தமிழ் வழிபாட்டுப் போர் ஆதரவுப் பயணத்தில் கரூர் இராசேந்திரன்

  அண்மைக் காலங்களில், தமிழில் குடமுழுக்கு நடத்திய முன்னோடியும் தமிழ் வழிபாட்டு மொழியாக மீளவும் ஆட்சிசெய்ய தொண்டாற்றி வருபவருமான வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன் தில்லை நடராசர் கோயிலில் தமிழ் வழிபாட்டுப் போருக்கு ஆதரவளிக்க, தன் குடும்ப உறுப்பினர்களான மனைவி மணிமொழி, மகன் அன்புத்தேன், மகள் அமுதசத்யா, மருமகள் அன்பரசி ஆகியோருடன் சிதம்பரம் சென்றார். மேலும் பயணத்தின் ஒரு  பகுதியாக, இயேசுகிறித்துவின் கொள்கைப் பரப்புரைப்பணியாற்ற தமிழகம் வந்து, கொஞ்சம் இறைப்பணியும்,  மிகுதியும் தமிழ்ப் பணியும் ஆற்றிய  அறிஞர் சீகன் பால்கு (ஐயர்) தங்கியிருந்த தரங்கம்பாடிக்கும் சென்று…

தமிழ் பிரபாகரன் விடுதலை! நேற்றிரவு சென்னை வந்தார்.

    இலங்கையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன், வடக்கு மாகாண  அவை உறுப்பினர் பசுபதி (பிள்ளை) ஆகியோருடன் உடன் பயணம் மேற்கொண்ட பொழுது தளையிடப்பட்ட மகா.தமிழ் பிரபாகரன் நேற்று 28.12.12 சனி யன்று விடுதலை செய்யப் பெற்றார். இரவே சென்னை வந்துசேர்ந்தார். கிளிநொச்சிப் பகுதியில் இருந்த அவர், எங்ஙனம் யாழ்ப்பானம் பகுதியில் ஒளிப்படம் எடுத்திருக்க முடியும் என்ற உண்மையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப் பட்டுள்ளார். வரும் 30.12.13 திங்கள் மாலை செய்தியாளர் கூட்டத்தில் முழு விவரம் குறித்துத் தெரிவிப்பதாக தமிழ்ப்பிரபாகரன் அகரமுதல்…

பதிப்புத்துறை வழிகாட்டியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

பதிப்புத்துறை வழிகாட்டியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது – தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்  திருமலை   அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை சார்பில் ஆளவை மன்றத்தில் ‘அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பணிகள்’ என்ற தலைப்பில் இருநாள் தேசிய கருத்தரங்கம் திச.23,24 ஆகிய இருநாளிலும் நடைபெற்றது. விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.திருமலை தலைமை வகித்து 120 கட்டுரைகள் அடங்கிய இரண்டு தொகுப்பு நூல்களை வெளியிட்டார். தில்லி சவகர்லால் நேரு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் இரா.அறவேந்தன் நூல்களைப் பெற்றுக்கொண்டு முதன்மையுரையாற்றினார்.   விழாவில் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை …

ஒரு கையில் ஓசை எழுப்பும் மாணாக்கியர் சௌசன்யா

   ஆந்திர மாநிலம் நிசாமாபத்தில்  சௌசன்யா என்னும் பொறியியல் மாணாக்கி, ஒரு கை ஓசை எழுப்பி கின்னசு அருவினையேட்டில் இடம்பெற விரும்புகிறார்.   நிசாமாபாத்து நகரில்,  சூரியநகர் பகுதியைச்  சேர்ந்த  பொறியியல் கல்லூரி ஒன்றில்,இளம்தொழில்நுட்பவியல்(பி.டெக்.) படித்து வருபவர் பாப்பா சவுசன்யா(Pabba Soujanya)இவர், தன் கையைத் தானே, உள் நோக்கி மடக்கி, கையின் உட்புறத்தில் தட்டி, ஓசையை எழுப்புகிறார்.  திசம்பர் 25 அன்று, தீட்சப்பள்ளியில்(Dichpally) அலுவலர்கள் முன்னிலையில் இவர், தன் அருவினையை நிகழ்த்திக்காட்டினார்.  அப்பொழுது 4 நிமையம் 56 நொடிகளில் 1,150 தடவைகள் ஒற்றைக்கையால் தட்டி…

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் சிறுவர் பாடல் போட்டி

பரிசு உருவா 1000.00   பாடல்அனுப்ப வேண்டிய கடைசிநாள் 2014 சனவரி 28 சிறுவர்கள் பாடிமகிழ்தற்கேற்ற இனிய 12 வரிப்பாடல்கள் 5 பாடல்கள் எழுத வேண்டும். முதற்பரிசு 500.00 உருவா இரண்டாம் பரிசு 300.00  உருவா மூன்றாம் பரிசு 200.00 உருவா நெறிமுறைகள் 1.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. 2.பிறமொழிச் சொற்கள் கலவாத தனித்தமிழில் பாடல்கள் அமைய வேண்டும். 3.அறிவியல்,விளையாட்டு,இயற்கை,பகுத்தறிவு,முதலிய பாடுபொருள்களைக் கொண்டு எளிமையாக இருத்தல் வேண்டும். 4.இதுவரை வெளிவராத பாடல்களை மட்டுமே போட்டிக்கு அனுப்ப வேண்டும். 5.பாடல்கள் தாளின் ஒருபக்கம்மட்டும் இருத்தல் வேண்டும். தாளின்…

தேவயானியும் இந்திய அரசின் முகங்களும் – இதழுரை

  தேவயானி யார்? நாட்டிற்காக உழைக்கும் நல்லோர் எனப் பாராட்டு பெறுபவரா? மக்களுக்காகப் பாடுபடும் பண்பாளர் என்று  போற்றப் பெறுபவரா? பதவியில் நேர்மை மிக்கவர் என்ற சிறப்பைப் பெற்றவரா? இதற்கு முன்பு வரை ஆதர்சு ஊழல்தான்  அவர் அடையாளமாக இருந்தது. நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை மதிக்கும் வகையிலும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் மகாராட்டிர அரசு கட்டித்தந்ததுதான் ஆதர்சுவீடுகள். பொதுவாகவே அரசு குடியிருப்பில் பெறுவோர்  வேறு எங்கும் சொந்த   வீடு வைத்திருக்கக்கூடாது என்பதுதான் விதி. மகாராட்டிர அரசிலும் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால்…

புரட்சியாளர் பெரியார்

  – தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் இன்று பெரியார் எனின், யாவரும் அவர் ஈரோட்டு வே. இராமசாமி என அறிவர். “பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே” என்று பாரதியார் பாடினாலும் அது நிறைவேறியது பெரியார் அவர்களின் பெருந்தொண்டினால்தான் என்பது உலகறிந்த உண்மை. நான்கு வகை வருணமுறை நிலை நாட்டப்பட்டு இந்நாட்டுத் தொல்குடிப் பெருமக்கள் எல்லாரும் சூத்திரர் என்று அழைக்கப்படும் இழிநிலை வேரூன்றி இருந்தது. பிறப்பால் உயர்வு தாழ்வு கருதப்பட்டத் தமிழ்ப் பெருமக்கள் சாதி வேறுபாடுகளால் அலைப்புண்டு தீண்டாமை, பாராமை முதலியவற்றிற்குப் பெருமதிப்புக்…

தமிழிசை வாழ்கிறதா? வீழ்கிறதா? – 2

  – இலக்குவனார் திருவள்ளுவன்  (முன் இதழ்த் தொடர்ச்சி)             பிற இசைக்கு மூலமான தமிழிசைப் பாடல்கள் மேடைகளில் ஒதுக்கப்பட்டு, “துக்கடாப் பாட்டு” என்றும்  “சில்லறை: என்றும் “உருப்படி” என்றும் அழைக்ககப்பட்டமைக்குக் காரணம் என்ன? இசைத்தமிழ் நூல்கள் எவ்வாறு கேடுற்று அழிந்தன? “இசைத்தமிழ் நூல்கட்குக் கேடுவரக் காரணம் போலியாரியரே” என்கிறார் சூரியநாராயண(சாசுதிரியா)ர் என்னும்  இயற்பெயர் கொண்ட பரிதிமாற் கலைஞர். தமிழின் செம்மொழித் தகுதிகளைத் திறம்படவிளக்கியவர் இவர். “தமிழரிடத்திருந்த பல அரிய விசயங்களையும் மொழிபெயார்த்துத் தமிழர் அறியும் முன்னரே அவற்றைத் தாம் அறிந்தனர் போலவும்; வடமொழியினின்றுமே…

தொல்காப்பிய விளக்கம் – 6 (எழுத்ததிகாரம்)

 பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நூன்மரபு   21. இடையெழுத்து என்ப ய, ர, ல, வ, ழ, ள.   ய, ர, ல, வ, ழ, ள என்பன இடையெழுத்துகள் என்று சொல்லப்படும்.   மெய்யெழுத்துகளை வல்லினம், மெல்லினம், இடையினம் என வகுத்திருப்பது அவற்றின் ஒலிப்பு முறையால் ஆகும். மேலைநாட்டு மொழிநூலார் எழுத்துகளின் பிறப்பிடத்தால் வகைப்படுத்தியுள்ளனர்.   22. அம்மூவாறும் வழங்கியல் மருங்கின் மெய்ம்மயக்கு உடனிலை தெரியுங்காலை   ஆராயுமிடத்து, அங்ஙனம் மூவினமாக வகுக்கப்பட்ட பதினெட்டு மெய்களும், மொழிப்படுத்தி…

சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிப்பு: தமிழில் ‘கொற்கை’ புதினத்திற்கு விருது

   2013- ஆம் ஆண்டுக்கான சிறந்த இலக்கியப் படைப்புகளுக்குரிய சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அகாடமியின் தலைவர் விசுவ நாத்து பிரசாத்து திவாரி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள், நூலாசிரியர்களின் பட்டியலை 18.12.13 புதன்கிழமை அன்று வெளியிட்டார்.   தமிழ்,வங்காளம், உருது,  தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான 21 மொழிகளில் கவிதை,  புதினம், சிறுகதை,  தன்வரலாறு ஆகிய பிரிவுகளில் சிறந்த படைப்புகள் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.   தமிழில் ‘கொற்கை’  என்னும் புதினத்திற்காக  ஆசிரியர்  சோ டி குரூசுக்கு வழங்கப்படுகிறது. கவிஞர்களுக்கு இந்த ஆண்டு…

மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 4

( 22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி) எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழிழ மக்களே, இன்றைய நாள் எமது தேசத்து விடுதலை வீரர்களின் நினைவு நாள். தாயக விடுதலையை தமது உயிரிலும் மேலாக நேசித்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் விடுதலை வீரர்களை இன்று நாம் எமது இதயத்துக் கோயில்களில் சுடரேற்றிக் கௌரவிக்கிறோம். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள்…