வெருளி நோய்கள் 161 -165 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 156 -160 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 161 -165 161. அட்டோபர் வெருளி – shiyuephobia நடைமுறை ஆண்டில் பத்தாவது மாதமான அட்டோபர் மாதம் குறித்த வரம்பில்லாப் பேரச்சம் அட்டோபர் வெருளி. shi என்னும் சீனச்சொல்லிற்குப் பத்து எனப் பொருள்.yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, shiyue பத்தாம் மாதமாகிய அட்டோபர் திங்களைக் குறிக்கிறது. அட்டோபர் மாதம் என்பது பழைய உரோமன் நாட்காட்டியில் முதலில் எட்டாவது மாதமாகத்தான் இருந்தது. ôctō என்னும் சொல்லிற்குக் கிரேக்கத்திலும் இலத்தீனிலும் 8…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 தமிழின் தாய்மையை ஒத்துக் கொள்வது பிற மொழிகளைத் தரம் தாழ்த்தும் செயலல்ல! “தமிழ் மொழிதான் அனைத்துத் திராவிட மொழிகளுக்கும் தாய் மொழி என நிலைநாட்ட நினைப்பது மற்ற திராவிட மொழிகளைத் தரம் தாழ்த்தும் செயல்” என்று சிலர் கூறுகின்றனர். தாய்க்குப் பலர் மகவுகள் இருக்கும் பொழுது அது பெருமைக்குரிய செய்தியே தவிர யாரையும் இழிவுபடுத்தும் செயலல்ல. இது குறித்து அறிஞர் அ.அரசேந்திரன் பின்வருமாறு கூறுகிறார்: “ஓர் அம்மாவிற்கு…
வெருளி நோய்கள் 156 -160 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 151 -155 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 156 -160 156. அடுப்பு வெருளி – Kouziphobia அடுப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அடுப்பு வெருளி. அடுப்புத் துளைகள் பால் பொங்கி வடிதல் போன்றவற்றால் அடைபட்டுக்கொண்டு எரி வளி சீராக வராமல் இடையூறுகள் எற்படும், தீ நேர்ச்சி(தீ விபத்து) ஏற்படும், தீ அளவைக் குறைக்கவும் கூட்டவும் உள்ள இயக்கி நல்ல முறையில் இயங்காமல் தொல்லை கொடுப்பதால் ஏற்படும் தீங்குகள் முதலியன பற்றிய தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். எரிவளி அடுப்பு என்று இல்லை….
வெருளி நோய்கள் 151 -155 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 146 -150 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 151 -155 151. அடிபந்தாட்ட வெருளி – Baseballphobia அடி பந்தாட்டம்(Baseball) குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் அடி பந்தாட்ட வெருளி. எந்த விளையாட்டாக இருந்தாலும் வெற்றி கிடைக்குமா அல்லது தோல்விையச் சந்திக்க நேருமா என்ற கவலை வருவது இயற்கை. அடி பந்தாட்டத்தில் பந்து படக்கூாத இடத்தில் பட்டுவிடுமோ, பந்தால் காயம் ஏற்படுமோ, அடுத்தவருக்குக் காயத்தை ஏற்படுத்தி அதனால் சண்டை வருமோ என்றெல்லாம் தேவையின்றிக் கவலைப்படுவோர் உள்ளனர். சிறு பருவத்தில் இவ்வாறு நேர்ந்ததாலோ அல்லது…
வெருளி நோய்கள் 146 -150 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 141 -145 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 146 -150 146. அஞ்சல் முத்திரை வெருளி – Grammatosimophobia அஞ்சல் முத்திரை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அஞ்சல் முத்திரை வெருளி. பொதுவாக அஞ்சலகங்களில் பணியாற்றுவோருக்கே அஞ்சல் முத்திரை வெருளி வருகிறது. அஞ்சல் முத்திரை இடுவதற்குப் போதுமான மை பயன்படுத்தப் பட்டதா? அஞ்சல் முத்திரை தெளிவாக விழுந்திருக்குமா? அஞ்சல் முத்திரை மையால் ஒவ்வாமை ஏற்படுமா என்றெல்லாம் தேவையற்ற கவலையும் அச்சமும் கொள்வர். 00 147. அஞ்சல் வெருளி – Postalphobia அஞ்சல் தொடர்பான…
133/133. பிராமணர்கள் தமிழர்களா? அவர்கள் யார்? – சனாதனம் நிறைவு
(132/133. தமிழுக்கும் தமிழர்க்கும் தீங்கிழைக்கும் பிராமணர்கள் – தொடர்ச்சி) முதல் வினா இன்னும் சற்றே விரிவாகக் கேட்க வேண்டியது. ஏன் தமிழர்களா? என்று மட்டும் கேட்கிறீர்கள்? • பிராமணர்கள் தமிழர்களா? பிராமணர்கள் மலையாளிகளா? பிராமணர்கள் தெலுங்கர்களா? பிராமணர்கள் கன்னடர்களா? பிராமணர்கள் துளுவர்களா? பிராமணர்கள் மராத்தியர்களா? பிராமணர்கள் குசராத்திகளா? பிராமணர்கள் வங்காளிகளா? ….. பிராமணர்கள் காசுமீரிகளா? …… இப்படி நீண்டுகொண்டே போகவேண்டும் உங்கள் கேள்வி. நீங்கள் கேட்டுவிட்டீர்கள். ஏனைய மாநிலங்களில் இக்கேள்வி உள்ளீடாகத் தொக்கி நிற்கின்றது. புலம் பெயர்ந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் சென்ற பிறகும்…
132/133. தமிழுக்கும் தமிழர்க்கும் தீங்கிழைக்கும் பிராமணர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(131/133. இராமாயணக்கதை – சில குறிப்புகள் – தொடர்ச்சி) பார்ப்பன ஆசிரியர்கள் தங்களின் கீழ் உள்ள பார்ப்பன மாணவர்களுக்குத் தனிச்சலுகைகள் காட்டுவதும், தங்களுக்குப் பிடிக்காத மாணவர்களுக்கு என்னென்ன கெடுதல்கள் செய்யமுடியுமோ, அத்தனைக் கெடுதல்களையும் தங்களால் முடியாவிட்டாலும் அடுத்தவர்களிடம் சொல்லியாகிலும் செய்வதும், இயல்பான காட்சிகளாகிவிட்டன. பார்ப்பனத் தேர்வாளர்கள் சிலர் தங்களை எவ்வாறோ அறிந்து தேடிப்பிடித்துவரும் மாணவர்களிடமும் அவர்தம் உறவாளர்களிடமும் பெருத்த தொகைகளை வாங்கி கொண்டு தேர்வு செய்வதும், பிறகு அத்தகையவர்களே ‘கல்வித் துறையில் ஊழல் மலிந்துவிட்டது’ –என்று கூக்குரலிடுவதும் மெய்ப்பிக்க முடியாத உண்மைகளாக விளங்குகின்றன. நாட்டில்…
வெருளி நோய்கள் 141 -145 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 136 -140 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 141 -145 141. அச்சச்சூழல் வெருளி-Counterphobia அச்சம் ஏற்படுவதற்கான சூழல் உருவானால் அதனைத் தவிர்க்க முயலாமல், அளவுகடந்து அஞ்சுவது அச்சச்சூழல்வெருளி. இஃதும் அச்சச்சூழலின் ஒரு பகுதிதான். counter என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எதிராக. 00 142. அச்சப்ப வெருளி – Zymarikaphobia அச்சப்பம் (pasta)பற்றிய அளவற்ற பேரச்சம் அச்சப்ப வெருளி. pasta என்பதற்கு இலத்தீனில் மாவு, மாவு உணவு என்னும் பொருள்கள். கிரேக்கத்தில் வாற்கோதுமைக் கஞ்சி என்னும் பொருள். இத்தாலிய உணவுவகையான…
131/133. இராமாயணக்கதை – சில குறிப்புகள் – இலக்குவனார்திருவள்ளுவன்
(130./133. வேற்றுமையின் வித்தே சனாதனம்! – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் “இராமாயணக்கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தசுயூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை எடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.” இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய `திராவிடரும் ஆரியரும்’ என்னும் புத்தகத்தின் 24ஆவது பக்கத்தில் இருக்கிறது. “இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும், படை வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை -ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்.” இது (உ)ரோமேசு சந்திர டட்டு…
வெருளி நோய்கள் 136 -140 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 131 -135 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 136 -140 136. அகற்றல் வெருளி – Disposophobia தனிப்பட்ட உடைமைகள் அகற்றப்படுதல் அல்லது காணாமல் போதல் தொடர்பாக ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் அகற்றல் வெருளி. முதலில் இதை இன்மை வெருளி எனக் குறிப்பிட்டேன். ஆனால், இன்மை வெருளி(nihilophobia / Tipotaphobia/Nullophobia) எனத் தனியாக உள்ளதாலும் இல்லாமையைக் குறிக்கும் இன்மை வெருளியாகக் கூறாமல் இருந்த பின் இல்லாது போதலைக் குறிப்பதால் தனியாகக் குறிக்க வேண்டும் என்பதாலும் இப்பொழுது அகற்றல் வெருளி எனக் குறிக்கப்பட்டுள்ளது. dispos…
130./133. வேற்றுமையின் வித்தே சனாதனம்! – இலக்குவனார்திருவள்ளுவன்
(129/133. ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை!-தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 130./133. வேற்றுமையின் வித்தே சனாதனம்! “வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதனத் தருமமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் வளர சனாதனத் தருமம் வழி முறையாக இருக்கும்” என உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெரியர் ஒருவர் முத்து உதிர்த்துள்ளார். அறிந்தே சொல்லப்படும் பொய் என்பதால் அவருக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுபோன்ற பொய்களை நம்பும்…
வெருளி நோய்கள் 131 -135 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 126 -130 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 131 -135 131. அகவை 60 வெருளி – Sexatannophobia அகவை 60 குறித்த வரம்பற்ற பேரச்சம் அகவை 60 வெருளி. 50 அகவையாளருக்கு ஏற்படும் பேரச்சம் மேலும் பெருகும். ஒரு புறம் மணிவிழா குறித்த மகிழ்ச்சியும் உள்ளுக்குள் பொறுப்புகள் தொடர்பான கவலையும் கலந்த அகவை இது. பணி ஓய்வு முடிந்த பின்னரும் வீட்டு நிலையை உயர்த்த முடியவில்லை, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்விக்க முடியவில்லை, சொந்த வீடுவாங்கிக் குடி போக முடியவில்லை, இரத்த…
