கால்டுவெல் 200ஆவது பிறந்தநாள் விழா & நாரண.துரைக்கண்ணன் நூற்றாண்டு விழா
அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் ஆடி 25, 2045 / ஆக. 17, 2014
மத்தியில்ஆட்சி மாறினாலும் மாறாத் தொல்லை – புலவர் சா.இராமாநுசம்
மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும்இல்லை-ஆட்சி மத்தியில் மாறினாலும் மாறாத்தொல்லை ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்னதெல்லாம் –மோடி அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம் தூற்றுவதாய் எண்ணாதீர் போகும்போக்கே –எடுத்து துல்லியமாய்க் காட்டுதந்தோ உற்றுநோக்க நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியே – ஐயா நீங்களுமா..! போவதென்ன? வருதல் பழியே! அழுகின்ற மீனவரின் அழுகுரலும் ஓயவில்லை – நாளும் அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரும் காயவில்லை எழுவரவர் விடுதலையும் என்னநிலை ஆயிற்றே – அந்தோ! ஈழத்தில் தமிழருக்கும் நாதியற்றுப் போயிற்றே உழுவார்க்குஊக்கத்தொகை ! நெல்லுக்கேமறுப்பதா!- இந்த உலகுக்கே அச்சாணி!அவன்கழுத்தைஅறுப்பதா! எழுவாரா ! தொழில்செய்ய!…
. . . முகவரி அற்றவளா? – நூல் வெளியீட்டு விழா
தமிழீழப் பயணத்தின் நினைவுகளோடு மாளவி சிவகணேசன் எழுதிய என் தாய்நாட்டில் நான் முகவரி அற்றவளா? நூல் வெளியீடு ஆடி 17, 2045 / ஆக.2, 2014 மாலை 6.00 சென்னை 600 004 வைகோ வெளியிட காசி ஆனந்தன் பெறுகிறார்.
அறவாணர் அருவினை விருதாளர் அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லன் வாழ்கவே!
அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் தலைமையில் இயங்கும் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை இவ்வாண்டு ‘அறவாணர் சாதனை விருதினை’, அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு வழங்குகிறது. புதுவைக்குயில் வழியிலான தனித்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு இவ்விருது வழங்குவது பெரிதும் பொருத்தமுடைத்து. ஆடி 24, 2045/9.8.2014 காலையில் சென்னைத் தமிழ்க் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் அனைத்திந்திய இவ் விருது வழங்கப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னைத்துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு முனைவர் க.தமிழமல்லன் அவர்களுக்கு விருது வழங்கி வாழ்த்துகிறார். பிறப்பு புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திரு.பொ.கண்ணையன், திருவாட்டி க.தனலட்சுமி ஆகியோரின் அருந்தவப்புதல்வராக ஆனி…
அசோகர் காலத்திற்குப் பிற்பட்டதே சமற்கிருதம் – வழிப்போக்கன்
‘சமசுகிருதம் முதலில் தோன்றியதா…அல்லது தமிழ் முதலில் தோன்றியதா’ – நீண்ட காலமாக நீண்டுக் கொண்டு இருக்கும் ஒரு விவாதம்.இதனை நாம் இப்பொழுது பார்க்க வேண்டியதன் காரணம் இம்மொழிகளைப் பற்றி அறியாமல் இந்தியாவின் அரசியல் வரலாற்றினையோ ஆன்மீக வரலாற்றினையோ நாம் இன்று நிச்சயம் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது. சரி…இப்பொழுது பதிவுக்குச் செல்வோம். இன்று பெரும்பாலான மக்கள் சமசுகிருதத்தினையே முதல் மொழி என்று கருதிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு முழு முதற்க் காரணம் நாம் முதல் பதிவில் கண்ட சர் வில்லியம் சோன்சும் மாக்சு…
தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி
தனித்தமிழ்இயக்கம், புதுச்சேரி தனித்தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி பரிசு 3000.00 உருவா கதைகள்வந்துசேரவேண்டியகடைசிநாள்: 31.7.2014 முகவரி : முனைவர்க.தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ்இயக்கம், 66,மாரியம்மன்கோயில்தெரு,தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009 தொ:0413-2247072 நெறிமுறைகள்: 1. அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள் பிறமொழிப்பெயர்கள்கலவாதநடையில்எழுதப்படல்வேண்டும். 2. கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும். ஒருபடியில்மட்டும்பெயர், முகவரிகளைத்தனித்தாளில்இணைத்துஅனுப்புக. கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர்இருக்கக்கூடாது. 3. மொழிபெயர்ப்பு, முன்னரேவெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா 4. தேர்தெடுக்கப்பட்டகதைகள்‘வெல்லும்தூயதமிழ்’மாதஇதழில்வெளியிடப்படும். விருப்பம்உள்ளவர்கள்அதற்கானவிலைஉருவா 20.00 இணைத்துஅனுப்பவேண்டும் 5. நடுவர்தீர்ப்பேஇறுதியானது . 6. சிறுகதைப்படைப்பாளர்உறுதிமொழிஇணைக்கவேண்டும் பொறிஞர்இரா.தேவதாசுஇவ்வாண்டு பரிசுகள்வழங்குகிறார். இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500 இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000 இரண்டுமூன்றாம்பரிசுகள்…
பள்ளுபாடலுக்குத் துள்ளியாடுவோம்! – சொ.வினைதீர்த்தான்
சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க சிறப்பு கொண்டது பள்ளு இலக்கியம். 18 ஆம் நூற்றாண்டு மக்கள் வாழ்க்கையைக் கம்பனின் கவிநயம்போல் இனிய கூறும் இலக்கியம் முக்கூடற்பள்ளு. இதன் சிறப்பு குறித்துத் திரு சொ.வினைதீர்த்தான் “பள்ளு இலக்கியம்-முக்கூடற்பள்ளு” என்னும் தலைப்பில், ஆனி 28, 2045 / 12.07.2014 சனிக்கிழமையன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க இலக்கியக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். காரைக்குடியில் ஒவ்வொரு திங்களும் இரண்டாவது சனிக்கிழமையன்று மாலை, சங்கத்தின் சார்ப்பாக இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2004 தொடங்கி நடக்கிற நிகழ்வில் எழுபத்து நான்காவது…
புத்தர் தென்தமிழ் தெரிந்தவரே!
கௌதமபுத்தரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கதை கோப்புடன் கூறும் இலலிதாவித்தாரம் என்னும் வடமொழி வரலாற்று நூலொன்றினுள் கௌதமபுத்தர் தம் இளமையில் கற்றறிந்த மொழிகளுள் திராவிடம் அல்லது தமிழ் எனப்படும் மொழியும் ஒன்றெனக் குறிக்கப்படுகிறது. இந்நூல் சீனமொழியுள் கி.பி. முதல் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதென்றும் ஆசிரியர் ஐசக்தம்பையா தாம் எழுதியுள்ள சிவனடியாரின் அருட்பாக்கள் என்னும் ஆங்கில நூலில் குறிக்கின்றார். – குறள்நெறி: ஆனி 32, 1995 / 15.07.64
பாராட்டிற்குரிய மராத்தியத் திங்களிதழ் தமிழ் இலெமூரியா
தமிழ் இலெமூரியா – இந்தியாவில் தாய்த் தமிழ்நாட்டிற்கு வெளியில் மகாராட்டிரா மாநிலத்திலிருந்து தமிழ்மொழி, தமிழ் இனம் சார்ந்து அறிவார்ந்த செய்திகளைத் தாங்கி வரும் ஒரு சிறப்பான மாத இதழாகும். கடந்த ஏழு ஆண்டுகளாக, தமிழினம், தமிழ் மொழி என்கிற இரு கரைகளுக்கிடையே பயணிக்கும் இவ்விதழில் தமிழ் மக்களிடையே மாந்த நேய உணர்வு, மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி, வரலாற்று துய்ப்புகள் போன்றவற்றை நல்ல தமிழில் எடுத்தியம்பும் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழ் இதழ்களிலிருந்து சற்று வேறுபட்ட கண்ணோட்டத்தில்…
தமிழைச் சிதைக்கலாமா? இலக்குவனார் திருவள்ளுவன் நேர்முகம் – கவிமணி
நாள் வைகாசி 16, 2045, மே 30, 2014 பக்கம் 16 “தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்” என்னும் நிகழ்ச்சி நடந்ததைக் கேள்விப்பட்டோம். தமிழ்க்காப்புக்கழகம், மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையுடனும் பிற தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி யிருந்தது. இது குறித்து மேலும் அறியத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனைச் சந்தித்தோம். அப்பொழுதுதான் இது சாதாரணமான கூட்டம் அல்ல! அபாயச்சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது எனப் புரிந்து கொண்டோம். அவரிடம் பேசிய விவரம் வருமாறு: தமிழுக்கான…
இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி:
அ பெ கா பண்பாட்டு இயக்கம் – புதுக்கோட்டை, தமிழ்நாடு பெருமதிப்பிற்குரியீர் வணக்கம் . தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய – பெரியாரிய -மார்க்சிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையைக் கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது . அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வாண்டு எழுத்தாளர்கள், ஆய்வாளர்களுக்கான 25 தலைப்புகளிலான இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது . ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும் தேர்வு பெறும் …
வல்லமை வழங்கும் கண்ணதாசன் கட்டுரைப் போட்டி
அன்பு நண்பர்களே, நம் வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். நம் அன்றாட வாழ்வின், சுக, துக்கங்கள் அனைத்திலும்கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் நம் உடன் பயணிப்பவை; அவரது இலக்கியப் படைப்புகள், தனித்த புகழ் வாய்ந்தவை. அவரது அர்த்தமுள்ள இந்து மதம், இன்றும் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் சமூக. அரசியல் களத்திலும் கண்ணதாசன், தீவிரமாகப் பங்கேற்றார். கண்ணதாசனை நினைக்குந்தோறும் நமக்கு எவ்வளவோ எண்ணங்கள் தோன்றும். கண்ணதாசனை எப்படிப்…
