அனிதா உயிரீகத்தை ஏளனம் செய்த இலலிதா குமாரமங்கலத்திற்குக் கடுங்கண்டனம்!

  மாணவி அனிதா உயிரீகத்தை ஏளனம் செய்த இந்திய மகளிர் ஆணையத் தலைவர் இலலிதா குமாரமங்கலத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!   மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் அருணா கண்டன அறிக்கை!     மாணவி அனிதா மரணம் என்பது அவரது தலையெழுத்து என்றும், ஒவ்வொரு மாநிலத்தவரும் அவரவர் மொழிகளை வலியுறுத்தினால் ‘தேசம்’ என்னாவது என்றும் கூறி அனிதாவின் மரணத்தைச் சிறுமைப்படுத்திய தேசிய மகளிர் உரிமை ஆணையத் தலைவர் இலலிதா குமாரமங்கலம் கூற்றை மகளிர் ஆயம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.    பத்திரிக்கையாளரும் சமூக செயல்பாட்டாளருமான…

பொது(நீட்)தேர்வை எப்பாடுபட்டாவது விரட்டியடிக்க வேண்டியது நமது கடமை – இராமதாசு

பொது(நீட்)தேர்வை எப்பாடுபட்டாவது விரட்டியடிக்க வேண்டியது நமது கடமை பணம் இருந்தால்தான் மருத்துவக்கல்வியா? – இராமதாசு கேள்வி பணம் இருந்தால் மட்டும்தான் மருத்துவக் கல்வியைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலை உருவாகி வருவது மன்பதைக்கு நல்லதல்ல என்று பாமக நிறுவனர்  இராமதாசு தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு (நீட்) அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதல்ல. சிற்றூர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதுதான் என்பதை  மெய்ப்பிக்கும் வகையில் புள்ளி விவரங்கள் வெளியாகி வருகின்றன. பணம் இருந்தால் மட்டும்தான் மருத்துவக் கல்வியைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியும்…

தமிழியலின் பயணவெளி – பன்னாட்டுக்கருத்தரங்கம், மதுரை

  ஐப்பசி 17, 2048 /வெள்ளி/ நவம்பர் 03, 2017 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியற்புலம் தமிழ் ஆய்வாளர் மன்றம் தமிழியலின் பயணவெளி – பன்னாட்டுக்கருத்தரங்கம்   கட்டுரைகள் அனுப்புதற்குரிய கடைசி நாள் : புரட்டாசி 13, 2048 வெள்ளி செட்டம்பர் 29,2017 அனுப்பவேண்டிய மின்வரி : tamilrsamku@gmail.com      செ.மனோகரம்மாள், செயலர் பேசி 9600733053, 9626832556  

உயர்நீதிமன்றத்தில் தமிழ் – காலவரையற்ற பட்டினிப் போராட்டம்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் – காலவரையற்ற பட்டினிப் போராட்டம்   வணக்கம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி 2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனமாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு பலமுறை வலியுறுத்தியும் இன்று வரை தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.    இந்தியா விடுதலையடைந்து ஒன்றரை ஆண்டுகளில் இராசசுதான் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது. தொடர்ந்து உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது.    2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனமாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு 2015இல் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழு…

பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி நீக்கம் – குலக்கல்விக்கே வழி வகுக்கும்! – இராமதாசு கண்டனம்

பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி  நீக்கம் – குலக்கல்விக்கே வழி வகுக்கும்! இராமதாசு கண்டனம்   சென்னை: பள்ளிகளில் 5 மற்றும் 8- ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை  நீக்குவதால் அது குலக்கல்வி முறைக்கே வழிவகுக்கும் என்று பாமக நிறுவனர்  மரு.இராமதாசு கண்டனம் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதிலும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன்  நீக்கப் போவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாசு சவடேகர்…

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தனித்தன்மையைக் காக்க இணையுமாறு வேண்டுகோள்!

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தனித்தன்மையைக் காக்க இணையுமாறு வேண்டுகோள்! அன்புடையீர், வணக்கம். தமிழ்நாட்டில்(சென்னையில்) இயங்கும் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தைத் திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும்  முயற்சியில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை இறங்கியுள்ளதை அறிவீர்கள்.   தமிழ்வளர்ச்சிப்பணிகளையும் ஆய்வுப்பணிகளையும் முற்றிலும்  நிறுத்துவதற்கான முயற்சி இது. இதனை முறியடிக்கும் வகையில் வரும் ஞாயிறு ஆடி 07, 2048 / 23.07.207 அன்று  முற்பகல் சென்னையில் தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள், அனைத்திந்தியத் தமிழ்ப்பேரவை ஆகிய உறுப்பு அமைப்புகள் சார்பாகக் கூட்டம் நடத்த உள்ளோம். இதில்…

4 நாள் கல்வெட்டுப் படிப்புப் பயிற்சி – தஞ்சாவூர்

தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சை 4 நாள் கல்வெட்டுப் படிப்புப்  பயிற்சி ஆடி 5-8, 2048 / சூலை 18 – 21 கங்கை கொண்ட சோழபுரம்                                                                          இவ்வாண்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் 2017 ஆம்…

சுவிசு நாட்டில் கலை இலக்கியப் பெருவிழா

சுவிட்சர்லாந்தில் பெரன் (Bern) நகரில் இனிய நந்தவனம் நடத்தும் கலை இலக்கியப்  பெருவிழா புரட்டாசி 08-15, 2048 / செட்டம்பர் 24 – அத்தோபர் 01, 2017 அன்புடன் இனிய நந்தவனம்

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா:ஆய்வுச் சுருக்க நாள் நீட்டிப்பு

  உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு, மலேசியா உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாளில் நடைபெற உள்ள உலகத்தமிழ் இணைய மாநாட்டிற்கான ஆய்வுச் சுருக்கம் அனுப்பும் இறுதி நாள்  ஆனி 13, 2048 /30  சூன் 30, 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளோர்  விரைவாக அனுப்ப வேண்டப்படுகின்றனர். கட்டுரை வரப் பெற்ற 3 நாளில் ஏற்பும் அறிவிக்கப்பெறும். முழுமையான கட்டுரை வர  வேண்டிய நாள் :…

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா

உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு, மலேசியா உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கீழ்வரும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் படைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி முதலியன) எழுத்துப் பகுப்பாய்வு – Text Analytics/Mining (ex: word frequency, paraphrases, automatic textual encoding), உணர்ச்சிப் பகுபாய்வு- Sentiment Analysis, ஆவண வகைப்படுத்தல் – Document Classification, உருப்பொருள் பிரித்தெடுத்தல் –…