இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27 1.2 புலவர் வாழ்த்து தெய்வப் புலவர் திருவள்ளுவரின் இரண்டாயிரம் ஆண்டுவிழாச்சிறப்பாகப் பாடிய கவிதை ‘வள்ளுவரின் வான்புகழ்’ என்ற கவிதையாகும். அறுபத்து மூன்று அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் அமைந்தது. திருவள்ளுவர், ஏசுகிறித்து இவ்வுலகில் பிறப்பதற்கு முன் தோன்றியவர். தமிழ்த்தாயின் இனிய புதல்வர். அவர் பிறப்பு வளர்ப்புப்பற்றி கூறப்படுவன எல்லாம் வெறும் கட்டுக் கதைகளே. நாயனார், தேவர் முதலாகப் பல பெயர் அவருக்கு வழங்கப்படுகின்றன….
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26: ம. இராமச்சந்திரன்
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26 3.1 திருமண வாழ்த்து ஆய்வாளர்க்குக் கிடைத்துள்ள கவிதைகளுள் காலத்தால் முற்பட்டது. திரு. அ. கிருட்டிணமூர்த்தி திருமண வாழ்த்துக் கவிதையாகும்.62 தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் நடைபெற்ற தருமணத்தின்போது பாடியது. பாடிய ஆண்டு ஒன்று ஒன்பது ஆயிரத்துக்தொள்ளாயிரத் முப்பத்தைந்து. இக்கவிதை நேரிசை ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது. முப்பத்திரண்டு அடிகளையுடைது. இக்கவிதை. திரு. அ. கிருட்டிணமுர்த்தி தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டை என்னும் ஊரைச் சார்ந்தவர். அருணாசலம் என்பவருக்கு மகனாகத் தோன்றினார். இளவயது முதலே தமிழை நன்கு கற்றவர். பிறமொழிகள்,…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 25: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24 இன் தொடர்ச்சி) 25 இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு வாழ்த்துக் கவிதைகள் வாழ்த்துக் கவிதைகள் என்ற பொருளில் இருபத்து மூன்று கவிதைகள் இடம் பெறுகின்றன. இக் கவிதையை திருமண வாழ்த்து புலவர் வாழ்த்து பொங்கல் வாழ்த்து தலைவர் வாழ்த்து அன்பர் வாழ்த்து படையல் வாழ்த்து என்று ஆறு பிரிவாகப் பகுக்கலாம். திருமண வாழ்த்துக் கவிதை வரிசையில் மூன்று கவிதைகள் இடம் பெறுகின்றன. அவை அ. கிருட்டிணமூர்த்தி திருமண வாழ்த்து முத்தையா செட்டியார்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22 தொடர்ச்சி) 23 இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23 அண்ணாவின் சிறப்பு அறிவுடைய ஒருவரை அயல்நாட்டவரும் மதித்துப் போற்றுவர் என் பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்றாகும். கற்போர்க்குச் சென்ற இடமொல்லாம் சிறப்பு என்னும் முதுமொழி உண்மையான்றோ? ஞாயிற்றின் ஒளியை மறைப்பவர் இஞ்ஞாலத்தில் எவரும் உண்டோ? இலர் என்று கூறலாம். ‘ அறிவுடை ஒருவரை அயலரும் போற்றுவர் ஞாயிறு தன்னை நற்குடை மறைக்குமோ’ 58 ஐந்து நாட்கள் அன்புமிக்க தோழராய் விளங்கினார்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21 தொடர்ச்சி) 22 அமெரிக்காவின் அழைப்பு இன்றைய உலகில் எங்கு நோக்கினும் போட்டியும் பூசலுமே நிலவுகின்றன. இவை நாட்டைத் துன்புறுத்தும் கேடான செய்திகளாம். அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சித் திறத்தால் நம்முடைய இனிய தமிழ்நாட்டில் அமைதியும் ஒழுங்கும் குடிகொண்டு விளங்குகின்றது. இந்நிலவுலகத்தின் இதனை அறிந்த மக்கள் ஒவ்வொருவரும் தம்முடைய நாட்டில் தலைவர் அண்ணா அவர்கள் காட்சி தர வேண்டும். களிப்பினை நல்க வேண்டும் என்றே விரும்பினர். அனைவரும் அழைக்க எண்ணுகையில் எதிலும் முன்றிற்கும் செல்வச் சிறப்புடைய…
புலமையின் இயக்கம் வ.சுப. மாணிக்கம் – மு.இளங்கோவன்
புலமையின் இயக்கம் வ.சுப. மாணிக்கம் எளிமையின் உருவம்; புலமையின் இயக்கம்; சங்கப் பனுவலில் திளைத்த அறிஞர்; தொல்காப்பியக்கடலில் மூழ்கி முத்தெடுத்த வல்லுநர்; தமிழ்க்காதலால் வள்ளுவத்தை வரைந்து பார்த்தவர்; திருவாசகத் தேனுண்ணும் தும்பி; ஏழிளந்தமிழில் வாழப் பழகியவர்; பல்லாயிரம்மாணவர்களின்நெஞ்சக் கோவிலில் நிலைபெற்ற தெய்வம்; கற்றோர் உள்ளத்தில் கலந்த மேதை; தினைத்துணை உதவி பெற்றாலும் பனைத்துணையாகக் கொள்ளும் பண்பாளர்; தமிழ்வழிக் கல்விக்குத் தெருவிலிறங்கித் தமிழ் முழக்கம் செய்தவர்; கொடை விளக்கு வழங்கிய மாமலர்; தில்லையம்பலத்தில் திருமுறை முழங்க வேட்கையுற்றவர்; கல்லாத இனத்தைக் கற்க வைத்தவருக்குப் பாடாண்…
மாணிக்கனாரின் சொல் நேர்த்தி! – முனைவர் அ. அறிவுநம்பி
மாணிக்கனாரின் சொல் நேர்த்தி! எழுத்து பேச்சு எதுவாக இருந்தாலும் ஒருவருடைய வெற்றிக்கு அவர் செதுக்குகின்ற சொற்களே அடிப்படைக் காரணமாக அமையும். சிலப்பதிகார இலக்கிய மேடை ஒன்றில் உதிர்க்கப்பெற்ற சில சொற்களை இங்கே அடுக்கிப் பார்க்கலாம். “கோவலன் இறந்தவுடனேயே கண்ணகியும் இறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கள்வன் ஒருவன் இறந்தான் என்பதற்கு நாணி கள்வி ஒருத்தியும் மறைந்தாள் எனப் பேசப்பெறுமே தவிர அவளைக் கற்பி என உலகு போற்றியிருக்குமா?” இப்பகுதியில் ‘கள்வன்’ என்ற ஆண்பாலுக்குரிய பெண்பாலாகக் ‘கள்வி’ என வருதலும் கற்புடை மங்கை என்ற பொருளை…
தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார் நினைவுக் கருத்தரங்க ஒளிப்படங்கள்
மாசி 26, 2047 / மார்ச்சு 09, 2016 அன்று சென்னை இராணிமேரிக்கல்லூரி(தன்னாட்சி) தமிழ்த்துறை நடத்திய தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கத்தின்பொழுது எடுக்கப்பெற்ற ஒளிப்படங்கள் சிறப்புப் பொழிவுகள்: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு கருத்தரங்கத்தலைவர் : முனைவர் ந.கலைவாணி கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் : முனைவர் சி.கலைமகள் தலைமையுரை : முனைவர் இர.அத்தர்பேகம் புரவலர் : முனைவர் இ.மதியழகி [படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!] [embpicasa id=”6261464116110832241″]
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20 தொடர்ச்சி) 21 குற்றமற்ற அறநெறியாம் மக்களாட்சி நெறி முறையைப் பின்பற்றிக் மிகப்பெரிய இயக்கமாகத் திராவிட முனனேற்ற கழகத்தை அமைத்து மக்களைக் கவர்ந்தார். மக்களின் மிகப்பெரிய ஆதரவுடன் 6.3.1967 ஆம் நாளன்று தமிழகத்தின் முதலமைச்சராய் அரியணையில் அமர்ந்தார். பேச்சுத் திறன் கொண்டு மக்கள் உள்ளம் கவர்ந்து தலைவரானார். இத் தரணியில் இவர் போல் வேறு எவரேனும் உண்டோ? சொல்வீர். இதனை, சொல்லுந்திறன் கொண்டே தோமில் நெறியில் மக்களைக் கவர்ந்த மாபே ரியக்கம் அமைத்து முதல்வராய்…
மொழியாக்க அறிஞர் அ.தட்சிணாமூர்த்தி – ஈரநிலா
புரட்டாசி 22, 1968 / 1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள், மன்னார்குடி அருகில் இருக்கும், திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த நெடுவாக்கோட்டை எனும் ஊரில் வேளாண்பெருமக்கள் அய்யாசாமி–இராசம்மாள் இணையருக்கு, முனைவர். அ. தட்சிணாமூர்த்தி கடைசி மகனாய்ப் பிறந்தார். படிப்புவாசனையே இல்லாதவராயிருந்தும், தன் மகனின் அறிவுத்திறனை அடையாளம் கண்டுகொண்டதந்தை, கடும் இன்னல்களுக்கிடையிலும் தன் மகனைப் படிக்கவைப்பதில் உறுதியாயிருந்தார். பாதங்கள் பழுக்கப்பழுக்க நெடுந்தொலைவு பள்ளிக்கு நடந்துசென்று, மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் பயின்று, பள்ளிப்படிப்பை முடித்தவர், தமிழ்மொழியின்மேல் உண்டான அளவிலா அன்பினால் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனானார்….
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18 தொடர்ச்சி) 19 தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறிய மருத்துவர்க்கு அமைய வேண்டிய குணங்கள் (இலக்கணங்கள்) பலவும் வாய்க்கப் பெற்றவர் மருந்துவ அறிஞர் இராமச்சந்திரன். ‘ நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ 39 ‘ உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் சொல்’ 40 ‘ உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று அப்பாலநாற் கூற்றே மருந்து’ 41 மருத்துவ முறைகளைக் கற்ற மருத்துவன், நோயாளியின்…
மொழிபெயர்ப்பறிஞர் ம.இலெ.தங்கப்பா – தேவமைந்தன்
மொழியாக்க அறிஞர் ம.இலெ.தங்கப்பா ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப்பவர்கள் தமிழுலகில் மிகுந்துள்ளனர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், அதைவிட அதிகமாகத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் ம.இலெ. தங்கப்பா. மொழிபெயர்ப்பு என்று மட்டும் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் இப்பொழுது மொழியாக்கம் என்ற சொல்லையும் சேர்த்துக்கொண்டு விட்டனர். எல்லாம் ஆங்கிலத்தின் தாக்கத்தால்தான். ‘Translation’ என்பதற்கு ஈடாக மொழிபெயர்ப்பு என்ற சொல்லையும், ‘Trans-creation’ என்பதற்கு ஈடாக மொழியாக்கம் என்ற சொல்லையும் இன்று புழங்குகிறார்கள். இதிலும் இன்னொரு வேறுபாட்டைப் படைத்திருக்கிறார்கள். மொழியாக்கம், மொழிபெயர்ப்பை விடவும் தரத்தால் உயர்ந்தது…
