பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும்

  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், சித்திரை 12, 2046 / 25.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.   தமிழர்தம் வாழ்வில் பல்வேறு நிலைகளிலும் சமக்கிருதம் நுழைந்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது குறித்தும், அதை அடையாளம்கண்டு தகர்ப்பதன் மூலமே தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டைக் காத்து, தன்மதிப்பு வாழ்வாக நல வாழ்வாக வாழ முடியும் என்று விளக்குகின்ற வகையிலும் அறிஞர்பெருமக்களின் உரைகள் அமைந்தன. சமக்கிருதத்திற்கு எதிராகப் பல்வேறு காலக்கட்டங்களில் களம் கண்டு…

ந.மணிமொழியன் 70ஆவது பிறந்தநாள் பெருமங்கலவிழா – படங்கள்.

உலகத்திருக்குறள் பேரவை சார்பில் அதன் பொதுச்செயலர் ந.மணிமொழியனின் 70ஆவது பிறந்தநாள் பெருமங்கலவிழாவை முன்னிட்டு ஐந்து நாள் திருக்குறள் திருவிழா  கடந்த திங்கள் நடைபெற்றது. நிறைவுநாளில் இலக்கியச் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. கவியரசு நற்பணிமன்றத்தலைவர் இரா.சொக்கலிங்கம் தொடக்கவுரை யாற்றினார். நகைச்சுவைப்  பேரரசர் முனைவர் கண.சிற்சபேசன் நடுவராக இருந்து தமிழ்இலக்கியம் அழகு விருந்தா? அறிவு மருந்தா?  என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.  முனைவர் இரா.மோகன் பொன்.சந்திரசேகரன்,  கவிஞர் இரா.இரவி,  முனைவர  நிருமலா மோகன், ச.செந்தூரன், ச.திருநாவுக்கரசு ஆகியோர் வாதிட்டனர்.  கவிஞர் அசோக்குஇராசு நன்றி நவின்றார். அப்பொழுது எடுக்கப்பட்ட…

“சொக்கலிங்கம் அக்கதமி” யின் இலவச வகுப்புகள்..!

புங்குடுதீவு “தாயகம்” நிறுவனத்தின் சார்பில், சிறப்புற நடைபெறும் “சொக்கலிங்கம் அக்கதமி” யின் இலவச வகுப்புகள்..!   புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேசு) அவர்களது நினைவாக நிறுவப்பட்ட “தாயகம்” நிறுவனம் சார்பில், அவர்களது புங்குடுதீவு வீட்டில் தொடங்கப்பட்ட “சொக்கலிங்கம் அகதமி”யானது 2014 ஆண்டு எட்டாம் மாதம் தொடங்கி வெகு சிறப்பாக இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே.   தொடக்கத்தில் 18 பிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட எமது கல்விக்கழகமானது பின்பு 28 பிள்ளைகளாக அதிகரித்து கல்வி நடவடிக்கைகள்; விரிவாக்கம் செய்யப்பட்ட…

இராணி மேரிக்கல்லூரி : தேசியக் கருத்தரங்கம், ஒளிப்படங்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும்  அரசு இராணி மேரிக்கல்லூரியும் இணைந்து நடத்திய செவ்வியல் தமிழ் இலக்கிய இலக்கண மொழிபெயர்ப்புகள் தேசியக் கருத்தரங்கம்,  சென்னை   [பெரிதாகக் காணப் படங்களைச் சொடுக்கவும்]    

குறோளி தமிழ் கல்விக் கூடத்தின் 9ஆம் ஆண்டு நிறைவு விழா

 பிரித்தானியா குறோளி தமிழ் கல்விக் கூடத்தின் 9ஆம் ஆண்டு நிறைவு விழா மாசி 16, 2046 – 28/02/2015 மாலை 5 மணிக்குத் தொடங்கியது. இந் நிகழ்விற்கு மாணவர்கள் வேட்டியும் சட்டையும் அணிந்தும் மாணாக்கியர் சேலையணிந்தும் வந்திருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்வினைத் தொடக்கி வைத்தனர். தொடர்ந்து பேச்சு, கவிதை, நாடகங்கள் மற்றும் பல கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. மாணவர்கள் ஆசிரியர்களுக்கான மதிப்பளித்தலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.  சிறப்பு விருந்தினர்களாகக் குரோளி தன்னாட்சி அவைத் தலைவர் திரு கிளிர் பீட்டர் இலாம்பு(Mr.Cllr Peter Lamb…

மட்டக்களப்பில் ‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி!

  மட்டக்களப்பில் ‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி!    மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடிப் பகுதியில், கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல்போகச்செய்யப்பட்ட நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுப் பெண்களை தலைமைத்துவமாகக்கொண்டுள்ள குடும்பங்களில், இருபத்தொரு குடும்பங்களுக்கு   தற்றொழில் முயற்சிக்கான ஆதாரம் வழங்கப்பட்டுள்ளது.   “நெல்லு குற்றி அரிசியாக்கி விற்பனை செய்தல், இடியப்பம் அவித்து உணவகங்களுக்கு விற்பனை செய்தல்” முதலான குடிசைத்தொழில்களில் ஈடுபட்டுவரும் குடும்பங்களுக்கே சிறுதொகை நிதி ஆதாரம் வழங்கப்பட்டுள்ளது.   ‘கொம்மாந்துறை கிழக்கு மாதர் வள அபிவிருத்திச்சங்க’ச் சார்பாளர் திருமதி மதனா ஒழுங்கமைப்பில் நடைபெற்ற குறித்த மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சியில், ‘நாங்கள்’…

மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் புலவர்மணி இரா.இளங்குமரனார்

மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் நடந்த பொறியாளர் அமரர் பழ.கோமதிநாயகம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒளிப்படங்கள். சிறப்புரை தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் .   தரவு : கவிஞர் இரா .இரவி

திருவரங்கம் இடைத்தேர்தலில் மாநில அம்மா பேரவை

 திருவரங்கம் இடைத்தேர்தலில் மாநில அம்மா பேரவை சார்பில் அம்மா அவர்களின் சாதனைகளை விளக்கித் துண்டறிக்கைகளைத் தேனி மாவட்டக் கழகச் செயலர் டி.டி.சிவக்குமார் வழங்கியபோது எடுத்த படம். அருகில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர்   ஆர்.பார்த்திபன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன், தேனி மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், தேனிமாவட்ட அம்மா பேரவைச் செயலர் வரதன், மாவட்டத் துணைச் செயலர் முருக்கோடை இராமர், பெரியகுளம் ஒன்றியச் செயலர் செல்லமுத்து, அப்துல்கபார்கான் முதலான பலர் உள்ளனர்.   திருவரங்கம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து…

திருவரங்கம் தொகுதியில் தேனிக்கழகத் தொண்டர்கள்

    திருவரங்கம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை வரவேற்ற திண்டுக்கல் தொகுதிக் கழகச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், பண்ணைக்காடு பேரூராட்சித் தலைவர் சண்முகசுந்தரம், பழனி அன்வர்தீன், ஆத்தூர் ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் இமாக்குலின் சார்மிலி முதலானோர் உள்ளனர்.   திருவரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மின்-ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பரப்புரை மேற்கொள்கிறார். உடன், திண்டுக்கல் தொகுதிச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், ஒன்றியச் செயலர் ஆர்.பி.பி.சண்முகசுந்தரம், கொடைக்கானல் நகர்மன்றத்தலைவர் சிரீதர், ஒன்றியப் பெருந்தலைவர்…

ஏர்வாடியாரின் எழுத்துலகம் நிகழ்ச்சி

  பேராசிரியர் இரா. மோகன் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஏர்வாடியாரின் எழுத்துலகம் நிகழ்ச்சி முனைவர் இறையன்பு தொடக்கவுரையாற்ற, கவிஞர் ஈரோடு தமிழன்பன் நிறைவுரையாற்ற அன்பில் தொடங்கி அன்பில் நிறைந்த விழாவாக அமைந்தது .அறிஞர் பெருமக்கள் ஆய்வுரை நிகழ்த்த அற்புத விழாவானது இந்நிகழ்ச்சி.