பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி – ஆரூர் தமிழ்நாடன்
பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” – என்று முரசறைந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ஏப்பிரல் 29-இல் அவரது 127-ஆவது பிறந்தநாள் வருகிறது. இதைத்தொடர்ந்து, அவர் பிறந்த மாநிலமான புதுவையில், மாநில அரசு அவருக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்றும், அவருக்கு மேலும் சிறப்புகளைச் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கைக்குரல், தமிழன்பர்கள் மத்தியில் வலுவாக எழுந்திருக்கிறது. தமிழுக்கு வளமும் நலமும் சேர்த்தவர் கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைக் கொண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மொழிப்பற்றையும் இனப்பற்றையும் தன் உணர்ச்சிமிகும்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) தமிழியக்கச் செய்திகளைப் பொதுவான இதழ்கள் இருட்டடிப்புச் செய்தன. ஆனால், தி.மு.க. அன்பர்கள் நடத்தும் இலக்கிய இதழ்கள் மூலம் அவைபற்றி அறிய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், ஆங்கிலத்தில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைப் பேராசிரியர் இலக்குவனார் நடத்திய ஆங்கில இதழ் போக்கியது. வட மாநிலங்களிலும் படைத்துறையினரிடமும் இவ்விதழுக்கு நல்ல வரவேற்பிருந்தது. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்னும் திருக்குறள் மூலம் தெய்வப்புலவர் திருவள்ளுவர்…
பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை – இல. பிரகாசம்
பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவுச் சிந்தனை பெண்ணுரிமைச் சிந்தனை: “ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் இந்த நாட்டிலே” எனும் பாரதியாரின் பெண்ணியச் சிந்தனையையும், தந்தை பெரியார் அவர்களது பெண்ணியம், பகுத்தறிவுக் கொள்கையினையும் தனது சஞ்சீவி பர்வதத்தின் சாரலின் வழியாக வஞ்சி என்னும் பெண்ணின் பகுத்தறிவுக் குரலினை எதிரொலிப்புச் செய்கிறார். பெண்ணுரிமை இல்லாமையால் ஏற்படும் விளைவு: பெண்ணிற்குப் பேச்சுரிமை இல்லாமையால், ஒரு குமுகம்(சமூகம்) எத்தகைய இழிநிலைக்குத் தள்ளப்படும் என்று தான் படைத்த பாத்திரமான வஞ்சியின் நிலையிலிருந்து எடுத்துரைக்கிறார். “பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டா…
பாராட்டப்பட வேண்டிய வா.மு.சே. – வல்லிக்கண்ணன்
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் பாரதிக்குப் பிறகு தமிழில் கவிதை இலக்கியம் வளரவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். இது சரியான நோக்கு இல்லை. பாரதிக்குப் பின் கவிதை வளர்ச்சி பற்றிப் பேசுகிறவர்கள் கூடப், பாரதிதாசன். கண்ணதாசன், பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம் என்ற ஒரு சில பெயர்களை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் முழுமையான பார்வை ஆகாது. பாரதிக்குப் பின்னரும் நல்ல கவிதை எழுதுகிறவர்கள் பலர் தோன்றியுள்ளனர். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அவர்களுடைய பெயர்கள் பரவலாகப் பேசப்படுவதில்லை. குறிப்பிட்டுச்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) பேரா. இலக்குவனார் புதுக்கோட்டையில் இருந்த பொழுது ‘குறள்நெறி’ என்னும் இதழை நடத்தினார் அல்லவா? இங்கு அதே பெயரில் தமிழ்த்திங்களிருமுறை இதழைத் தொடங்கினார். இது குறித்து, இக்காலத்தில் பத்திரிகை நடத்தி வெற்றி பெறுவது கலிங்கப் போரில் ஈடுபட்டு வெற்றி காண்பதை ஒத்ததாகும். இத்தகைய துயரை அறிந்தும்கூட திரு இலக்குவனார் தமிழின்மீதுள்ள பற்றினால் குறள்நெறியை வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார்கள் என்றார் முத்தமிழ்க்காலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்(பக்கம் 4: குறள்நெறி : 1.2.64) இவ்விதழ் தொடங்குவதற்கான…
புறநானூற்றில் நிதி மேலாண்மை – அ.அறிவுநம்பி
(புதுவைப்பல்கலக்கழகத்தின் தமிழ்த்துறை புல முதன்மையர் முதலான பல பொறுப்புகளில் பணியாற்றி மறைந்த அறிஞர் முனைவர் அறிவுநம்பி மறைவிற்கு அகரமுதல இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் அவரது கட்டுரை ஒன்றினை வெளியிடுகிறது. மரபார்ந்த புலவர் வழியினர் அவர், என்பதை இக்கட்டுரையின் நடை காட்டுகின்றது. இன்றைய கட்டுரையாளர்கள் நல்ல தமிழில் பிழையின்றி எழுத வேண்டும் என்பதற்கு இது போன்ற கட்டுரைகளை முன்னெடுத்துக்காட்டுகளாகக் கொள்ள வேண்டும். கருத்தரங்கம் ஒன்றில் வாசிக்கப்பெற்ற இக்கட்டுரை ஏமலதா வலைப்பூ விலிருந்து எடுக்கப்பட்டது – ஆசிரியர் ) [நினைவுக்குறிப்பு: ‘சித்தர் இலக்கியம்’ குறித்தப் பன்னாட்டுக்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) இவ்வாறு சென்னையில் வேலைவாய்ப்பு முயற்சிகளினால் அலைந்து கொண்டிருந்த பேராசிரியர், கலைத்தந்தை கருமுத்து தியாகராச(ச்செட்டியா)ர் தம்மைச் சந்திக்க விரும்புவதாக அறிந்து மதுரை சென்றார்; தமிழ்ப் புலமையும் தமிழ்உணர்வும் மிக்க கலைத்தந்தை பேராசிரியர் சி.இலக்குவனாரைத் தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவராக நியமித்தார். அப்பொழுது முதல்வர் பணியிடமும் ஒழிவாகத்தான் இருந்தது. அதற்கு ஆங்கிலத்துறையைச் சேர்ந்த திரு. வரதாச்சாரி என்பவரை நியமித்தார். துணை முதல்வராகவும் முதல்வராகவும் பணியாற்றி உள்ள தகுதி மிக்கப் பேராசிரியரையே அவர் முதல்வராக அமர்த்தி…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) இந்தச் சூழலில் பேராசிரியர் இலக்குவனாருக்கு நாகர்கோயிலில் உள்ள தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர் பணி கிடைத்ததால் அங்கே சென்று தம் தொண்டுகளைத் தொடர்ந்தார். முதலில் தமிழ் முதுகலை தொடங்குவதற்குரிய ஏற்பிசைவைப் பெற்றுத் தொடங்கச் செய்தார். முதல்வராக இருந்த முனைவர் பா.நடராசன் மத்திய அரசின் பொருளியல் வல்லுநராகச் சென்றமையால் முதல்வர் பணியிடம் ஒழிவிடமாயிற்று. மூத்த பேராசிரியரான பேராசிரியர் இலக்குவனாருக்கு வரவேண்டிய முதல்வர் பதவியை வேறு சாதியினர் என்பதால் வழங்க மனமின்றி…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ) பேராசிரியர் இலக்குவனார் அவர்கள், தந்தை (ஈ.வெ.இராமசாமிப்) பெரியார் அவர்களுடனும் இணைந்து சொற்பொழிவுகள் மேற்கொண்டார். தந்தை பெரியார் அவர்கள், பல ஊர்களில் பேராசிரியரைத் தனி ஊர்தியில் ஊர்வலமாக அழைத்து வரச் செய்து சிறப்பித்தார்; எத்தகைய இடர் வந்தாலும் எதிர்கொண்டு தமிழுக்காகப் போராடும் ஒரே தலைவர் எனக் குறிப்பிட்டுப் பேராசிரியர் இலக்குவனாருக்குத் ‘தமிழர் தளபதி’ என்னும் பட்டத்தையும் அளித்தார். தந்தை பெரியார் அவர்களின் வேண்டுதலால் அவர் உறவினர் ஈரோட்டில் நடத்தி வந்த சிக்கையா…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ) புரவலர் அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களைத் தலைவராகவும் பேராசிரியரைச் செயலராகவும் கொண்ட திருவள்ளுவர் கழகம் அமைக்கப்பெற்றது. அண்ணலாரால் வள்ளுவர் பதிப்பகம் நிறுவப்பட்டுப் பேராசிரியரின் ‘திருக்குறள் எளிய பொழிப்புரை’, ‘எல்லோரும் இந்நாட்டரசர்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. பின்னர், நூல் வெளியீட்டுப்பணி தொடர்ந்து, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’, ‘பழந்தமிழ்’, ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’ முதலான நூல்களும் வெளியிடப்பட்டன. திருக்குறள் கழகம் மூலம் பேராசிரியர் திருக்குறள் சொற்பொழிவுகள் நடத்தியதற்குப் பெரிதும் வரவேற்பு இருந்தது. இது குறித்துப்…
கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் இடித்துரை வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. தமிழில் போற்றப்படவேண்டிய புலவர்களும் கவிஞர்களும் எண்ணிறந்தோர் உள்ளனர். அவர்களுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் கவிஞர் தாராபாரதி. தன் நெருப்புச் சொற்களால் உயிர்ப்பு கொடுப்பவர் கவிஞர் தாராபாரதி. ‘கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்’ என அவரைக் கவிப்பூக்களால் வழிபட்டிருப்பவர் கவிஞர் சந்தர் சுப்பிரமணியன். கவிஞர் சந்தர் சுப்பிரமணியன் ஒரு பன்னாட்டு…
கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 கவிமொந்தை! கருத்துடந்தை! கள்ளார் சிந்தை! கால்மறக்கும் மனமந்தை! கனவுச் சந்தை! செவியுந்தும் தமிழ்ச்சிந்தும்! தேனைத் தந்தும் திகட்டாத ஒருபந்தம்! தெரியா தந்தம்! புவியெங்கும் புதுக்கந்தம்! புதிதாய் வந்தும் புதிரவிழ்க்கும் அவர்சிந்தும்! புலமை முந்தும்! அவையெங்கும் புகழ்தங்கும்! அவருட் பொங்கும் அறிவொளியில் இருள்மங்கும்! அவர்பாச் சிங்கம்! (21) அமிலத்தில் கரைத்தெடுத்த அமுதச் சாற்றை அளிக்கின்ற பாற்கடல்தான் அவர்தம் பாக்கள்! கமலத்தின் கள்ளூற்றில் கரைந்த தீப்பூ! கவிதைக்குள் குறுவாளாய்க்…
