இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 14 : இலக்குவனார் திருவள்ளுவன்
(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 13 தொடர்ச்சி) 14 பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை – 02 திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரை மு.வரதராசனார் உரை மணக்குடவர் உரை ஞா. தேவநேயப் பாவாணர் அறிஞர் போப்பு மொழிபெயர்ப்பு கவியோகி சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்ப்பு கலைஞர் உரை உள்ளன. இவற்றுள் அறிஞர் போப்பு உரையில் மட்டும் எவ்வகைத் தேடுதல் பொறியும் இல்லை. பிறவற்றுள் தேடுதல் தலைப்பின் கீழ்ப் பக்கம் தேடலும் சொல் தேடலும் உள்ளன. உரைப்பக்கங்களில் பக்க எண் தேடல் உள்ளன. இசை வடிவில் குறள் பகுதி…
கணித்தமிழ்ச்சங்கத்தலைவர் ஆனந்தனுக்கு நன்றி.
கணித்தமிழ்ச்சங்கத்தலைவர் ஆனந்தனுக்கு நன்றி. தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. என்றாலும் கருத்தரங்கத்தின் முதல் தலைப்பே, ஓலைச் சுவடி முதல் கையகச் சாதனங்கள் வரை – தமிழ் வரிவடிவத்தின் படிநிலை வளர்ச்சி என உள்ளது. நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு இருக்க வேண்டும் . ஆதலின் அதனை நீக்க வேண்டும் எனக் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். இது குறித்துக் கணித்தமிழ்ச்சங்கத்தலைவருக்கு தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம்…
திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 தொடர்ச்சி) 2 அரணறை – safety room ‘அரண்’ எனத் திருக்குறளில் தனி அதிகாரமே(எண் 75) உள்ளது. இவ்வதிகாரத்திலுள்ள ஒவ்வொரு குறளிலும் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளதுபோல், பிற அதிகாரங்களிலும் 4 இடங்களில் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் ‘அரண்’ 31 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது; ‘அரணம்’ என்பது 13 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. படைத்துறையில் இடம் பெற்றுள்ள முதன்மையான கலைச்சொற்களில் ஒன்று அரண். அரண்சூழ்ந்த மனையையே அரண்மனை என்றனர். கரூவலங்களில் உள்ள காப்பு அறையை அரணறை –…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 13 : இலக்குவனார் திருவள்ளுவன்
(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 12 தொடர்ச்சி) 13 அட்டவணை – 01 [+ குறியீடு மட்டும் இருப்பின் சொல் தேடல் இருப்பதைக் குறிக்கும். பக்க எண் +என்றால் பக்க எண் தேடல் இருப்பதையும் பாடல் + அல்லது பா+ என்றால் பாடல் எண் தேடல் இருப்பதையும் அதிகாரம் + என்றால் அதிகார எண் தேடலையும் குறிக்கும். பா எண் என்பது பாடல் அல்லது நூற்பா எண்ணைக் குறிக்கும். அட்டவணைப் பத்தி எண் 2 இல் குறிப்பிடப்படும் சொல் என்பது முகப்புப்பக்க அட்டவணையில் அமையும்…
வலைமச் சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
2 வலைமம் – Network வலைமச் சொற்களில் சில வருமாறு : – தே.வா.வா.ப.வலைமம் நாசா என்பது National Aeronautics and Space Administration என்பதன் ஆங்கிலத்தலைப்பெழுத்துச் சொல்லாகும். தமிழில் தேசிய வானூர்தி– வான்வெளி பணியாட்சி எனலாம். சுருக்கமாகத் தே.வா.வா.ப. எனலாம். ஆதலின்தே.வா.வா.ப.வலைமம். NASA communications network (nascom) முனைப்பு மின் வலைமம் Active electric network அகப்பரப்பு வலைமம் / அ.ப.வ Local Area Network / LAN அகல்பரப்பு வலைமம் / அக.ப.வ Wide Area Network / WAN அகலக்கற்றைவலைமம்…
எல்லாம் தமிழ்நிலமே! – இலக்குவனார் திருவள்ளுவன்
எல்லாம் தமிழ்நிலமே! குறுஞ்செய்திகள் சில. புறநானூற்று 6ஆம் 17ஆம் பாடல்களில் தமிழகத்தின் எல்லை வடக்கே பனிமலையாம் இமயமலை என்றும் தெற்கே குமரி என்றும் குறிப்பிடுகின்றன. இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் தமிழ்நிலமே என்னும் பொழுது இதன் ஒரு பகுதியாகிய கருநாடக மாநிலமும் தமிழ் நிலமே. ஊர் என்ற பின்னொட்டும் தமிழுக்குரியதே. எனவே, மைசூர், பெங்களூர், மங்களூர், பிசப்பூர், சிக்மகளூர் எனக் கருநாடகத்தில் அமைந்துள்ள பல ஊர்களும் அவை தமிழ்ப்பகுதியாக விளங்கியமைக்குச் சான்றாகும். எருமையூர் எனத் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட தமிழர் வாழ்ந்த…
வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.
வரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள். தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் நடத்தும் கணித்தமிழ்ச்சங்கத்தின் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. இப்பொருண்மையிலான கருத்தரங்கம், இந்தியத் துணைக்கண்ட மொழிகளுள் முதலில் தமிழில் நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், நெடுங்கணக்கில் இடம் பெறும் எழுத்துகளை வடிவமைப்புத் தோற்றத்திற்காக வெவ்வேறு வகையில் தரப்படும் எழுத்துருக்களைப் பற்றித்தான் இதன் ஆய்வு இருக்க வேண்டும். முன்னரே உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம் போன்ற கணிணி சார் அமைப்புகள் தமிழ் மொழி சார் ஆய்வில் ஈடுபட்டுத் தவறான கருத்துகளை ஊன்ற முயல்வது தவறெனச் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், கருத்தரங்கத்தின் முதல்…
திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
1 இன்றைய கலைச்சொற்கள் பெரும்பான்மையன சங்க இலக்கியச் சொற்கள் அல்லது சங்க இலக்கியச் சொற்களின் மறுவடிவங்களாகத்தான் உள்ளன. அந்த வகையில் சங்க இலக்கியக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்பட வேண்டிய திருக்குறளில் உள்ள கலைச்சொற்கள் பலவும் இன்றும் நடைமுறையில் உள்ளன. திருக்குறளில் உள்ள சொற்கள் பிற சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்களாக அமைவன; பிற சங்க இலக்கியங்களில் இடம் பெறாவிட்டாலும் அக்காலமாக இருக்கக்கூடிய சொற்கள் (இவற்றிற்கு ஆதாரம் கிடையாது.); புதிய சொற்கள் என மூவகைப்படும். இங்கு நாம் திருக்குறளில் இடம் பெற்றுள்ள…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 12 : இலக்குவனார் திருவள்ளுவன்
(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 11தொடர்ச்சி) 84.] சங்க இலக்கிய ஓலைச்சுவடிகள் இவற்றுள் குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலலைபடுகடாம் ஆகியவற்றின் ஓலைச்சுவடிகள் இல்லை. அவ்வாறு இல்லை என்பதற்கான குறிப்புகள் இல்லை. பிறவற்றுள் ‘ஓலை எண் தேடுதல்’ பகுதி மட்டும் உள்ளது. சொல் தேடுதல் அமையவில்லை (பட உரு 67). சிலவற்றுள் மேற்குறித்தவாறு தேடுதல் பகுதி ஓலை எண் வழி அறிவதற்கு உள்ளது. சிலவற்றுள் பின்வரும் வகையில் தேடுதல் பகுதி அமைந்துள்ளது (பட உரு 68). “சுவடி உள்ளடக்கம்” எனக்…
தமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர்! விவரம் அனுப்புவீர்! – தமிழ்க்காப்புக்கழகம்
நாம் தமிழரெனில் உறுதி ஏற்போம்! பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே! தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம். தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து…
தமிழ்வழிக்கல்வி குறித்து செய்திகள் 7 தொ.கா.வில் நான். . . .
புரட்டாசி 11, 2046 / செப்.28, 2015 செய்தி 7 தமிழ்த் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு : இரவு 9.00 – 10.00 மணி கேள்விநேரம் நிகழ்ச்சியில் தமிழ்வழிக்கல்வி குறித்து உரையாடுகிறேன். உடன் தோழர் தியாகுவும் உரையாடுகிறார். மறு ஒளிபரப்பு 12.01 இணையத்தில் காண : http://ns7.tv/ta நிகழ்ச்சியாளர் : செந்தில்; ஒருங்கிணைப்பாளர் : அமீது அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 11 இலக்குவனார் திருவள்ளுவன்
(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 10 தொடர்ச்சி) 46-64.] பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவற்றுள் 19 நூல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நாலடியார், நான்மணிக்கடிகை, கார்நாற்பது, களவழிநாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஐந்திணைஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, இன்னிலை ஆகிய நூல்களின் உரைப்பக்கத்தின் பொருளடக்கப் பக்கத்தில் உள்ள தேடுதல் பகுதியைச் சொடுக்கினால், பக்கம் தேடல், சொல் தேடல் வருகின்றன. பக்கங்களில் பக்க எண் தேடல் மட்டும் உள்ளது….
