புதுதில்லியில், இனப்படுகொலைகாரர்களைத் தண்டிக்காமைக்கு எதிரான கண்டனப்பேரணி

புதுதில்லியில், இனப்படுகொலைகாரர்களைத் தண்டிக்காமைக்கு எதிரான கண்டனப்பேரணி உச்ச நீதி மன்ற வழக்குரைஞர்களும் தில்லித்தமிழ் வழக்குரைஞர்கள் சங்கமும் இணைந்து சிங்கள அரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமைதி காக்கும் பன்னாட்டுக் குமுகாயத்திற்கு எதிரான மாபெரும் எதிர்ப்புப் பேரணியை 17.11.2013 காலை 9.00 மணிக்குத் தில்லியில் மாண்டி இல்லத்திலிருந்து நாடாளுமன்றத் தெரு வரை நடத்துகின்றன.   –இராம்சங்கர், தில்லித் தமிழ் வழக்குரைஞர்கள் சங்கம், [sankarhonda @gmail.com]

காணிக்கை

விடுதலைப்பூ ஒரு நாளில் மலர்ந்திடாது – என்றாலும் என்றேனும் ஒரு நாள் மலர்ந்தே தீரும் என்ற நம்பிக்கையில் தாய் மண் காக்க உயிர் நீத்த உறுப்புகள் இழந்த உறவுகள் பிரிந்த உடைமைகள் பறிகொடுத்த ஈழத்தமிழ் மாவீரர்களுக்கும் தாய்மண்காக்கப் போராடிய, போராடும் மண்ணின் மைந்தர்களுக்கும்

அனைவரும் பார்க்க வேண்டிய முள்ளிவாய்க்கால் முற்றம்

 – வழக்கறிஞர் இரா.இராசேந்திரன், கரூர்.  தஞ்சை விளார் சாலையில் 2009 மே 17,18,19 நாள்களில் இலங்கை அரசபடையினர் தமிழ்ஈழ முள்ளிவாய்க்காலில் 1,50,000 தமிழர்களை கொன்று ஒழித்த இனஅழிப்பு போரில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவிடமாக உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முயற்சியால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம்

ஆழ்மனத்தில் தமிழ் உள்ளது

– முனைவர் வெ .இறையன்பு, இ.ஆ.ப. [சிங்கப்பூர்   ஆசிரியர் கழகமும் அமெரிக்கன் கல்லூரியும் இணைந்து மதுரையில் 11.11.2013 அன்று நடத்திய சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் தொடக்கவுரை] தொகுநர் :  கவிஞர் இரா .இரவி தாய்மொழி என்பது ஆழ்மனதுடன் தொடர்புடையது. தமிழை நுகர , செம்மைப்படுத்திக்கொள்ள வந்துள்ளீர்கள் .தமிழில் மேன்மையும், புலமையும் பெறுவீர்கள். ஒவ்வொரு நொடியையும் அடர்த்தியாக்க முடியும். என்னை வளர்த்த குமுகாயத்திற்கு  எதையாவது செய்ய வேண்டும் நோக்கத்தில்

முப்பது நாள்களில் தமிழ்

அன்புடையீர், வணக்கம். தமிழம்.வலை உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும்/ தமிழ் மழலையர்களுக்கும் தமிழ் கற்பிக்க விரும்புகிறது. அவர்கள் எந்த அகவையினராக இருந்தாலும் சரி, தமிழ் கற்றுக் கொண்டதில் எந்த நிலையினராக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் படிப்பதற்காக ஒதுக்கினால், 30 நாள்களில் யாரை வேண்டுமானாலும் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்கக்கூடியவராக, மாற்ற முடியும். ( எனது 25 ஆண்டு கல்விப்பணியில் நான் கண்டறிந்தவை இவை ) தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்க வைப்பதற்கான பாடத்திட்டங்களும், அணுகுமுறைகளும் என்னிடம் உள்ளன. இதனைக் கற்பிக்க…

தமிழ் வரிவடிவம் காப்போம்! – 1

 – தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன்     அறிவியல் முறையில் சிறப்பாக அமைந்தது தமிழ் வரிவடிவம். தமிழ் வரிவடிவம்தான் இந்திய மொழிகளின் வரிவடிவங்களுக்குத் தாய் என்கிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். ஆனால், அவ்வப்பொழுது வரிவடிவச் சிதைப்பாளர்கள் இவ்வரிவடிவத்தைக் குலைப்பதில்  கண்ணும் கருத்துமாக இருந்து தங்கள் சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செம்மொழி மாநாட்டின்பொழுது சில வரிவடிவச்சிதைகள் அரங்கேற இருந்தன. தமிழ்க்காப்புக்கழகமும் தமிழ் எழுத்துக் காப்பியக்கமும்

அன்று இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் – இன்று எம் உள்ளத்தில்

1 திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் 2 திருகோணமலை வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம் 3 திருகோணமலை தியாகவனம் மாவீரர்துயிலுமில்லம் 4 திருகோணமலை உப்பாறு மாவீரர் துயிலுமில்லம் 5 மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம் 6 மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்