கிரேக்க, எகிப்திய நாகரிகங்கள் தமிழ் நாகரிகத்தின் கிளைகளே! – இராமச்சந்திர(தீட்சித)ர்
கிரேக்க, எகிப்திய நாட்டுத் தொல்பழம் நாகரிகத்தின் வடிவமைப்பாளர்கள் யாவர்? காரணகர்த்தர் யாவர்?. அவை ஆரியமொழி எதையும், அதாவது ஆரிய அடிப்படை எதையும் பேசவில்லை. அங்ஙனமாகவே, அவை தொல்பழங்காலத் தமிழ் நாகரிக மரத்தின் கிளைகளே என்பதுதான் கொள்ளக் கிடப்பதாம். கிரீட், பித்தளை, செப்பு நாகரிகத்திலிருந்து எத்தகைய இடையூறும் இல்லாமல் இரும்பு நாகரிகத்துக்குச் சென்றுவிட்டது. இந்தியாவிலும் நடந்தது சரியாக இதுவே. பித்தளை நாகரிகம் என்பது போலும் ஒரு நாகரிகம், இந்தியாவில் இருந்திருக்கவில்லை. இச் சூழ்நிலைகளை யெல்லாம் கணக்கில் கொண்டு கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால், மத்தியத் தரைக் கடலின் கிழக்குப் பகுதியைச் சார்ந்த, தொல்பழம் நாகரிகம், தமிழின் மொழிகள் பேசும் தென்னிந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவை என்பதை எவனொருவனும் உய்த்துணரலாம். மொழி இடம் பெயர்ந்தது. அம்மொழியோடு அம்மொழி பேசும் மக்களும் இடம் பெயர்ந்தனர். ஆகவே, எதிர்கால நாகரிகம், மத்தியதரைக்கடல் கடற்கரையில் பிறக்கவில்லை; மாறாக, இந்தியத் தீபகற்பகத்தின் கடற்கரைகளில், காவேரி, தாமிரபரணி, பெரியாறு, அமராவதி, கிருட்டிணா, கோதாவரி, நர்மதா போலும் பேராற்றங்கரைகளிலேயே பிறந்தன என்பதே என் ஆய்வுக்கட்டுரையின் முடிவாம்.
பேராசிரியர் ஆர்.வி.இராமச்சந்திர தீட்சிதர்:
தமிழர் தோற்றமும் பரவலும் (Origin and Spread of the Tamils)
தமிழாக்கம் புலவர் கா.கோவிந்தன்: பக் 37
Leave a Reply