மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா – நிகழ்ச்சிப்படங்கள்

ஆனி 02, 2046 /21.06.201 ஞாயிறன்று சென்னை உமாபதி அரங்கத்தில் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா மெய்யப்பனார் அறக்கட்டளை விருது வழங்குவிழா நூல்கள் வெளியீடு ஆகியன நடைபெற்றன. (பெரிய அளவில் பார்க்கப் படங்கள் மேல் சொடுக்கவும்) நிகழ்ச்சி விவரம்

கண்ணதாசன் 88ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழா

 கவியரசு கண்ணதாசன் 88ஆம் பிறந்த நாள் விழாவும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் (பம்மல்) – 24ஆம் ஆண்டு விழாவும் தி.நகர் – வாணிஅரங்கத்தில்(மஃகாலில்) ஆனி 06, 2046 / சூன் 21,2015 ஞாயிறன்று நடைபெற்றன. திருவாட்டி வாணி செயராமிற்குக் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.  இயக்குநர்கள் சுப.(எசு.பி.)முத்துராமன், பி.வாசு, ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.  விழா ஏற்பாடு – எம்.கே.மணி,   காவிரிமைந்தன்,   அ.நாகப்பன்,   ஏ கே.நாகராசன்,   மன்னார்குடி மலர்வேந்தன் மற்றும் பலர். (படங்களைப் பெரிய அளவில் பார்க்கப் படங்கள் மேல்…

அறிவியல் தமிழறிஞர் மணவை முசுதபா 80 ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழா

அறிவியல் தமிழறிஞர் மணவை முசுதபா 80 ஆவது  பிறந்தநாள் பெருமங்கல விழா அறிவியல் தமிழ் அறக்கட்டளை தொடக்க விழா ஒன்பான் அறிஞர்களுக்கு அறக்கட்டளை விருது வழங்கல் மணவை முசுதபா வாழ்க்கைக் குறிப்பேடு வெளியீடு விருதாளர்களைப் பற்றிய குறிப்பேடு வெளியீடு அறிவியல்தமிழறிஞர் திரு. மணவை முசுதபா அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள்  பெருமங்கல விழா  இன்று(ஞாயிற்றுக்கிழமை வைகாசி 31, 2046 / சூன் 14, 2015 மாலை) சென்னையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள இந்திய அலுவலர் சங்ககக்கட்டடத்தில் நடைபெற்றது. கலைமிகு மீனாட்சி குழுவினர் தமிழிசைப்…

14ஆவது தமிழ்இணைய மாநாடு, சிங்கப்பூர்: சில நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்

வைகாசி 16-18, 2046 / மே30-சூன் 01, 2015 ஆகிய நாள்களில் சிங்கப்பூரில் நிகழ்ந்த 14 ஆவது தமிழ்இணைய மாநாட்டின் தொடக்கவிழா, இரண்டாம் நாள் விருந்து,  நிறைவு விழா, மூன்று நாள்களிலும் நடைபெற்ற உரைகள் சிலவற்றின் நிகழ்வுப் படங்கள். [படங்களுக்குரியவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு அனுப்பினால் பின்னர் படங்களுடன் பெயர்களை இணைக்கலாம்.] படங்கள் – அகரமுதல & ஓம்தொலைக்காட்சி

இணைய மாநாட்டுத் தகவல்நுட்பக்காட்சி ஒளிப்படங்கள் சில, சிங்கப்பூர்

  சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் 14ஆவது இணைய மாநாடு  மூன்று நாள் நடைபெற்றது.   இம்மாநாட்டில்   தொடக்க நாளான சித்திரை 16, 2046 / மே 30, 2015 சனியன்று சிங்கப்பூர்த் தலைமையமைச்சுத்துறையமைச்சர் ஈசுவரன்  தகவல்நுட்பக் காட்சியரங்கத்தைத் திறந்து வைத்தார். படங்கள் : அகரமுதல & தினமலர்

சிங்கப்பூரில் கவிக்கோ கருவூல அறிமுக விழா

  கவிக்கோ அப்துல் இரகுமான்  75 ஆவது பிறந்தநாள் பவளவிழாவும் கவிக்கோ கருவூல வெளியீட்டு விழாவும் சென்னை அண்ணாசாலை காமரசார் அரங்கத்தில்   ஆவணி 12, 2046 / ஆக.29,2015 சனிக்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்த அறிமுக நிகழ்ச்சி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் சித்திரை 17, 2046 / மே 31 ஞாயிறு காலை சிங்கப்பூர் ஆனந்தபவன் உணவக மாடியரங்கத்தில் நடைபெற்றது. பவளவிழா ஒருங்கிணைப்பாளர்கள்  பேராசிரியர் கவிமாமணி அப்துல்காதர், பதிப்பாளர் சாசகான் ஆகியோர் உரையாற்றினர்.

இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு ஒளிப்படங்கள்

 சென்னை,  அம்பத்தூர் வைகாசி 2, 2046 / மே 16, 2015  சனிக்கிழமை  (படத்தின் மேலழுத்திப்  பெரிதாகக் காண்க.)  

தொல்காப்பியர் கால்கோள் விழா – ஒளிப்படங்கள்

  குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!  

இனி முழுக்க முழுக்க, மான மீட்புப்பரப்புரைகளே! வீரமணி சூளுரை

  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், இரண்டாம் நாளாகச் சித்திரை 13, 2046 / 26.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.  முதல் நாள் நிகழ்வில் கருத்தரங்குடன், கலை நிகழ்ச்சியாக புரட்சிக் கவிஞர் பாடல் களுடன் குயில்மொழி குழுவினரின் நடனம் பார்வையாளர்களின் கருத்துகளைக் கவர்ந்தன.   இரண்டாம் நாள் நிகழ்வாக வாழ்வியல் பண்பாட்டு மீட்டுருவாக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் அ.இராமசாமி தலைமையில் புதுவை மாநிலப் பகுத்தறிவாளர்கழகத் துணைத்தலைவர் மு.ந. நடராசன் வரவேற்றார். எழுத்தாளர்…