சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 408-410

(தமிழ்ச்சொல்லாக்கம்: 403-407 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 408-410 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 408. Governor – காவலர் விசுவநாதரின் இராச விசுவாசமும் வீரமும் புயவலியும் இத்தன்மையவென உணர்ந்த இராயர் மகிழ்ச்சியுற்று அவர் வேண்டும் வரங்களைக் கொடுப்பதாகச்…

வ.உ.சி.பிறந்தநாள், இலக்குவனார் நினைவு நாள், மாநிலக் கல்லூரி

சென்னை மாநிலக்கல்லூரித் தமிழ்த்துறையினர் மூன்றாம் வாரக் கருத்தரங்கமாகத் தமிழறிஞர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்கள் பிறந்த நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு நாளையும் இணைத்து அன்று தம் கல்லூரியில் நடத்தினர்.பேராசிரியர் முனைவர் ப.தாமரைக்கண்ணன் தலைமையுரை யாற்றினார்.மாணவர் செல்வி ம.காவேரி வரவேற்புரையாற்றினார். மாணவர் செல்வி வ.சுதாமணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் கி.ஆதிநாராயணன் தொடக்கவுரை யாற்றினார்.மாணவர் செல்வி கோ.கோமதி, விடுதலைப்போராளி வ.உ.சி. குறித்துச் சிறப்புரையாற்றினார்.இலக்குவனார் திருவள்ளுவன், தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார் குறித்துச் சிறப்புரை யாற்றினார். மாணவர் செல்வன் ஆரணி பாரதி நன்றி நவின்றார்….

ஆகமவிதிகள் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குப்பொருந்தா!–  இலக்குவனார் திருவள்ளுவன்

வழிபாட்டு முறையில் ஆகமம் ஆகமவிதிகள் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குப்பொருந்தா!  தமிழர்களுக்காகத் தமிழர்களால், தமிழர்களின் கடவுள்களை வழிபடுவதற்குக் கட்டப்பட்ட கோயில்களே தமிழகக் கோயில்கள். இக்கோயில்களில் மண்ணின் மக்களுக்கும் மக்களின் மொழியாகிய தமிழுக்கும் இடமில்லை என்பவர்கள் அயல்மண்ணைச் சேர்ந்தவர்களும் அயல் இனத்தைச் சேர்ந்தவர்களுமே. தமிழர்களால் கட்டப்பட்ட கோயில்களுக்கு உரிய விதிமுறைகளையும் வழிபாட்டு முறைகளையும் அயலார் எப்படி இயற்ற இயலும்? அவ்வாறு இயற்றப்பட்டதாகக் கூறும் விதிகள் தமிழ்மக்களை எங்ஙனம் கட்டுப்படுத்தும்? பொதுவாக ஆகமவிதிகள் சைவ சமயக்கோயில்களுக்கே உள்ளன. சைவ ஆகமங்களாகத்  திருவடிகள் முதல் 22 உடலுறுப்புகளையும் குண்டலம், முதலிய 6…

பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,சிங்கப்பூர்,மே 26-28,2023

உலகத் தமிழ் ஆய்வு மன்றம் International Association of Tamil Research (IATR) பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர், வைகாசி 12-14, 2054 / மே 26-28,2023 ஆராய்ச்சிச் சுருக்கம் வரவேண்டிய நாள் 15.10.2022 ; அனுப்ப வேண்டிய மின்வரி: academic-committee@11.org  தெரிவு முடிவு நாள் கார்த்திகை 29, 2053 /15.11.2022 இற்கு முன்னதாக விரிவுக் கட்டுரை நாள் தை 17, 2054 / 31.01.2023  கட்டுரையாளர் அனுமதிக் கட்டணம், தங்கும் செலவு, உணவுச் செலவு, மாநாட்டின்போது ஏற்படுகின்ற உள்ளூர்ப் போக்குவரத்துச்…

”நான் பார்வையாளன் அல்லன்” நாடகமும் ஃச்டேன்சாமி குறித்த முந்நூலும்

ஆவணி 28, 2053 சனி மாலை 4.30 13.08.2022 அருண் உணவகம், தொடரிநிலையம் அருகில், திருச்சிராப்பள்ளி

கோவை ஞானி – எசு.என்.நாகராசன் நினைவு இணையக் கருத்தரங்கு

கோவை ஞானி – எசு.என்.நாகராசன் நினைவு இணையக் கருத்தரங்கு ஆடி 07, 2053 சனி 23.07.2022 மாலை 6.00-7.30  – இரவு 7.30-9.00 ஈரமர்வுகள் கூட்ட எண்: 864 136 8094    புகு எண்: 12345 கோவை ஞானி வாழ்வும் பணியும் மாலை 6.00 – இரவு 7.30 தொடக்க உரை: முத்துக்குமார் கருத்துரை: சுப்பிரபாரதி மணியன் பஞ்சாங்கம் சோதி மீனா சவகர் எசு.என்.நாகராசன் வாழ்வும் பணியும் இரவு 7.30-9.00 தொடக்க உரை: கண.குறிஞ்சி கருத்துரை: தோழர் தியாகு யமுனா இராசேந்திரன் பொதிய…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல்,  ஆசிரியர் முன்னுரை

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2 தொடர்ச்சி) பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் ஆசிரியர் முன்னுரை   உலகில் வழங்கும் மொழிகட்கெல்லாம் முற்பட்ட தொன்மை யுடையது நம் செந்தமிழ். ஆகவே அதனைப் பழந்தமிழ் என்று அழைத்துள்ளோம். இன்னும் பல அடைமொழிகளும் தமிழுக்கு உள. அடைமொழிகளைச் சேர்த்தே தமிழை அழைப்பது புலவர்களின் பெருவழக்காகும். பைந்தமிழ், நற்றமிழ், ஒண் தமிழ், வண் தமிழ், தண் தமிழ், இன்றமிழ் என்பனவற்றை நோக்குக. அதன் பண்பும் பயனும் கருதியே இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றது.   மொழியே நம் விழி;…

சிற்சபேசன் என்னும் சிரிப்பலை ஓய்ந்தது!

பட்டிமன்ற முன்னோடி, நயத்தக்க நகைச்சுவைக்குப் பலருக்கு ஆசானாக விளங்கிய சிறந்த சொற்பொழிவாளர், மேலாண்மை வல்லுநர், பேராசிரியர் முனைவர் திரு. கண. சிற்சபேசன் அவர்கள் இன்று – சித்திரை 04, 2053 / ஏப்பிரல் 17, 2022 – காலை 10.15 மணி அளவில் காலமானர்கள். குடும்பத்தினரின் ஆழ்ந்த துயரத்தில் அகரமுதல மின்னிதழ், தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் பங்கேற்கின்றன.

காதலிப்போம் எந்நாளும்!

காதலிப்போம் எந்நாளும்! – இலக்குவனார் திருவள்ளுவன் மேற்குறித்த கட்டுரையை என்ன வேண்டும் தளத்தில்(http://ennavendum.in/) காதலிப்போம் எந்நாளும்! தலைப்பைச் சொடுக்கிக் காண வேண்டுகிறேன்.

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.31-35

(இராவண காவியம்: 1.2.26-30 தொடர்ச்சி) 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் ஐந்நிலம் – குறிஞ்சி வேறு 31.இவ்வகை நான்குட னியன்று பல்வளந் துவ்விய தமிழகத் துணிந்த மேலவர் செவ்விய முறையினிற் சென்ற வைந்நிலக் குவ்வையின் முதலிய குறிஞ்சி காணுவாம். 32.இடிகுரல் யானைதன் னிளைய வின்னுயிர்ப் பிடிபசி களைந்திடப் பெரிய யாக்கிளை முடியது படியுற முறிக்கு மோசையாற் படிசிறு கிளியினம் பறந்து செல்லுமால். 33.அருவிய முருகிய மார்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை மருவிய குரக்கினம்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1-20: இலக்குவனார் திருவள்ளுவன்

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் துறைதோறும் துறைதோறும் தமிழ் வளர வேண்டும்! தமிழில் வரும் பிற துறைகள் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் பார்க்கும் பொழுது தமிழ் அறிவியல் துறையில் முன்னேறிவிட்டதுபோல் தோன்றும். ஆனால், உண்மையில் நாம் எட்ட வேண்டிய இலக்கு மிக மிகத் தொலைவில் உள்ளது. தஞ்சாவூரில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது “அறிவியலிலும் தமிழ்! அனைத்திலும் தமிழ்!” என்பதே அரசின் முழக்கமாக அமைந்தது. ஆனால், இதனைச் செயல்படுத்தும் வகையில் போதிய துறையறிவும் தமிழ்ப் புலமையும் நிறைந்தவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளனர். பிற…

தமிழ்ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் நீடு வாழ்க!

நலமும் வளமும் நிறைந்துஉரிமை ஈழத்தை உயர்த்திநூறாண்டு கடந்தும் வாழியவே! தமிழ்ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பொன்மொழிகள் ஐந்துநாம் உணர்ந்து பின்பற்ற வெளியிடப்படுகிறது: 1. பாதையைத் தேடாதே! அதை உருவாக்கு! 2. நான் பேச்சுக்குத் தருவதுகுறைந்தளவு முக்கியத்துவமே.செயலால் வளர்ந்த பின்புதான்நாம் பேசத் தொடங்க வேண்டும்! 3. ஒருவர் சத்தியத்திற்காக இறக்க வேண்டும்என்பதில் உறுதியாக இருந்தால்,ஒரு சாதாரண மனிதனால் கூடவரலாற்றை உருவாக்க முடியும். 4. ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாகச் சரித்திரம் இல்லை. 5. ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்.ஆனால்,…