சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 361-370 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 371-380
371. accidental | தற்செயலான எதிர்பாராத; தற்செயலாக தற்செயலான நேர்வில் ஏற்படும் குற்றத்தைக் குற்றமனச் செயலாகப் பார்ப்பதில்லை. |
372. accidental consequences | எதிர்பாரா விளைவுகள் எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நேரும் தற்செயலான விளைவுகளைக் குறிப்பது. |
373. accidental death | தற்செயலான மரணம்; நேர்ச்சி மரணம் எதிர்பாராமல் அல்லது எதிர்நோக்காமல் நிகழும் ஊர்தி மோதல், தீப்பற்றல், வண்டி அல்லது படகு கவிழல் போன்ற நேர்ச்சியால் ஏற்படும் உயிரிழப்பைக் குறிப்பது. |
374. accidental insurance | நேர்ச்சிக் காப்புறுதி; நேர்ச்சிக் காப்பீடு நேர்ச்சியால் ஏற்படும் உயிரிழப்பு, உறுப்பிழப்பு, உடற் காயம், மனநலப் பாதிப்பு போன்றவற்றிற்கான காப்புறுதி நிறுவனத்தில் இருந்து பெறப்படும் இழப்பீட்டுத் தொகை. |
375. Accidental omission | தற்செயல் விடுபாடு தற்செயல் விடுபாடு என்பது திட்டமிடப்படாத அல்லது வேண்டுமென்றே விடப்படாத விடுபாட்டைக் குறிக்கிறது. (மகாராசா ஏற்றுமதி மற்றும் மற்றொருவர் எதிர் ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு(Apparels Exports Promotion Council-1986) |
376. accidentalia negotii | தற்செயல் சொல்லாடல் வணிக நிகழ்வுகளில் தன்னார்வ, விருப்பமான ஒப்பந்தப் பொருண்மைக்கு இன்றியமையாததாக இல்லாத சொல்லாடடலைக் (பேச்சுவார்த்தையைக்) குறிக்கிறது. ஒப்பந்த விதிமுறைகளில் இதனுடன் சேர்த்து, இன்றியமையாத சொல்லாடல், இயற்கையான சொல்லாடல் என மேலும் இரண்டு வகைகள் உள்ளன. |
377. Accidentally | தற்செயலாக (பெயரடை/adjective) எதிர்பாராமல் நேருவது. சான்றாக வெளிச்சத்திற்காகப் பற்ற வைக்கப்படும் மெழுகு கவனக்குறைவால் படுக்கை அல்லது உடை அல்லது வேறு எதிலும் தீப்பற்றும் நேர்வு நிகழ்தல். |
378. Accite | சான்று காட்டு சான்றுக்கு அழைத்தல் சான்று கூற அதிகார பூர்வமாக அழைத்தல் |
379. Acclaim | பாராட்டு, ஆர்ப்பரி எ.கா. சமூக நீதிக்கான தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாராட்டு பெற்றார். |
380. Acclaimatise | பழகிக்கொள் பழக்கு புதிய சூழலுக்கு, புதிய காலநிலைக்கு, புதிய இடத்திற்கு, புதிய முறைக்கு, புதிய பணிக்குப் பழகிக்கொள்வதைக் குறிக்கிறது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply