இந்திய அஞ்சல் :indiapost

இந்திய அஞ்சல் துறையின்

தமிழ்நாடு வட்டத்தில்

நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

  இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து இணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எண்.REP/83-1/DR/2016 நாள்: 29.02.2016

பணி: பல்வினைப் பணி (Multi Tasking Job)

காலியிடங்கள்: 127

ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200 + தர ஊதியம் உரூ.1,800 மற்றும் உரூ.1,900.

அகவை வரம்பு: 27.03.2016 நாளின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது தொழில்துறைப் பயிற்சி நிறுவனத்தில் (ITI) பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.dopchennai.in/PDF/Notification-2016.pdf என்கிற முகவரியில் உள்ள அறிவிப்பைப் பதிவிறக்கிப் படித்துப் பாருங்கள்!

 தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan