நாட்டு நலனுக்காகத் தமிழீழத்தில் அமைந்த துறைகள்!

செயற்கரிய செய்யும் பிரபாகரன் : prapakaran+kural

வள்ளுவர் நெறிக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய ஈடு இணையற்ற தமிழனின் பிறந்த நாள் இன்று!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

உரை :
பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

எல்லாராலும் இப்படி ஒரு செயலை செய்ய இயலாது. பல கோடித் தமிழர்கள் இம்மண்ணில் வாழ்ந்தாலும் மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டுமே தமிழினத்திற்கு அடையாளம் தந்தவர், தமிழர்களுக்கு என்று ஒரு நாட்டைக் கட்டி அமைத்தவர்.

அப்படியான ஒரு நாட்டிற்கு தேவையான உலகமே வியக்கும் இராணுவப் படைகள், அரசியல், சமூக , பண்பாட்டுத் துறைகளை கட்டியமைத்த ஒப்பற்ற தமிழனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் தமிழர்கள் நாம் அனைவரும் பெருமை கொள்வோம் !

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகாரன் தலைமையில் செயல்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் கட்டமைத்த துறைகள் என்னென்ன என்பதை உலகத் தமிழினமே, பெருமையுடன் பாருங்கள்.

தரைப்படை

1. சார்லசு  அந்தோணி(அன்ரனி) சிறப்புப் படையணி
2. செயந்தன் படையணி
3. இம்ரான் பாண்டியன் படையணி
4. யாழ் செல்லும் படையணி
5. புலனாய்வுத்துறை தாக்குதல் படையணி
6. சோதியா படையணி
7. அன்பரசி படையணி
8. மாலதி படையணி
9. சிறுத்தை படையணி
10.தரைக்கரும் புலிகள் படையணி
11.பொன்னம்மான் கண்ணி வெடி பிரிவு
12.கிட்டு பீரங்கிப் படையணி
13. விக்குதர்(விக்ரர்) சிறப்புக்கவச எதிர்ப்பு படையணி
14.லெப். கேணல் குட்டிசிறி விசையியக்கி(மோட்டார்) படையணி
15.மகளிர் அரசியல் துறை தாக்குதல் படையணி
16.இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி
17.எல்லைப் படை
18.துணைப்படை

கடற்புலிகள்

1.சார்லசு படையணி
2.அங்கையற் கண்ணி நீரடி நீர்ச்சல் பிரிவு(மகளிர்)
3.நிறோயன் நீரடி நீச்சல் பிரிவு (ஆடவர்)
4.ஈரூடகத் தாக்குதல் படையணி
5.கடற்படை படகுக் கட்டுமானப் பிரிவு
6.கடற்கரும்புலிகள் அணி
7.கடற்சிறுத்தைப் படையணி

வான்புலிகள்

1.இராதா வான் காப்புப் படையணி
2.தமிழீழ வான்புலிகள்.

அறிவியல்

1. வெடிபொருள் தொழில்நுட்பப் பிரிவு
2.கணிணித் தொழில்நுட்பப் பிரிவு
3.  மின்னணு(இலத்திரனியல்) தொழில்நுட்பப் பிரிவு
4. போர்கருவித் தொழிற்சாலை
5.தமிழீழ இராணுவ அறிவியல் கல்லூரி

அரசியல் துறை

1. பரப்புரைப் பிரிவு
2.தமிழீழப் பொறியியல் துறை
3. தமிழீழ விளையாட்டுத் துறை
4. விடுதலைப்புலிகளின் ஆங்கிலக் கல்லூரி
5. திரைப்படபுத்தக மொழிபெயர்ப்புத் துறை
6. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு
7. தமிழீழக் கல்வி மேம்பாட்டுக் கழகம்
8 . தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகம்
9.விடுதலைப்புலிகளின் நல்வாழ்வுப் பிரிவு
10.சூழல் நல்லாட்சி ஆணையம்
11.தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு
12.பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
13.பொருண்மிய மதியுரையகம்
14.தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்
15.ஒளிக்கலைப்பிரிவு
16.தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
17.நிதர்சனம்
18.ஒளி வீச்சு ஒலிபரப்பு
19.புலிகளின் குரல் பத்திரிகை
20.புலிகளின் குரல் தமிழீழ வானொலி
21.ஈழநாதம்
22.சுதந்திரப் பறவைகள்
23.விடுதலைப்புலிகள் ஏடு
24.மருத்துவப் பிரிவு
25.திலீபன் மருத்துவச் சேவை

தமிழீழக் காவல்துறை

1)குற்றத்தடுப்புப்பிரிவு
2)விசாரணைப் பிரிவு
3)வீதி போக்குவத்துக் கண்காணிப்புப் பிரிவு
4)தமிழீழக் காவல்துறை தாக்குதல் படையணி

தமிழீழ நீதித்துறை

1.தமிழீழ நீதி மன்றம்
2.சட்ட ஆக்கக் கழகம்
3.தமிழீழச் சட்டக்கல்லூரி.

*தமிழீழப் புலனாய்வுத் துறை

*புலிகளின் உள்கட்டுமானப் பாதுகாப்புக்கான உளவுப்பிரிவு.

நிதித்துறை

1.தமிழீழ நிருவாக நிதிப்பிரிவு
2.தமிழீழ வழங்கல் பிரிவு
3.தமிழீழ வங்கி
4.கொள்முதல் பிரிவு

*தமிழீழ வெளியுறவுப் பிரிவு.

*தமிழீழப் போக்குவரத்துக் கழகம்

இதைவிட கமுக்கமான சில படைகளும் உண்டு..

இராசுகுமார் பழனிச்சாமி