அ.வாடிப்பட்டி ஊரட்சியில் விடுதலை நாளை முன்னிட்டு மடி கணிணி வழங்கும் விழா

அ.வாடிப்பட்டி ஊரட்சியில்  விடுதலை நாளை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு மடி கணிணி வழங்கும் விழா தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி ஊராட்சியில் விடுதலை நாளை முன்னிட்டு மடி கணிணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அ.வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றத் தலைவர் மஞ்சமால பிச்சைமணி தலைமை தாங்கினார். கிளைச்செயலாளர் பிச்சை மணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சிஒன்றியக்குழுத்தலைவர் செல்லமுத்து கலந்து கொண்டார். அதன்பின்னர் மாணவ, மாணவியர்களுக்கு மடி கணிணி, புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி   மாணாக்கர் கலந்து கொண்டனர்.

என்று கொண்டாடுவோம் விடுதலை நாளை? – இலக்குவனார் திருவள்ளுவன்

என்று கொண்டாடுவோம் விடுதலை நாளை? இலக்குவனார் திருவள்ளுவன் வியாழன், 14 ஆக. 2014 , வெப்துனியா (தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன், உரிமையற்ற நாட்டிலே விடுதலைக் கொண்டாட்டமா? என வினவுகிறார். ஆயினும் இவற்றைப் பேசும் உரிமை இன்னும் இருக்கிறது என்பதை நினைவூட்டி, இதனை  வெளியிடுகிறோம். – ஆசிரியர்) “என்று தணியும் இந்தச் சுதந்திரத் தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் … … … என்றெமதன்னை கை விலங்குகள் போகும் என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்” என்று மாக்கவி பாரதியார் அடிமை…

எப்படி விடுதலை நாளாகும்? – ஆ.சு.மணியன்

எப்படி விடுதலை நாளாகும்? வாழ்க்கையில் குறையில்லாத மனிதனில்லை. சில குறைகளை முயன்றால் போக்கிவிடலாம். குறை என்னவென்று சொன்னால்/முறையிட்டால்தானே தீர்வு கிடைக்கிறதா எனப் பார்க்கலாம். உலக அளவில் தமிழன்மட்டும்தான் தாய்மொழியில் குறையைச் சொல்ல/முறையிட முடியாது என்றால் எப்படி விடுதலை நாளாகும்? இரண்டாம் உலகப்போரில் மொழிவழிவிடுதலை வழங்கப்பட்டன. ஆனால் உலகின் முதன்மொழியான செம்மொழித்தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்கள் தமிழர்நாட்டில் இருக்கின்றனர். உலகின்   அன‌ைத்து நாட்டிலும் தமிழர் இருக்கிறனர். ஆனால் தமிழுக்கும் தமிழனுக்கும் விடுதலை இல்லை. உலகப்பொதுமறை வழங்கிய இலக்கிய இலக்கணமுடைய தமிழில் குறையை முறையிடும் உரிமை வழங்கப்படவில்லை…