ஆண்டவர்கள் ஓய்வெடுக்கட்டும்! ஆண்டவன் கட்டளை இது! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆண்டவர்கள் ஓய்வெடுக்கட்டும்! ஆண்டவன் கட்டளை இது! தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட கட்சிகள், நிறைகளும் குறைகளும் கொண்டவையே! இவ்வாறு இருப்பது இயற்கையே! குறிப்பாக இப்பொழுது தேர்தல் களத்தில் உள்ள செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் பாராட்டத்தக்கப் பணிகளும் ஆற்றி உள்ளனர். ஆனால், அதே நேரம், வாயில் தமிழ் முழங்கிக்கொண்டே, செயலில் தமிழை மறந்தவர்களாக, இருவரும் உள்ளனர். எதை எதையோ கட்டணமாகத் தர முடிபவர்களால் கல்வியையும் மருத்துவ வசதியையும் ஏன் இலவயமாகத் தர இயலவில்லை? பொருள்களைக் கட்டணமின்றித் தரும்பொழுது அவற்றின் கொள்முதலில் ஆதாயம் பார்க்க இயலும். கல்வியையும்…
தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்! தேர்தல் ஆணையம் எப்படிப் பணியாற்றினாலும் ஒவ்வொரு தரப்பாரும் அவரவர் கண்ணோட்டத்தில் குறை கூறத்தான் செய்வர். என்றாலும் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுவோர் மனச்சான்றுடன் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையரின் அறிவிப்புகளைப் பார்க்கும் பொழுது மலிவான விளம்பரத்தில் காட்டும் நாட்டத்தை உரிய கடமையாற்றுவதில் காட்டவில்லை என்றுதான் தெரிகின்றது. எடுத்துக்காட்டிற்கு ஒன்று:- தேர்தல் ஆணையம் அவ்வப்பொழுது ஊர்திகளை மடக்கிப் பணங்களைப் பறிமுதல் செய்வதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், தேர்தல் ஆணையரின் அறிவிப்பின்படி, இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணத்தில்…
தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 தொடர்ச்சி) 2/2 தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 2/2 3.தொகுதிச் சார்பாளரைத் திரும்ப அனுப்பும் முறை ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பிற வகை மக்கள் சார்பாளர் சரியாகச் செயல்படாதபொழுது அவரைத் திருப்பியனுப்பும் உரிமை மக்களுக்கு வேண்டும் என்கின்றனர். ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதே பதவிக்காலமாகிய ஐந்தாண்டு முழுமையும் அவர் சிறப்பாகச் செயல்படுவாரா என்று ஆராய்ந்துதான்…
தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
1/2 தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 உலக நாடுகளில் பெரிய மக்களாட்சி அமைப்பு கொண்ட நாடு இந்திய ஒன்றியம். இங்குள்ள தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் இங்குள்ள தேர்தல் முறை சிறந்த ஒன்றேயாகும்.நாம் கையாளும் முறையால் சில தவறுகள் நேர்கின்றன. இதற்கு நாம் சரியான முறையில் கையாள வேண்டுமே தவிர, இந்த முறையையே மாற்ற வேண்டும் என்று எண்ணுவது தவறாகும். சீர்திருத்தம் என எண்ணிக் கொள்வோர்…
பெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல் – குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்!
பெங்களூரு திருவள்ளுவர் மன்ற நூலகம் சூறையாடல் – குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்! அறிவுப் போராட்டத்துக்கான படைக்கலன்கள் செய்யும் படைவீடு நூலகம்(இங்கர்சால்). நூலகம் இருக்குமிடத்தின் ஒளிவிளக்கு. உலகில் வலிமையான ஆயுதம் எழுதுகோல்; அத்தகைய எழுதுகோலைப் பயன்படுத்துவோரைப் பட்டை தீட்டுவன நூலகங்களே!. எல்லா நிலையினருக்கும் அறிவுச் செல்வங்களை வாரி வழங்கும் வாயில்களாக விளங்குவனவும் நூலகங்கேள! நாட்டின்மீது போர்தொடுத்தாலும் நூலகங்கள்மீது கைவைக்காதவனே சிறந்த தலைவன். வைகாசி 18, 2012 / மே 31, 1981 அன்று யாழ்நூலகம் எரிக்கப்பட்டது! கிடைத்தற்கரிய நூல்கள் அடங்கிய ஏறத்தாழ…
மதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா!
மதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா! துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (திருக்குறள் 926) என்று மது அருந்துநருக்கும் நஞ்சு அருந்துநருக்கும் வேறுபாடில்லை என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அரசே குடிமக்களைக் குடிகார மக்களாக்கி நாளும் நஞ்சுஊட்டுவது கொடுமையினும் கொடுமையன்றோ! இக்கொடுமையை ஒழிக்க மன்பதை ஆர்வலர்களும் மக்களும் சில கட்சிகளும் பல அமைப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால், மது ஒழிப்புப் போராளிகளை மடியச் செய்யும் அரசு நாடகமாடுகிறது. மதுவிலக்கு என்ற சிந்தனை இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முதலில் தமிழ்நாட்டிற்குத்தான்…
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ! – இலக்குவனார் திருவள்ளுவன்
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ! பொதுவாக நாம் ஒருவரை எப்பொழுது நேரில் சென்று ஆறுதல் சொல்வோம்? அவர் தோல்வியைச் சந்தித்தால், அவர் வருத்தத்தில் இருந்தால், அவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர் நேர்ச்சியில்(விபத்தில்) சிக்கியிருந்தால், தொழிலில் எதிர்பாராச் சரிவைக் கண்டிருந்தால், இத்தகைய துன்பத்துயரத்தில் மூழ்கியிருந்தால், அவருக்கு ஆறுதல் தரவும் நம்பிக்கை தரவும், உங்கள் பக்கம் இருக்கிறோம், கவலற்க எனச் சொல்வதற்காக நேரில் சென்று தேறுதல் சொல்வதுதானே வழக்கம். ஒருவருக்கு ஒருவர் மற்றொருவருக்குப் பணஉதவி போன்ற ஏதேனும் உதவி செய்தால், உதவி பெறுபவர்தானே உதவி வழங்குநரை…
மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா? ஆளுங்கட்சிக்குத் தண்டனையா?
மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா? ஆளுங்கட்சிக்குத் தண்டனையா? செய்தியும் சிந்தனையும் [செய்தி : கடந்த மாசி 02, 2047 / பிப்பிரவரி மாதம் 14 அன்று திருச்சிராப்பள்ளியில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. அங்கு மதுஒழிப்பை வலியுறுத்திப்பேசிய, மாநாட்டினை நடத்திய மக்கள் அதிகாரம் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் சி. இராசு, செயற்குழு குழு உறுப்பினர் காளியப்பன், தாவீது இராசு, சென்னை ஆனந்தியம்மாள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்புக் குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு அரசின் சாராயக்கடை( தாசுமாக்கு) பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்…
பிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு
பிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு விசயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்க முயன்ற ஒவ்வொரு கட்சியும் அவர் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்ததும் அவரையும் வைகோவையும் தாழ்த்தியும் பேசியும் எழுதியும் வருகின்றனர். அப்படியானால் இவர்கள் ஏன், விசயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்கப் பலவாறாக முயன்றனர். விசயகாந்துடன் இணைந்ததால் ம.ந.கூட்டணியைத் தாழ்வாகக் கூறுகின்றனரே, அப்படியானால், தங்களைவிட இக்கூட்டணி உயர்வானது, அத்தகைய உயர்வான கூட்டணி ஏன் விசயகாந்துடன் இணைந்தது என்கின்றனரா? தேர்தலில் கூட்டணி என்பது வெற்றிக்கான தொகுதி உடன்பாடேயன்றிக் கொள்கைக் கூட்டணியன்று. எனவே, வேறுவகையில்…
திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! தேர்தல் அரசியலுக்காகப் பெரும்பான்மைக் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்போக்கு வரலாற்றை மறைப்பதாகும். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (திருக்குறள் 504) எனத் தெய்வப்புவலர் திருவள்ளுவர் நமக்கு வழிகாட்டியுள்ளார். எதிர்க்கும் கட்சிகளின் நிறைகளைக் கூறுவதற்கு மனம் வராதுதான். அதற்காக ஆற்றிய யாவும் தீமை என்பதுபோல் பேசக்கூடாதல்லவா? குறைந்தது குறைகளைப் பட்டியலிட்டு இத்தகைய குறைகளுக்காக இவற்றை ஆட்சிக்கு மீண்டும் வரச்செய்யக்கூடாது என்று சொல்லாம் அல்லவா? …
தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்! நிகழ இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலில்(2016) பன்முனைப் போட்டிகள் உள்ளன. ஒவ்வோர் அணியும் நம்பிக்கையுடன் உள்ளதாகத்தான் கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் தேர்தல் நெருங்க நெருங்க இப்போதைய சூழலில் மாற்றம் ஏற்படும். எனவே, சிலர் நம்பிக்கைகள் பொய்த்துப்போகும். சிலர் எதிர்பார்த்ததைவிட வாக்குகள் கூடுதலாக வாங்கலாம். கூட்டணியாகப் போட்டியிடாத கட்சிகளும் தேர்தலுக்குப்பின் புதிய கூட்டணி அமைக்கலாம். எனினும் இன்றைய நம் கடமை, யாருக்கு நம் மதிப்பார்நத வாக்குகளை அளிக்க வேண்டும் என ஆராய்ந்து வாக்குரிமையைப் பயன்படுத்துவதுதான். யார் வெற்றி பெற்றால் என்ன…
ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்!
ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்! செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு (திருக்குறள் 86) என்னும் திருவள்ளுவர் நெறி தமிழர்க்கே உரிய பண்பு என்கிறோம். தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும் மிகப்பே ரின்பம் தருமது கேளாய் (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை) என இளங்கோஅடிகள் கூறும் அடைக்கலப்பண்பில் சிறந்தவர்கள் நாம் என்கிறோம். ஆனால், இவையெல்லாம் யாருக்காக? நம்மவர் – தமிழினத்தவர் – எனில் விருந்தினராகக் கருதுவதும் கிடையாது; அடைக்கலம் தருவதும் கிடையாது. ஒருவேளை அடைக்கல நாடகம் ஆடினாலும் அவர்களை உள்ளத்தாலும்…
