சட்டச் சொற்கள் விளக்கம் 1031-1035 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1026-1030 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1031-1035 1031. Avert  தடு விலக்கு  திசை திருப்பு; தவிர்த்தல்‌ இன்னாத ஒன்றைத் தடு. விலக்கு அல்லது தடைசெய். ஒன்றிலிருந்து விலகுவது என்னும் பொருள் கொண்ட இலத்தீன் சொல்லில் இருந்து avert சொல் உருவானது. கடைசி நிமைய ஒப்பந்தத்தால் பெரும் சண்டை தவிர்க்கப்பட்டது போன்ற நேர்வுகளில் இச்சொல் கையாளப்படுகிறது. 1032. Aviation        வான் பயணம் வான்பயணவியல் வான் பறப்பியல் வானூர்திப்‌ போக்குவரத்து;  வான் போக்குவரத்துச் சட்டம் என்பது விமானம், விமானப் பயணம்,…

வெருளி நோய்கள் 1066-1070: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1061-1065: இலக்குவனார் திருவள்ளுவன்) வெருளி நோய்கள் 1066-1070 கினி எலி என அழைக்கப்பெறும் சீமை எலி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சீமை எலி வெருளி.ஆங்கிலத்தில் இதன் தோற்றத்தைப் பார்த்து கினி பன்றி(guinea pig) என்கின்றனர். Guiné என்னும் கிழக்கு ஆப்பிரிக்க மக்கள் இனத்தைக் குறிக்கும் போர்த்துக்கீசியச் சொல்லில் இருந்து கினி(யா) நாட்டிற்குப் பெயர் வந்தது. ஆனால் இந்நாட்டிற்கும் இவ்வுயிரிக்கும் தொடர்பு இல்லை. ஆண்டெசு(Andes) நாடே இவற்றின் பிறப்பிடம்.அதுபோல் இதற்கும் பன்றி இனத்திற்கும் தொடர்பில்லை. கொறிக்கும் விலங்குவகையைச் சார்ந்த இதைத் தமிழில் உருவ…

வெருளி நோய்கள் 1061-1065: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1055-1060: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1061-1065 சிறைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் சிறை வெருளி.சிறைவாசிகளுக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிந்து விடுமோ என்ற பேரச்சம் வரும்.செல்வாக்கு உள்ளவர்க்கு ஒரு நிலைப்பாடு இல்லாதவர்க்கு ஒரு நிலைப்பாடு என நிலவுவதால், விசாரணையில் உள்ள கைதிகளுக்கும் குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கும் சிறைபற்றிய அச்சம் மிகுதியாகின்றது. சட்டப்படியான குற்றம் புரியாதவர்களும் சிறைபற்றிய செய்திகளையும் கதைகளையும் படிப்பதாலும் தொலைக்காட்சி, திரைக்காட்சிகளில் காண்பதாலும் சிறைகள்பற்றிய பேரச்சம் வருகிறது.carcer என்னும் இலத்தீன் சொல்லிற்குச் சிறை எனப் பொருள்.00 சிற்றுண்டிகள் விற்பனையகம் குறித்த காரணமற்ற…

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 : தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் : இலக்குவனார் திருவள்ளுவன்

(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : தொடரச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு  குறித்து, அதிலும் குறிப்பாக மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் குறித்து முந்தைய இதழ்களில் பார்த்தோம். 13.11.1938ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாடு குறித்த செய்தியையும் பார்த்தோம். இம் மாநாட்டில் மீனாம்பாள் சிவராசு தமிழ்மொழி,  தமிழ்ப் பண்பாட்டுக்காக மன உறுதியோடு போராட முன்வர வேண்டும் என்று பெண்களை வேண்டினார். இதுவே தமிழ் உணர்வுடன் தமிழுக்காக, உயிருக்கும்…

வெருளி நோய்கள் 1055-1060: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1051-1055: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1055-1060 சிறுநீர்க்கழிப்பிடம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறுநீர்க்கல வெருளி.சிறுநீர்க்கலன், சிறுநீர்க்கழிப்பிடம் மூலம் தொற்றுநோய் பரவும் எனப் பேரளவு அச்சம் கொள்கின்றனர்.Ouritirio என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சிறுநீர்க் கழிப்பிடம் எனப் பொருள்.காண்க : பொதுக்கழிப்பிட வெருளி(Koinoloutrophobia)00 சிறுமியர் பற்றிய தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் சிறுமி வெருளி.மரபு வழியில் அல்லது சிறுமியர் தொடர்பான மோசமான நிகழ்வுகள் போன்றவற்றால் சிறுமியர் மீது பேரச்சம் கொள்கின்றனர். பொதுவாக வயது வந்த ஆடவருக்குச் சிறுமி வெருளி உள்ளது. பெண்வெருளி உள்ளவர்க்கும் சிறுமி வெருளி…

வெருளி நோய்கள் 1051-1055: இலக்குவனார் திருவள்ளுவன் 

(வெருளி நோய்கள் 1046-1050) வெருளி நோய்கள் 1051-1055 1051. சிறுத்தைப் புலி வெருளி – Gatopardophobia/Leopardaliphobia/ Pardalophobia/ Iagouarophobia  சிறுத்தைப்புலி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறுத்தைப்புலி வெருளி. Gatopardo என்னும் இசுபானியச் சொல்லின் பொருள் சிறுத்தைப்புலி. Iagouaro என்றால் jaguar  எனப் பொருள்.  மாயன் மொழியில் jaguar என்றால் ஒரே பாய்ச்சலில் கொல்லும் விலங்கு எனப் பொருள். காண்க: சிவிங்கிப்புலி வெருளி (Acinonyxphobia/Panthiraphobia) 00 1052. சிற்றின நாய் வெருளி- Chihuahuaphobia சிறிய அளவிலே வளரும் சிற்றின நாயைக் கண்டு ஏற்படும் பேரச்சம் சிற்றின…

வெருளி நோய்கள் 1046-1050: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1041-1045) வெருளி நோய்கள் 1046-1050 சிறப்பு மகிழுந்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறப்புந்து வெருளி.சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்பதால் பயன்பாட்டுச் சிக்கல் தெரியாது, குறைபாடு நேர்ந்தால் உடன் சரி செய்ய முடியுமா என்னும் ஐயப்பாட்டு நிலை போன்ற காரணங்களால் பேரச்சம் கொள்வர்.புதிய வெளியீட்டுச் சீருந்துகள், ஊர்திகள் பற்றிய அளவுகடந்த பேரச்சம் என்பதால் புத்தூர்தி வெருளி என்றும் சொல்லலாம்.curr என்னும் இலத்தீன் முன்னொட்டு ஓடுவதைக் குறிக்கும். இங்கே சாலையில் ஓடும் ஊர்தியைக் குறிக்கிறது.00 சிறிய எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறிய எழுத்து வெருளி.கீழ்…

குறட் கடலிற் சில துளிகள் 40 : பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 39 : தொடர்ச்சி) பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௩ – 453) மாந்தர்க்கு அறிவு மனத்தினால் உண்டாகும். தான் சேர்ந்த இனத்தினால் இனியன் அல்லது இனியனல்லன் என்று பிறரால் சிறப்பிக்கப்படும் அல்லது பழிக்கப்படும் சொல் உண்டாகும். பதவுரை: மனத்தான் – மனத்தைப் பொறுத்து> மனம் காரணமாக; ஆம்-ஆகும்; மாந்தர்க்கு-மக்களுக்கு; உணர்ச்சி-அறிவு/உணர்வு; இனத்தான்-சேரும் இனத்தால்; ஆம்-ஆகும்; இன்னான்-இத்தகையவன்; எனப்படும்-என்று சொல்லப்படும்;…

வெருளி நோய்கள் 1041-1045: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1036-1040: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1041-1045 சிலுவை மீதான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் சிலுவை வெருளி.இயேசுநாதரை அறைந்து கொல்லப்பயன்படுத்திய கழுமரத்தின் குறியீடு சின்னம். எனவே, இது கிறித்துவத்தின் குறியீடாகத் திகழ்கிறது. தாழ்ந்த நிலத்திலிருந்து உயர்ந்த குன்று, மலைப்பாறை,கடல் நடுவே தெரியும் பாறைத்திட்டு எனப்பார்க்கும் இடங்களிலெல்லாம் சிலுவை அடையாளத்தை வரைந்து கிறித்துவத்தைப் பரப்புகின்றனர். இது பிற சமயத்தவருக்கு இதன்மீதான வெறுப்பை உண்டாக்குகிறது. கிறித்துவப்பரப்பலால், தங்கள் சமயம் அழியுமோ, தாங்கள் வழிபடும் கடவுள் மீதுான நம்பிக்கை மறையுமோ என்பன போன்ற கவலைகள் ஏற்பட்டுக்…

வெருளி நோய்கள் 1036-1040: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1031-1035: இலக்குவனார் திருவள்ளுவன்) வெருளி நோய்கள் 1036-1040+ சிரிப்பு குறித்த தேவையற்ற வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் சிரிப்பு வெருளி.வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். நோய் நமக்கு மருந்து போன்றது. எனினும் சிலருக்குச் சிரிப்பும் சிரிப்பவர்களும் எமனாகத் தெரிவார்கள்.பிறர் சிரிப்பதைப் பார்த்தால் நம்மைப்பற்றித்தான் கேலிசெய்து நகைக்கிறார்களோ என்று அஞ்சுவோர் உள்ளனர். இத்தகையோர் சிரிப்புக்கதைகளைப் படிக்கவோ சிரிப்புத் திரைப்படங்களைப் பார்க்கவோ சிரிப்பவர்கள் அருகில் இருக்கவோ சிரிப்புத் துணுக்குகளைக் கேட்கவோ விரும்பாமல் தவிர்ப்பர்.சிரித்தால் சிக்கல்களை எளிதாக்கலாம் என்பதால்தான் மே முதலாம் ஞாயிற்றுக்கிழமையை உலகச்…

வெருளி நோய்கள் 1031-1035: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1026-1030: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1031-1035 சிம்சு காணாட்ட குறித்த வரம்பற்ற பேரச்சம் சிம்சு காணாட்ட வெருளி.சிம்சு(The Sims) என்பது 2000 ஆம்ஆண்டு மேக்குசிசு(Maxis) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, மின்னணுக் கலைகள் நிறுவனத்தால்(Electronic Arts) வெளியிடப்பட்ட குமுக உருவகப்படுத்தும்காணொளி ஆட்டமாகும்.இது பல வரிசைத்தாெடராக வந்து கொண்டுள்ளது. இவ்வாட்டத்தை ஆடுபவர்களும் காண்பவர்களும்தூய்மைக்கேடு தொடர்பான பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்தல் போன்ற வற்றிற்குப்பேரச்சம் கொள்கின்றனர்.காணாட்ட வெருளி உள்ளவர்களுக்குச்சிம்சு காணாடட வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 சிம்பசன் என்னும் அசைவூட்டக் கதை மாந்தர் குறித்த வரம்பற்ற பேரச்சம் சிம்பசன் வெருளி.அசைவூட்டக்…

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 03 : தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04 “பணமி ருந்தார் என்ப தற்காய்ப் பணிந்தி டாத மேன்மையும் பயமுறுத்தல் என்ப தற்கே பயந்திடாத பான்மையும் குணமி ருந்தார் யாவ ரேனும் போற்று கின்ற கொள்கையும் குற்ற முள்ளோர் யாரென் றாலும் இடித்துக் கூறும் தீரமும் இனமி ருந்தார் ஏழை யென்று கைவி டாத ஏற்றமும் இழிகு லத்தார் என்று சொல்லி இகழ்த்தி டாமல் எவரையும் மணமி குந்தே இனிமை மண்டும் தமிழ்மொ ழியால்…