வேதங்களை உருப்போட்ட பின் வாயில் இருந்து இரத்தம் இரத்தமாக வரும்
வேதங்களை உருப்போட்ட பின்
வாயில் இருந்து இரத்தம் இரத்தமாக வரும்
இளமையில் நான் வேதங்களை உருப்போட்டது உண்டு. உருப்போட்ட பின் வாயில் இருந்து இரத்தம் இரத்தமாக வரும். இப்படி இரத்தம் வருவதற்கு மூலகாரணம் என்ன என்று மருத்துவர் பலரைக் கேட்டேன்………….
ஒரு மருத்துவர் என்னைக் காலையில் ஓதுகின்ற உபநிடதத்தையும், வேதங்களையும் 15 நாட்கள் வரை நிறுத்தி வைக்கச் சொன்னார். உபநிடத்தையும், வேதத்தையும் நிறுத்தி வைத்துத் தமிழையே ஓதினேன். அப்பொழுது இரத்தம் வரவில்லை. அன்றிலிருந்து சமற்கிருதம் ‘இரத்த மொழி’ என்று முடிசெய்தேன். தமிழுக்கும் சமற்கிருத்திற்கு இந்த வேறுபாடு இருக்க காரணம் என்ன என்று ஆராய்ச்சி செய்தேன்.
தமிழ் மொழி அருந்தவத்தோர் மொழி. நம் உடம்பிலே உள்ள ஆற்றல் அழிந்து போகாதபடி தமிழ்ச் சொற்கள் அமைந்து இருக்கின்றன.
சமற்கிருத சுலோகங்களை உருப்போடுவது எனக்கு துன்பமாகத் தான் இருந்தது. காலையில் எழுந்து உருப்போட்ட உடன் உடம்பில் வலிவு இல்லாமல் போயிற்று. அரைமணி, 1 மணிநேரம் வரை தமிழ்ப் பாடல்களை ஓதி வந்தேன். அப்பொழுது எனக்கு துன்பமே இல்லை. இன்பமே இருந்தது.
– தமிழ்க்கடல் மறைமலையடிகள்
Leave a Reply