தொல்காப்பியமும் பாணினியமும் – 15 : உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன
(தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 15 ஆரியர் வரவு தொல்காப்பியர் காலத்தில்தான் ஆரியம் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கி இருக்க வேண்டும். தமிழகத்தில் முதன் முதலாகக் குடியேறிய வேற்று நாட்டார் வட ஆரியரே. அவருள்ளும் மொழி நூற் புலமையும்ஒழுக்க மேம்பாடும் பிறர்க்கென வாழும் பெற்றிமையும் கொண்ட ஆரியரே தமிழகச் சான்றோருடனும் அரசர்களுடனும் தொடர்பு கொண்டனர். ஆரிய மொழிப் புலவரும் தமிழ் மொழிப்புலவரும் நட்புடன் அளவளாவி உறவாடினர். “கற்றாரைக் கற்றாரே காமுறுவர், அன்றோ?” எவரையும் வரவேற்று இன்ப வாழ்வு…
வெருளி நோய்கள் 871-875: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 866-870: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 871-875 குறியீடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறியீட்டு வெருளி.கருத்துப் பரிமாற்றம் செய்வோர் அல்லது உரையாடுவோர் குழுஉக் குறி முறையில் அல்லது அடையாள முறையில் அல்லது குறியீட்டு முறையில் பேசுவது.கால்கழுவுதல் போன்று இடக்கர் அடக்கலாகச்சொல்வதும் குறியீட்டு உரையேSymbolo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறியீடு.00 குறுகிய பகுதி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறுகிய பகுதி வெருளி.ஒருவருக்குக் குறுகிய பொருட்கள் அல்லது இடங்களைப் பற்றிய வெருளியை ஏற்படுத்துவது.சான்றாகக் குறுகிய நடைபாதை, அடித்தளம் அல்லது மாடிச்சிற்றறை, அல்லது மாடிப்படிகளின் அடிப்பகுதி,…
வெருளி நோய்கள் 866-870: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 861-865: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 866-870 உறுப்பு அளவுகள் இயல்பிற்கு மாறாகக் குறைந்துள்ள குறளன்/குறளி(midgets) தொடர்பான தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் குறளன் வெருளி.குள்ளவாதம், குறுநிலை என்று இதனை அழைக்கின்றனர். பொதுவாக அகவை வந்தும் 147 சிறுகோல்/செ.மீ. அளவிற்குக் குறைவானவர்களே இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள். இவர்களுள் சிலர் சற்று உயரமாக இருந்தாலும் கை, கால் உறுப்புகள் வழக்கத்திற்கு மாறாகக் குறு நிலையிலேயே இருக்கும்.00 குறிகை குறித்த வரம்பற்ற பேரச்சம் குறிகை வெருளி.அடையாளமாகக் காட்டப்பெறும் குறிகை தவறாக இருக்குமோ அதனால் தீய விளைவுகள் வருமோ என்ற…
வெருளி நோய்கள் 861-865: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 856-860:தொடர்ச்சி) வெருளி நோய்கள் 861-865 குளியலறை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குளியலறை வெருளி.Loutro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் குளியல். இந்த இடத்தில் குளிக்கும் இடத்தை – குளியல் அறையை-க் குறிக்கிறது.00 குளியல் தொட்டி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குளியல் தொட்டி வெருளி.மனை வெருளி(oikophobia) உள்ளவர்களுக்குக் குளியல் தொட்டி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 குளிர் பானங்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் குளிர் பானங்கள் வெருளி.பற் சிதைவு, எலும்பு பலவீனம், சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள், செரிமானச் சிக்கல்கள்…
வெருளி நோய்கள் 856-860: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 851-855: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 856-860 குழிப்பந்தாட்ட ஊர்தி(golf cart) மீதான அளவுகடந்த பேரச்சம் குழி யாட்ட ஊர்தி வெருளி.ஆட்ட ஊர்தி வெருளி(Gelandelimophobia) உள்ளவர்களுக்குக் குழியாட்ட ஊர்தி வெருளி வர வாய்ப்புள்ளது.00-857. குழிப்பந்தாட்ட வெருளி – Golfphobiaகுழிப்பந்தாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் குழிப்பந்தாட்ட வெருளி.வளைகோலாட்ட வெருளி(hockey phobia) உள்ளவர்களுக்குக் குழிப்பந்தாட்ட வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 குழிப்பேரி(peach) என்னும் பழத்தின் நிறம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குழிப்பேரி நிற வெருளி.Persi என்பது குழிப்பேரிப் பழமாகும். Persico என்றால் குழிப்பேரி நிறமாகும்.00 குளவி…
வெருளி நோய்கள் 851-855: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 846-850: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 851-855 காழநீர்(காப்பி) முதலான குடிவகைகளுக்குப் பயன்படுத்தப்படும் நெகிழிக் குவளைகள் பற்றிய அளவுகடந்த பேரச்சம் நெகிழிக்குவளை வெருளி. சுருக்கமாகக் குவளை வெருளி எனலாம்.சூடான பானங்கள் நெகிழிக் குவளைகளில் ஊற்றப்படுவது உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும். என்றாலும் இது குறித்து மிகையான பேரச்சம் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். இப்பொழுது அரசே நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளதால் இத்தகைய வெருளி குறையும், மறையும். (பேரச்சம் காழநீர் மீது என்றால் காழநீர் வெருளி என்றே சொல்லலாம்.)இப்பொழுது நெகிழி பயன்பாட்டிற்கே தடை…
குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – தொடர்ச்சி) குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் பெற்றோர் தம் குழந்தையிடம் “வெளியே போனால் காலை உடைத்து விடுவேன்” என்று சொன்னால் வெறுப்பில் சொல்லும் சொற்களா இவை. அவர்கள் தம் பிள்ளையிடம் முட்டாளே என்று சொன்னால் உண்மையிலேயே அவ்வாறு கருதுகிறீர்கள் என்ற பொருளா? உண்மையிலேயே முட்டாளாக இருந்தாலும் அறிவாளியாக எண்ணுவதுதானே பெற்றோர் இயல்பு. அதுபோல்தான் சில நேரங்களில் பெரியார் தமிழைப்பற்றியும் தமிழர்களைப்பற்றியும் சொன்னவையும். எனினும் சில…
வெருளி நோய்கள் 846-850: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 841-845: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 846-850 குருதி ஊசி காயம் தொடர்பான மிகையான பேரச்சம் குருதி ஊசி காய வெருளி.குருதியைக் கண்டும் ஊசி போடுவதாலும் ஊசி போடப்படுவதைப் பார்த்தாலும் காயம் வந்தாலும் பிறர் காயங்களைப் பார்த்தாலும் ஏற்படக்கூடிய அளவுகடந்த பேரச்சங்களை இது குறிக்கிறது.இதனைத் தனி ஒரு வெருளியாகக் குறிப்பிடாமல் குருதி வெருளி, ஊசி வெருளி(நுதி வெருளி/மருந்தூசி வெருளி), உடற்காய வெருளிவகைகளைக் குறிப்பிடும் பொதுச்சொல்லாகத்தான் கையாளுகின்றனர்.00 குருதியைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் குருதி வெருளிகுருதி என்பது தமிழ்ச்சொல்லல்ல என எண்ணிக்…
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 : மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1: தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 2 மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்களின் அளப்பரிய பங்கில் ஒரு பகுதிதான் பதிவுகளில் உள்ளன. அவற்றில் நாமறிந்த ஒரு பகுதியைத்தான் ‘பெண்களின் முதன்மைப் பங்கு’ என்னும் தலைப்பில் முன் கட்டுரையில் பார்த்தோம். எனவே, இன்னும் சொல்வதற்கு மிகுதியாக உள்ளன. எனினும் மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் பெயர்களைப் பார்ப்போம். மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள்…
தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 13 : இடைச்செருகல்கள் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 14 இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள் தொல்காப்பிய இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள் குறித்துப் பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் பின்வருமாறு தெரிவிக்கிறார்:- ”தொல்காப்பியர் இலக்கண முறைமைகளைத் தொடுத்துக் கூறும் அல்லது அடுக்கி வைக்கும் பாங்கு தொன்மைமிக்க தமிழின் இலக்கணச் சீர்மையை மட்டுமின்றி, நம் முன்னோரின் சிந்தனைப்போக்கின் முதிர்ச்சியையும் ஏரணவியலின் தொன்மையையும், அறிவியல் முறைமைப்படத் தரவுகளைத் தொகுத்து வழங்கும் ஆய்வுநெறிமுறைப் பயிற்சியையும் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. தமிழைக் கணிணிமொழி என்று பெருமிதத்துடன் கொண்டாடிக் கொள்ளத் தூண்டுவது எழுத்துப்…
வெருளி நோய்கள் 841-845: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 836-840: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 841-845 குமுகாயச்சடங்குகள், நிகழ்வுகள், போக்குகள் தொடர்பிலான அளவுகடந்த பேரச்சம் குமுகாய வெருளி.ஒன்றுகூடல் நிகழ்வுகள், விருந்துக் கூட்டங்கள்,ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நண்பர்கள் உறவினர்களுடான சுற்றுலாக்கள் என எந்தப் பொது நிகழ்வாயினும் காரணமற்ற பேரச்சம் கொள்வர்.00 காரணமின்றிக் கூடும் கும்பல் பற்றிய அளவுகடந்த பேரச்சம் கும்பல் வெருளி.கூட்ட வெருளியைப் போன்றதுதான் இதுவும். ஆனால், அதனைவிட இதில் பேரச்சம் மிகுதி. கும்பல் கலவரத்தில் ஈடுபடலாம், கொலை, கொள்ளைகளில் ஈடுபடலாம் எனப் பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். demo என்னும் கிரேக்கச்…
விருதுகளுக்குத் தகுதியான இல.அம்பலவாணனின் புதினம்!
நூல் அறிமுகம்: ஆசைக்கோர் அளவில்லை! இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்பர். அவ்வகையில் குமுகாயத்தைப் படம் பிடித்துக் காட்டுவனவாகக் கதை இலக்கியங்கள் உள்ளன. அந்த வகையில் குமுக அவலங்களை நமக்குக் கண்முன் நிறுத்துபவராக எழுத்தாளர் முனைவர் இல.அம்பலவாணன் திகழ்கிறார். அவரது ஐந்தாவது புதினம் ‘ஆசைக்கோர் அளவில்லை’ என்பது. ஆசிரியர் அறிமுகம் புதின ஆசிரியரை அறிமுகப்படுத்துவதற்குக் காவியா சண்முகசுந்தரம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ள பின்வரும் பகுதி சரியாக இருக்கும்: “அம்பலவாணன் நல்ல கதைசொல்லி. இயல்பாக – இனிதாக – இசைவாய்க் கதை சொல்பவர். பெயர்தல், பொட்டுவைத்த பொழுதில், தூய்மை,…
