வெருளி நோய்கள் 604-608: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 599-603: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 604-608 604. கடற்கன்னி வெருளி – Serenephobia கடற்கன்னிபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடற்கன்னி வெருளி. serene என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கடற்கன்னி 00 605. கடற்குதிரை வெருளி – Odovainophobia கடற்குதிரை அல்லது பனிக்கடல் யானை(walrus) என அழைக்கப்பெறும் கடல் வாழ் உயிரி மீதான அளவு கடந்த பேரச்சம் கடற்குதிரை வெருளி. இதனைக் கடல் சிங்கம் என்றும் கூறுகின்றனர். 00 606. கடற்கோழி வெருளி-Pigkouinophobia கடற்கோழி(penguin) மீதான அளவு கடந்த பேரச்சம் கடற்கோழி வெருளி….
தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 148 & 96 + நூலரங்கம்
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௧ – 411) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 148 & 96 ; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 ஐப்பசி 16, 2056 ஞாயிறு 02.11.2025 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க்…
வி.பொ.ப. 116 ஆவது அகவை நாள், நூலாய்வரங்கம், தஞ்சாவூர்
தன்மானத் தனித்தமிழ்ப் போராளி திருத்துறைக்கிழார் புலவர் வி.பொ.பழனிவேலனார் 116 ஆவது அகவை நாள் விழா நூலாய்வரங்கம், தஞ்சாவூர் நாள் : ஐப்பசி 13, 2056 வியாழன் 30.10.2025 காலை 10.00 மணி பெசண்டு அரங்கம், தஞ்சாவூர் தலைமை: திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைவர், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் முன்னிலை: குடந்தை வை.மு.கும்பலிங்கனார் தமிழ்த்தாய் வாழ்த்து: புவனேசுவரி முத்தமிழன் வரவேற்புரை: அமுதன் பாப்புலோ தேநீர் இடைவேளையின் போது பாரதிதாசன் பாடல் இசைத்தல்: பாடல் இசைப்பவர்: பல குரல் வித்தகர் கவிஞர் இந்துமணி அவர்கள். பாடலைத்…
வெருளி நோய்கள் 599-603: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 594-598) வெருளி நோய்கள் 599-603 599. கடல்கோள் வெருளி – Tsunamiphobia கடல்கோள்(Tsunami) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடல்கோள் வெருளி. நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள், விண் பொருள்கள் மோதல் முதலான காரணங்களால் பெருமளவு நீர் இடப்பெயர்ச்சி ஏற்படுவதே கடல்கோளாகும். சுனாமி என்றே இதனைக் குறிப்பிடுகின்றனர். இது சப்பானியச் சொல். ‘சு’ என்றால் துறைமுகம். ‘நாமி’ என்றால் அலை, எனவே சுனாமி என்றால் துறைமுக அலை எனப் பொருள். தமிழில் இப்பொழுது இதை ஆழிப்பேரலை என்கின்றனர். ஆனால், இஃது அலையல்ல….
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24: வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24 வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க! “வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள வல்லை ஆகுமதி” புறநானூறு – 27 : 15 – 17 பாடியவர் : உறையூர் முதுகண்ணன் சாத்தனார். பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி. திணை : பொதுவியல். துறை : முதுமொழிக் காஞ்சி. வல்லவர் ஆயினும், வல்லவர் அல்லர் ஆயினும்…
சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 1016. Autrefois acquit முன்னரே விடுவிக்கப்பட்டடவர். முன்பே குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பெற்றவர். autrefois என்பது “முன்னர்” அல்லது “மற்றொரு நேரத்தில்” என்று பொருள்படும் ஒரு பிரெஞ்சுச் சொல்லாகும். autre = மற்றொரு + fois = நேரம் எதிர்வாதி முன்னரே விடுவிக்கப்பட்ட அதே குற்றத்திற்காக மீண்டும் உசாவப்படுவதிலிருந்தோ குற்றம் சாட்டப்படுவதிலிருந்தோ தடுப்பதற்கு உதவும் நிலை. முன்விடுதலை (Pre release) என்றால் ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பெற்று அத் தண்டனைக் காலத்திற்கு…
வெருளி நோய்கள் 594-598: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 589-593: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 594-598 594. கடமான் வெருளி-Alkiphobia கடமான் (moose) பற்றிய பேரச்சம் கடமான் வெருளி. அல்செசு(Alces) என்பது காட்டுமானின் அறிவியல் பெயராகும். ஐரோப்பாவில் இலத்தீன் மூலச் சொல்லான எல்கு(elk) என அழைக்கப்பெறுகிறது. எல்கு என்பது அல்கி என மருவியிருக்கிறது. 00 595. கடமை வெருளி-Paralipophobia கடமை ஆற்றாமல் அஞ்சி விலக்கி வைத்துக் கடமை தவறுவது, கடமை (வெருளி. தனக்குரிய கடமையை ஆற்ற முடியாது என்று சோர்ந்து இருப்பதும் மிகுதியாக உள்ளது எப்படிச் செயலாற்ற முடியும் என்று கலங்கி…
வெருளி நோய்கள் 589-593: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 584-588: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 589-593 589. ஓவிய வெருளி – Pictophobia ஓவியம் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஓவிய வெருளி. சிலர் எந்தவகை ஓவியமாக இருந்தாலும் பேரச்சம் கொள்வர்.சிலர், வரலாற்று ஓவியம், காதல் ஓவியம், சுற்றுலா இட ஓவியம், மக்கள் ஓவியம், விலங்கினங்கள் ஓவியம், பறவைகள் ஓவியம், தொன்மக்கதை ஓவியம், அச்சுறுத்தும் உருவ ஓவியம் எனக் குறிப்பிட்ட சிலவகை ஓவியங்கள் மீது மட்டும் பேரச்சம் கொள்பவர்களாக இருப்பர். 00 590. கசப்பு வெருளி – Acrisophobia கசப்புச் சுவை…
சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 3: இலக்குவனார் திருவள்ளுவன்
(சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 2: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!? உரையின் எழுத்து வடிவம் 3 மனுநூல் ,அருத்த சாத்திரம், சுக்கிர நீதி போன்ற நூல்கள் எல்லாம் மக்களைப் பாகுபாடுப்படுத்தக் கூடியவை. வருண வேறுபாடுகளைப் புகுத்துபவை ஆக உள்ள இந்த இலக்கியங்களுக்குப் பணம் கொடுக்கிறவன்தான் வருண வேறுபாட்டுக்கு உயிர் ஊட்டுகிறவன்.” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருவள்ளுவத்தைப் போற்றுகிற நாம் இந்த இரண்டு இலக்கியங்களுக்கு – இலக்கியங்கள் என்று சொல்லக்கூடாது இழிகாம நூல்களுக்கு – அஃதாவது ஆபாச நூல்களுக்கு – நாம்…
வெருளி நோய்கள் 584-588: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 579-583: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 584-588 585. ஓநாயன் வெருளி – Lupophobia / lycophobia/ Lukophobia ஓநாய்/ஓநாய்மனிதன்/ஓநாயன் (werewolf)பற்றிய பெருங் கவலையும் பேரச்சமும் ஓநாயன் வெருளி. ஓநாய் குறித்த பேரச்சத்தையும் இவ்வகையில்தான் சேர்த்துள்ளனர். ஓநாய்போன்ற மனிதன் எனவே, ஓநாயன் எனப்படுகிறான். lupus என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் lykos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருளும் ஓநாய். 00 586. ஓமர் வெருளி – Homerphobia புனைவுரு ஓமர் (Homer Simpson) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓமர் வெருளி. அமெரிக்க அசைவூட்டத்…
தொல்காப்பியமும் பாணினியமும் – 8 : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை-இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 8 பழந்தமிழர் நாகரிகத்தைப் பேசும் நூல் பழந்தமிழர் நாகரிகத்தைப்பற்றிப் பரக்கப் பேசும் நூல் தொல்காப்பியம். மக்கள் வையத்து வாழ வழிவகுத்துக் காட்டும் இலக்கிய நெறியினை எடுத்து இனிதியம்பும் ஒப்பற்ற தனிப் பெரும் நூல் இது. தமிழினத்தின் பரந்துபட்ட பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் தொல்பெரு நூலாகத் தொல்காப்பியத்தைச் கருதுவதில் யாதொரு தடையும் இல்லை. இந்நூலைத் தம் விழுமிய சொத்தாக எண்ணித் தமிழர்கள் பாதுகாக்க வேண்டும்.(புலவர் தி.வே. விசயலட்சுமி,தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு…
வெருளி நோய்கள் 579-583: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 574-578: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 579-583 579. ஓக்கலகோமா வெருளி- Oklahomaphobia ஓக்கலகோமா மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓக்கலகோமா வெருளி. ஓக்கலகோமா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் 46 ஆவதாக 1907 இல் இணைந்த மாநிலம். இதன் தலைநகரம் ஓக்கலகோமா நகரம். 00 580. ஓங்கில் வெருளி – Phocodelfiniphobia / Delfiniphobia ஓங்கில் /கடற்பன்றி(dolphin)பற்றிய அளவுகடந்த பேரச்சம் ஓங்கில் வெருளி. ஓங்கில் / கடற்பன்றி என்பது திமிங்கில இனத்தைச் சேர்ந்தது. Dolphin/தால்பின் என்பதைத் தமிழில் கடற்பன்றி என்றும் கூறுகின்றனர். கடற்பன்றி…
