திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி ! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி ! அறிவுக்குப் பொருந்தாக் கதையாக இருப்பினும் தீபாவளியைக் கொண்டாடுவோர் இருக்கின்றனர். அதே நேரம், தீபாவளியை எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துவோரும் தீபாவளியைக் கொண்டாடாதவர்களும் உள்ளனர். விசய நகரப் பேரரசான இந்துப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல்தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு இறக்குமதியான ஒரு பண்டிகைதான் தீபாவளி. நேரடியாகப் புகாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்துள்ளது. பரதகண்டம் முழுவதும் இருந்த கார்த்திகை நாளே தீபாவளியாக மாறியுள்ளது….

பயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

பயிர்அறிவியல் சொல் வளம்   தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன. சொற்களே அறிவியலை உணர்த்துகின்றன என்றால் அறிவியல் துறையில்  நம் முன்னைப் பழந்தமிழர் மிகச் சிறந்து இருந்திருக்க வேண்டும் அல்லவா? நாம் மீண்டும் அறிவியலில் சிறந்து விளங்கப் பழந்தமிழ் அறிவியல் வளங்களை அறிந்து புதியன படைக்க வேண்டும். இங்கே நாம் பயிர் அறிவியல் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்.   பயிர் வகைகளை வகைப்படுத்திப் பெயர்கள் சூட்டியுள்ளமையே மிகச் சிறந்த அறிவியல் வளத்திற்கு நாம் உரியவர்கள் என்பதை எடுத்து இயம்புகின்றது….

சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா? – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா? போர்க்காலத்தின் பொழுது இரு படைத்தரப்பிற்கும் இடையில் நடுநிலையாகச் செயல்பட்டு இரு தரப்பிற்கும் உணவு, மருந்து, பிற உதவிகள் வழங்குவதை இன்றைக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் செய்கின்றனர். ஆனால்,  இப்பணிகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வேந்தர்கள் ஆற்றி வந்துள்ளனர். அதற்கு ஒரு சான்றுதான் சேரலாதன், ஐவருக்கும் நூற்றுவருக்கும் இடையே நிகழ்ந்த போர் ஒன்றில்  இரு தரப்பாருக்கும் பெருஞ்சோறு வழங்கிய நிகழ்வு.  இதில் குறிப்பிடும் ஐவரும் நூற்றுவரும் பஞ்ச பாண்டவரும் கெளரவர் நூறு பேருமா? அல்லது வேறு மன்னர்களைக் குறிக்கினறதா?…

ஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

ஆள்வோர் ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி முழு வலிமை கொண்ட வலிமையான ஆட்சியாளராக இருந்தாலும் ஆன்றோர் கூறும் அறிவுரைகளை அல்லது கசப்பான இடித்துரைகளைக் கேட்டு ஆளவேண்டும் என்பதே தமிழர் நெறி. பழந்தமிழ்நாட்டில் இருந்தது குடி தழுவிய கோனாட்சி. அஃதாவது மக்கள் நலம் நாடும் மன்னராட்சி. மன்னர் ஆட்சி புரிந்தாலும் இன்றைய மக்களாட்சியைவிடச் சிறப்பான மக்கள் நலம் நாடும் ஆட்சியே அப்பொழுது நடந்துள்ளது. “தான் வலிமையானவன் அல்லது அதிகாரம் முழுமையும் கொண்டவன் எனக் கருதித் தனக்குக் கூறப்படும் அறிவுரைகளை ஒதுக்குபவன் நல்லாட்சி…

கீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

கீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன் கீழடியைச் சிறப்பிப்பதாகக் கருதித் தமிழின் தொன்மையைக் குறைத்துக்காட்டக் கூடாது என்றும் தமிழின் தொன்மைச் சிறப்பை வெளியே கொணரத் ‘தமிழ் நில அகழாய்வு ஆணையம்’ அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கீழடி குறித்து ‘வணக்கம் தமிழன்’ என்னும் ‘தமிழன் தொலைக்காட்சி ‘நிகழ்ச்சியில் நெறியாளர் பாண்டியனுடன் உரையாடுகையில் இலக்குவனார் திருவள்ளுவன் தெரிவித்த கருத்துகளுக்கான காணுரை இணைப்பு

நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்! கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் – மணங்கொண்டீண்டு உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண்டொண்டொ டென்னும் பறை. (நாலடியார் பாடல் 25) பொருள்: உறவினர் கூட்டமாகக் கூடிநின்று கூவி அழ, பிணத்தைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் உறுமுயதய் ‘இன்பம் உண்டு, இன்பம் உண்டு’ என்று மயங்குபவனுக்கு, ‘டொண் டொண் டொண்’ என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை)…

நாலடி இன்பம்! -15 ஒரு பறை: ஈர் இசை! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்! -15 ஒரு பறை: ஈர் இசை! மன்றம் கறங்க மணப்பறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் – பின்றை யொலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே வலிக்குமாம் மாண்டார் மனம். (நாலடியார் பாடல் 23) பொருள்: திருமண மன்றத்தில் முழங்கிய மணப்பறைகளே அன்றைக்கே மணமக்களில் ஒருவருக்குப் பிணப்பறையாய் ஒலிக்கவும் கூடும். இதனை உணர்ந்த பெரியோர்கள் மனம் தீமைகளில் இருந்து பிழைத்துப்போகும் வழியை எண்ணும். சொல் விளக்கம்: மன்றம்=பொதுவெளியில் அல்லது அவையில்; கறங்க=முழங்க; மணப்பறை ஆயின= மணக்கோலத்திற்கான பறைகள்; அன்று=அன்றைக்கே; அவர்க்கு=அம்மணமக்களுக்கு; ஆங்கே= அவ்விடத்திலேயே,…