(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 63 : உடன் போக்கு – தொடர்ச்சி)

          நன்மக விதனை நயந்து வாங்கியோன்

தன்மனை யாளும் தாம்பெறு பேறெனக்

கண்ணென மணியெனக் காத்து வளர்த்தனர்;         

          எண்ணும் எழுத்தும் எழிலோ வியமும்    105

          பண்ணும் பிறவும் பழுதிலா துணர்ந்தே

செவ்விய நடையினன் செந்தமிழ் வல்லுநன்

அவ்வூர் மக்கள் அறிஞன்என் றியம்ப,    

           வாழ்வோன் ஒருநாள் வானுயர் கோவில்        

          சூழ்வோன் உட்புகச் சொற்றமிழ் கேட்டிலன்   110

          வழிபா டியற்றி வாழும் அவர்பால்

`இழிவாம் இச்செயல்! இனிமேல் தமிழால்

வழிபாட் டுரையை வழங்குக‘ என்னலும்,        

                    `நெறியன் றாம்’என நிகழ்த்தினர் மறையோர்;        

          மறியல் செய்தனன், மற்றவர் கூடிச்        115

          சிறியன் இவன்தான் செருக்குற் றானெனத்    

—————————————————————

          பேறு – செல்வம், உயிர்த்தவள் – பெற்றவள், ஊண் – உணவு, உழலும் – வருந்தும், ஆற்றான் – தாங்காதவன், செவ்விய நடை – நல்லொழுக்கம்.

+++++++++++++++++++++++++++++++

தூணிற் கட்டினர்; `தூய்தமிழ்ப் பெரியீர்!

வீணில் தவறுகள் விளைத்திட முனைந்தீர்!

உருவுகண்ட டெள்ளேல்! ஒருபொருள் யார்வாய்க்   

          கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதே அறிவாம்,    120

          கோட்பகை ஒன்றே மேற்பட நினைந்து

நாணுச் செயல்செயல் நற்றமிழ் மரபோ?’       

          (தொடரும்)