indiyakodi-flag

எப்படி விடுதலை நாளாகும்?

வாழ்க்கையில் குறையில்லாத மனிதனில்லை. சில குறைகளை முயன்றால் போக்கிவிடலாம்.

குறை என்னவென்று சொன்னால்/முறையிட்டால்தானே தீர்வு கிடைக்கிறதா எனப் பார்க்கலாம்.

உலக அளவில் தமிழன்மட்டும்தான் தாய்மொழியில் குறையைச் சொல்ல/முறையிட முடியாது என்றால் எப்படி விடுதலை நாளாகும்?

இரண்டாம் உலகப்போரில் மொழிவழிவிடுதலை வழங்கப்பட்டன. ஆனால் உலகின் முதன்மொழியான செம்மொழித்தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்கள் தமிழர்நாட்டில் இருக்கின்றனர். உலகின்   அன‌ைத்து நாட்டிலும் தமிழர் இருக்கிறனர். ஆனால் தமிழுக்கும் தமிழனுக்கும் விடுதலை இல்லை. உலகப்பொதுமறை வழங்கிய இலக்கிய இலக்கணமுடைய தமிழில் குறையை முறையிடும் உரிமை வழங்கப்படவில்லை என்றால் எப்படி விடுதலைநாளாகும்?

வெள்ளைக்காரன் கொள்ளையடித்தான் என்று போராடிக் கொள்ளைக்காரனிடம் இன்றுவரை அடிமையாகத் தமிழன் இருக்கும்போது எப்படி விடுதலை நாளாகும்?

 தமிழனை, ஈழத்தமிழனை அழித்திட வேண்டும் என்பதில் ஒன்றிய இந்தியாவின் நடுவணரசு காட்டும் கவனம், வேகம் இப்போது மீயுயர் முறைமன்றத்தில் பார்க்கிறோமே! அடிமையாக்கத் துடிக்கும் வட நாட்டானை / இந்திக்காரனை அடிமையாக வைத்திருக்கும் திராவிடனை விரட்டும் நாளே விடுதலை நாள். தமிழ்நாட்டில் தெலுங்கு மலையாள கன்னடனுக்குப் பிறந்தவர்களுக்கு,   வடநாட்டானுக்கு, ஆங்கிலேயனுக்குப் பிறந்தவர்களுக்கே ஆகத்து 15விடுதலை நாள். தமிழர்களுக்கு மீண்டும் அடிமையானநாள். எனவே தமிழர்களுக்கு மகிழ்ச்சியில்லை.

முறைமன்றத்தில் தமிழில் முறையிடவேண்டும் தமிழில் கல்வி கற்க/ கற்பிக்கப்பட வேண்டும். வடநாட்டானை, திராவிடனை வெளியேற்றி தமிழன் ஆட்சிக்கு வரும்நாளே விடுதலை நாளாம் என்கிறோம்.

பெரியார் ஆகத்து15ஐ விடுதலைநாள் இல்லை என்றது இன்றும் பொருந்துகிறது.

தாய்மொழி போற்றாதஅரசு ஒன்று இருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டரசுதான். ஏன்.தமிழர்நாட்டை ஆள்வது திராவிடன் எனும் தெலுங்கு மலையாள, கன்னடனே! தமிழனை இந்து என்றும் திராவிடன் என்றும் குழப்பி தமிழனாக வாழவிடவில்லை. தமிழர்களாகிய நாம் தமிழரென விழித்து ஒன்றிணைந்து போராடினால் வெற்றி பெறுவோம்.

தமிழன் ஆட்சிக்கு வரும் நாளே விடுதலைநாள். கோடிக்கணக்கான தமிழர்கள் இருப்பதால் அத்தமிழர்கள் தமிழனுக்குத் தேர்தலில் வாக்களித்தால் வெற்றி உறுதி என்கிறோம்.

– ஆ.சு.மணியன், திருத்துறைப்பூண்டி

9976712362 / 9751160989