ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (26) தொடர்ச்சி)
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27)
தீமைகள் வளர்த்து, மோசத் தீமையே. முன்னேறும்படி செய்வோர்பற்றி வருத்தத்துடன் அவர் குறிப்பிடுகிறார்.
வேசித் தனத்தை முதலாய் வைத்தார்-நாட்டில்
வீறு கொண்டே எழுந்து விட்டார்-நன்மை
பேசி வாயால் மழுப்புகின்றார்-அந்தோ
பேடிமைத் தீம்ை வளர்த்து விட்டார்-விந்தை
மோசத் தீமையே முன்னேறும்-என்ன
. . . . . . .*
இன்று இங்கு, நம் நாட்டில் உள்ள நிலைகள் பற்றி பெருங்கவிக்கோ நிறையவே கருத்துக்கள் சொல்லியிருக்கிறார் தன் கவிதைகளில்.
ஊன் வளர்ப்பார் சிலபேர் உடல்வளர்ப்பார் – பலபேர்
நான், என தென்கின்ற நாசச் செருக்கினிலே
கூனாகிக் கிடக்கின்ற குருடரும் பலருண்டு
நீனா நானா வென்று நித்தமும் வீண்பேச்சு
தங்கள் பணிக்கூடம் தான்பேசிவம்பளந்து
திங்கள் ஆண்டுகளைத் தேய்ப்பவர் பலருண்டு
பொழுதெல்லாம் பிறர்பற்றி புறம்பேசி புறம் பேசிக்,
கழுதைகள் போலக் கண்டதை மேய்ந்துவிட்டு
ஊர்சுற்றும் கூட்டமும் உண்டு படித்தோரில் !
சீர்கொண்ட தன் புனியில் சிறப்புற் மாட்டாமல்,
அரசுப் பணிகளிலே அகம் தோய்ந்து உழைக்காமல்
தரமின்றிச் செல்லும்,தடியரும் பலருண்டு
உரிமைக்குக் குரல் கொடுத்து கடமைக்குச் சாவுமணி
விரித்தடிக்கும்.கூட்டமும் மேதினியில் இன்றுண்டு.
தானும் வாழாமல் தமிழ்நாடும் வாழாமல்
பேனுற்ற தலைபோலப் பிதற்றித் திரிவோரால்
யாருக்குப் பயனாம் நல்லோரே எண்ணுங்கள்
என்று சிந்தித்துப் பார்க்கத் தூண்டுகிறார் பெருங் கவிக்கோ.
“நாடு முன்னேறவும் நாட்டு மக்கள் நல்முறவும் நாம் செய்ய வேண்டியது என்ன?” அதையும் கவிஞர் அங்கங்கே வேலியுறுத்தத் தவறவில்லை.
தொண்டுக்கு முதலிடம் தருவோம்-எந்தத்
துறையிலும் நன்மை கொணர்வோம்
பண்டு நம் பெருமைகள் அறிவோம்-அருமைப்
பாடுகொள் வினைகளைத் தெரிவோம்
மண்டைக் கர்வம் குறைப்போம்-கெட்ட
வஞ்சகர் வாசலை அடைப்போம்!
தண்டச் சோறின்றி உழைப்போம்-இதற்கே
சாதனைச் சிந்தனை ஒன்றே என்போம்.
நாடு கெட்டு இன்று நலமின்றிப் போனதில் நம் எல்லோருக்குமே பங்கு உண்டு என்றும் அவர் அறிவுறுத்துகிறார். மனத்தில் தைக்கும்படிச் சுட்டுகிறார்
நச்சினை விதைத்திட்டே நற்பழம் வேண்டினால்
நாடிக் கைவந்து சேருமோ?,
நன்றியைக் கொன்றிட்டே ஒன்றாக விரும்பினால்
நம்பியது கை கூடுமோ?
முச்சந்தி நின்று தான் முழங்கியே பேசிப்பின்
முன்னுக்குப் பின் முரணாய்
முறை கெட்டு நடப்பவர் கறைபட்ட வாழ்வினால்
முன்னேற்றம் இங்கு வருமோ?
பச்சோந்தியாகவே பல வண்ணம் காட்டாத
பாதைகள் புதுமை செய்வோம்
பாரத அன்னையின் ஒன்றான சிந்தனை பயனாக்கி
நாமும் வெல்வோம்
“ஊருக்கு உழைப்பதாய்க் கூறியே, நல்ல உத்தமர் வயிற்றில் அடிக்காதே. என்றும், பேருக்கும் புகழுக்கும் அலையாதே. வஞ்சப் பித்தலாட்டங்கள் நினையாதே என்றும், தமிழின் பெயர் சொல்லி வியாபாரம் தவறான முறையில் செய்யாதே-உமியாய் நல்லவரை எண்ணாதே, கெட்ட உலுத்தத் தனம் பண்ணாதே” என்றும் அவர் எச்சரிக்கிறார்.
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
(* பின்குறிப்பு : நூலில் இவ்வரி அச்சுப்பிழையாய் உள்ளது.)
Leave a Reply