திருவள்ளுவர் நூல் முப்பால் உலகுக்குப் பொது – தமிழ்த்தென்றல் திரு.வி.க.
திருவள்ளுவர் நூல் முப்பால் உலகுக்குப் பொது திருவள்ளுவர் நூல் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற முப்பாலால் ஆக்கப்பட்டது. அறமும் பொருளும் காதலும் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியன அல்ல. அவை மன்பதைக்கு – உலகுக்குப் பொது. திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும் போதே, உலகமும் உடன் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றுதற்குக் காரணமென்ன? திருவள்ளுவர் உலகையே குறளாக எழுதினார். உலகின் எழுத்தோவியம் திருக்குறள் என்று கூறலாம். திருவள்ளுவர் உலகுக்கு என்றே பயின்றார்; உலகுக்கு என்றே வாழ்ந்தார்;…
திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ்நெறியே! – மு.வை.அரவிந்தன்
திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ்நெறியே! திருவள்ளுவர் செய்த காமத்துப்பால் தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியம்; அகப்பாடல்களின் சாறு; பழந்தமிழ் மரபை ஒட்டி எழுந்த தீஞ்சுவைக் காதற் களஞ்சியம்; கற்பனை வளமும் இலக்கியச் சுவையும் சேர்த்து அமைக்கப்பட்ட கலைக்கோயில்; அன்பும் அறனும் ஒன்றிய இன்ப நெறி. வாத்சயாயம் அறிவு நுட்பத்துடன் உலகியலை ஆராய்ந்து எழுதிய நூல். அதில் மாசற்ற உள்ளத்தில் ஊறிச் சுரக்கும் அன்புக்கும் முறை திறம்பாத அறநெறிக்கும் இடமில்லை. எனவே, திருவள்ளுவரின் காமத்துப் பாலுக்கு வாத்சயாயனத்தை இலக்கணமாகக் கொள்வது பொருந்தாது. ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்:…
திருக்குறள் போன்ற ஒரு நூலை எத்தேயத்திலும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை!
திருக்குறள் போன்ற ஒரு நூலை எத்தேயத்திலும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை! திருக்குறள் ஏறக்குறைய இப்பொழுது எஞ்சி நிற்கும் இலக்கியங்கள் எல்லாவற்றினும் முற்பட்டதாகக் காண்கின்றது. எங்ஙனமாயினும், இதற்கு முன்னே இன்னோரன்ன நூல் தமிழில் இருந்ததாகக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. வடமொழியில் உள்ள மிருதிகளும் வருண சமயச் சார்புடனே நியாயப்பிரமாணங்களை அவ்வக்காலத்துக்கேற்றபடி கூறிய நூல்களாயின. நாம் கண்ட கேட்ட பிற தேயங்களிலும் இவ்வகையான நூல் யாதொன்றும் இருப்பதாக இதுகாறும் கேட்டிலோம். ஆகவே, இஃது இணையில்லாத நூலாயிற்று. நூற்பாகுபாடுகளும் நூற்போக்கும் நுதலிய பொருளும் நமதாசிரியர் தமது கல்வி கேள்விகளினாற்றலால் தாமே…
ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! – கோதமனார்
ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் நான்மறையைப் போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று கோதமனார்: திருவள்ளுவ மாலை
கல்வியை ஆட்சியின் கடமையாக்கியவர் திருவள்ளுவர் – குன்றக்குடி அடிகளார்
கல்வியை ஆட்சியின் கடமையாக்கியவர் திருவள்ளுவர் திருவள்ளுவர்தான் முதன்முதலாக ஆட்சியின் கடமைகளில் கல்வி வழங்குவதையும் ஓர் அரசியல் கடமையாகச் சேர்த்துக் கூறியவர். ஆட்சியின் திறனுக்கும் ஒழுக்க நெறி நிற்பதற்கும், வளமான வாழ்க்கை அமைவதற்கும், ஆன்மீக வாழ்க்கைக்கும் கல்வியே அடிப்படை! தவத்திரு குன்றக்குடி அடிகளார்: அடிகளார் அருள்மொழி 500 : தொகுப்பு: குன்றக்குடி பெரிய பெருமாள் பக்கம்.66
உலகநூல் திருக்குறள் ஒன்றே! – இரா.இளங்குமரன்
உலகநூல் திருக்குறள் ஒன்றே! வள்ளுவர் பார்வை உலகப்பார்வை, ஒவ்வொருவரும் உலகவராம் பார்வை. அதனாலேயே தம்மையோ, தம் மண்ணையோ, தம் மண்ணின் மொழியையோ, தம் அரசையோ, தம் இறைமையையோ சுட்டினார் அல்லர். ஆதலால், உலகுக்கு ஒரு நூல் என உலகவரால் வள்ளுவம் கொள்ளப்படுகிறதாம். உலக மறைநூல் ஒன்று காண்டல் வேண்டும் என்னும் காலமொன்று நேரிடும்போது ஒரே ஒரு நூலாக நிற்க வல்லதும் வள்ளுவமேயாம். புலவர் மணி இரா.இளங்குமரனார் : உங்கள் குரல் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்
உலகில் “மறைநூல்” திருக்குறள் ஒன்றே! – ந.சேதுரகுநாதன்
உலகில் “மறைநூல்” திருக்குறள் ஒன்றே! பகைவரால் எய்யப்படுகின்ற அம்புகளும் எறியப்படுகின்ற ஈட்டிகளும் உடம்பிற் பாயாதவாறு, உடல் முழுதுந் தழுவிக் கிடந்து காக்கும் கவசத்தை ‘மெய்ம்மறை’ என்று வழங்குவது தமிழ்மரபு. மெய்யாகிய உடம்பினை மறைத்துக் காப்பதனால் மெய்ம்மறை எனப் பெயர் பெற்றது. கோட்டைச் சுவர்களாகிய அரண்கள் பகைவர் எய்கின்ற படைக்கலங்கள் வந்து பாயாதவாறு தடுத்துக் காத்தலால் ‘மறை’ என்ற பெயர் பெறும். அரண்போல நின்று காத்து உதவும் நூல் ‘ஆரணம்’ என்று கூறப் பெறும். மறை, வேதம் என்று பெயர் பெறும் நூல்கள் ‘ஆரணம்’…
திருக்குறள் மாநாடும் கலைத்தென்றலும்
சித்திரை 24, 2047 / மே 07, 2016
திருக்குறளை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும்! – அரித்துவாரத்தில் உரை
. திருக்குறளை இந்தி முதலான அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும்! – அரித்துவாரத்தில் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டி ஆளுநர் உரை உத்தரகாண்டு மாநிலத்தில் உள்ள அரித்துவாரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படுகிறது. தமிழார்வலரான நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விசய் முயற்சியின் பேரில் இந்தச் சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக அவர், தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து உரூ.200 ஆயிரம் (இரண்டு இலட்சம்) வழங்கி உள்ளார். சிலை அமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழா தலைநகர் தேராதூனில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அந்த…
திருக்குறள் பன்னாட்டு மாநாடு 2016, செருமனி
சித்திரை 24, 2047 / மே 07, 2016 செருமனி – எசன் மாநகரில் இடம்பெறும் . பேராளர் கட்டணம் 100 (இ) யூரோக்கள் .(தங்குமிடம் உணவு உட்பட). . போக்குவரத்து, தங்குமிடத்திலிருந்து மாநாட்டு மண்டபம் வரை கட்டணமில்லை. தொடர்புகளுக்கு : நயினை விசயன் 00492013307524 , 0176 55 77 87 52
தமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை! – சி.இலக்குவனார்
தமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை! வள்ளுவர் தமிழகத்தில் தோன்றித் தமிழில் எழுதியிருந்தாலும் தமிழர்களாகிய நாம் இன்னும் அதனுடைய நுட்பங்களை உணர்ந்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. தமிழர்கள் இன்னும் அதனை நல்ல முறையில் விளங்கிக் கொள்ளாததால்தான் தமிழ்ப்பற்று இல்லாதவர்களும் தமிழ்ப்பகைவர்களும் மக்கள் பகைவர்களும் அதனை இழித்தும் பழித்தும் கூறியும் அதனால் பெருமை பெற்றும் வருகிறார்கள். தமிழர்களாகிய நாம் அதனுடைய நெறிகளைக் கடைப்பிடித்து வந்தால் நாடும் நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களும் நன்மைஅடையத் துணைபுரியும். குறள்நெறி என்பது வள்ளுவர் நெறி. குறள் என்ற சொல்லுக்கு இன்று…
சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே! – சி.இலக்குவனார்
சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே! சாதிகள் தமிழ் நாட்டுக்குப் புதியனவே. சாதி என்ற சொல்லே தமிழன்று. இதுவே சாதி தமிழ் நாட்டில் தமிழரல்லாத வர்களால் புகுத்தப்பட்டது என்பதைத் தெற்றென அறிவிக்கும். சாதி இங்குச் செல்வாக்குப் பெற நுழைந்த காலத்திலேயே தமிழ் நாட்டுப் பெரியோர்கள் அதனைக் கடிந்து வந்துள்ளனர். தொல்காப்பியர் காலத்தில்கி.மு. ஏழாம் நூற்றாண்டில் சாதிமுறைகள் தமிழ்நாட்டில் கால்கொள்ளவில்லை. திருவள்ளுவர் காலத்தில் கி.மு. முதல் நூற்றாண்டில் சாதிமுறைகள் தமிழ்நாட்டில் வேர் கொள்ளத் தொடங்கியுள்ளன. அதனாலேயே வாழ்வியல் அறம் உரைத்த வள்ளுவர் பெருமான் “பிறப்பொக்கும்…
