைப் புலமை மெல்லியலாரின் அருமைத் திருப்பெயர் இத் தமிழ்நாட்டின்கண் அறிவுக்கே பரியாயநாமம்போலச் சிறந்து தொன்றுதொட்டே ஆண் பெண் இளையர் முதியர் என எல்லாரானும் வழங்கப்படுவதொன்று. ஒரோ ரினிய முதுமொழியை எடுத்தோதி, அதனை ‘ஔவை வாக்கு’ என்றும் ‘ஔவைவாக்குத் தெய்வவாக்கு’ என்றும், ‘ஆயிரம் பிள்ளை பெற்ற ஔவையார்’ என்றும் பலவாறாக வழங்குதல் இன்றைக்குங் காணலாம். ஈண்டு ஆயிரம் பிள்ளை யென்றது இவர் பாடியருளிய பலவாய பாடல்களையே குறிப்பதாகும்….

1 9 10 11 29