(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 79 – 106 இன் தொடர்ச்சி)

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 107- 132 

107. இணைமுரண் இறையியல்        

Dialectical Theology

108. இணைவிய உளவியல்           

Association Psychology

109. இந்தியவியல்

Indology

110. இயக்க இயல்

Kinetics

111. மீ இயற்பியல்

 

மேம்பூதிகம், அடிப்படைத் தத்துவம், அப்பாலைத் தத்துவம், அப்பாலையியல், இயங்கா வியல், இயல் கடந்த ஆராய்வு, மீ இயற்பியல், மீயியல், மீ இயல், அதீதவியல் எனப் பலவாறாகக் கூறுகின்றனர்.

அப்பாலை(Apalaí) என்பது பிரேசில் நாட்டில் பேசப்பட்டு வரும் ஒரு கரிபிய மொழி. ஏறத்தாழ 450 பேர் இந்த மொழியைப் பேசுகின்றனர். அப்பாலைமொழி இலத்தீன் எழுத்துகளில் எழுதப்படுகிறது. அதற்கும் இதற்கும் தொடர்பில்லை.

Metaphysics

112. இயங்கியல்

Dynamics

113. இயங்குஉளவியல்    

Dynamic Psychology

114. இயங்குபுவிவடிவியல்

Dynamic Geomorphology

115. இயங்குபொருளியல்

Dynamic Economics

116. இயங்கு வானிலையியல்

Dynamic Meteorology

117. இயந்திர உளவியல்

Engineering Psychology

118. இயந்திரனியப் பொறியியல்

Robotics Engineering

119. இயலறிவு உளவியல்

 

folk  என்றால் நாட்டுப்புறம், நாட்டார், மக்கள், மக்களினம் எனப் பொருள்கள். இங்கே மக்களின் இயல்பான அறிவைக் குறிக்கிறது. எனவேதான் இவ்வியலின் மற்றொரு பெயர் Commonsense Psychology   என்பதாகும். பகுத்தறிவு உளவியல் என்று சிலர் குறிப்பிட்டாலும் பொதுவாக இயலறிவு உளவியல் என்றே குறிப்பது சிறப்பாகும்.

Folk psychology / Commonsense Psychology

120. இயற் தட்பியல்

 

காண்க : தட்பியல்-Climatology

Physical Climatology

121. இயற்சமயவியல்

Physico Theology

122. இயற்பியப்புவி யியல்

Physical Geology

123. இயற்கணிதமொழியியல் 

Algebraic linguistics

124. இயற்கணிதப் பரப்புருவியல்

Algebraic Topology என்றால் அறமத் திணையியல் என்றும் இயற்கணிதப் பரப்புருவியல் என்றும் குறிப்பிடுகின்றனர். இயற்கணிதம் என்பதே பரவலாகப் பயன்படுத்துப் படுவதாலும் கணக்குத் துறையில் பரப்புருவியல் என்பதே சரி என்பதாலும் இயற்கணிதப் பரப்புருவியல் என்றே பயன்படுத்தலாம்.

Algebraic Topology

125. இயற்கை இறையியல் (இயற்கைச் சமயம்)

Natural Theology (Natuaral Religion)

126. இயற்கைவளப்பொருளியல்

Natural Resource Economics

127. இயற்பிய ஒளியியல்

Physical Optic

128. இயற்பிய வானிலையியல்

Physical Meteorology

129. இயற்பிய வேதியியல்

Physical Chemistry

130. இயற்பியல்

Physicology- இயற்பியல். சிலர் கூகுள் மொழிபெயர்ப்பு அடிப்படையில் தவறுதலாக உடலியல் எனக் குறித்துள்ளனர்.

Physiological Anthropology –  உடம்பிய மனித வியல்

Physics /  Physicology

131. இயற்பொருளியல்

Sistology

132. இயன்மருத்துவ இயல்

Physiotherapy-இயன் மருத்துவம், உடற்பண்டுவம், உடற்பயிற்சி மருத்துவம், உடற்பயிற்சிச் சிகிச்சை, உடலியக்க மருத்துவம், உடலியச்சிகிச்சை, தசைப் பயிற்சி எனப் பலவாறாகக் குறிக்கப் படுகின்றது. முதலில் உடற் பண்டுவம் என்பதே சரியாகப்பட்டது.  Treatment என்பதற்குப் பண்டுவம் எனக் கையாளலாம் என்பதால், இப்பொழுது பரவலாகக் கையாளப்படும் இயன்மருத்துவ இயல் – Physiotherapy என்பதே  அனைவருக்கும் ஏற்றதாக உள்ளது.

Physiotherapy

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000