திருக்குறள் ஆய்வரங்கம் 1028 : சனாதன எதிர்ப்பு : கு. மோகனராசு
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையும் உலகத் திருக்குறள் மையமும் இணைந்து நடத்தும் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1028 திருக்குறள் உலக நூல் அன்று அது சனாதன தரும நூல் என்னும் பரப்புரையை மறுத்து, திருக்குறள் உலக நூல்- சனாதன எதிர்ப்பு நூல் என்பதை நிலைநாட்டும் புள்ளிவிவர அடிப்படையிலான நுட்பமான தொடர் ஆய்வுப் பொழிவுகள் 🕢 காலம் : தி. ஆ. 2054, புரட்டாசி 20 07-10-2023 சனிக்கிழமை காலை 10-00 மணி 🌲 இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம்,…
‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 4/4 – வெ.அரங்கராசன்
(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 3/4 தொடர்ச்சி) முனைவர் மு.மோகனராசின் கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ நூல் திறனாய்வுக் கட்டுரை 4/4 13.1.0.0.அவ்ஆய்வு முடிவுகள் – 6: இவை நூலாசிரியன் ஆய்வு முடிவுகள்: 13.1.1.0.பழமையில் பெரும்பற்றுக் கொண்ட கன்பூசியசின் நோக்கிலிருந்து, வள்ளுவர் பெரிதும் வேறுபடுகிறார். [பக்.27]. 13.1.1.1. பழையன என்பதாலேயே அவற்றைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும் – போற்ற வேண்டும் என்னும் உணர்வோ புதியன என்பதாலேயே அவற்றை ஏற்கக் கூடாது என் னும் உணர்வோ வள்ளுவரிடம் சிறிதும் இல்லை. பழையன வாயினும்…
‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 3/4 – வெ.அரங்கராசன்
(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 2/4 தொடர்ச்சி) முனைவர் மு.மோகனராசின் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ நூலாய்வு 3/4 8.0.0.0.ஆய்வுப் போக்கு: ஓர் ஆய்வு / ஒப்பாய்வு நூலின் உள்ளடக்க ஆய்வுத் தலைப் புகள், உட்தலைப்புகள், இவ்விரண்டிற்கும் எண்ணிடல், பத்திகள் பிரிப்பு போன்றவை சிறப்புற அமைதல் வேண்டும். இவற்றிற்கு எல்லாம் ஒப்பாய்வுச் சான்று நூலாக இந்நூல் இலங்குகிறது. 8.2.0.0.உள்ளிருக்கும் ஒவ்வோர் ஆய்வுக் கட்டுரைக்கும் வரிசை எண் வழங்கல், 8.2.0.0.ஆய்வுக் கட்டுரைகளைக் கருத்து நிறைவுக்குத் தக்கபடி உட்தலைப்புகள் அமைத்தல், அவற்றிற்கு எண்ணிடல்,…
‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 2/4 – வெ.அரங்கராசன்
(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 1/4 தொடர்ச்சி) முனைவர் மு.மோகனராசின் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ – நூலாய்வு 2/4 4.3.0.0.கன்பூசியசின் (இ)லூன்யூவும் திருவள்ளுவரது திருக்குறளும்: 4.3.1.0. கன்பூசியசின் (இ)லூன்–யூ: சீனாவின் மறை நூலகிய (இ)லூன் யூ, உரை நடையில் அமைந்த நூல். இதில் 20 இயல்கள், 499 முதுமொழிகள் உள்ளன. இவற்றுள் 424 முதுமொழிகள் கன்பூசியசு உரைத்தவை; 32 முதுமொழிகள் கன்பூசியசு பற்றியவை; 43 முதுமொழிகள் பிறர் உரைத்தவை. 4.3.2.0.திருவள்ளுவரது திருக்குறள்: [பரிமேலழகர் வைப்பு முறை] 3…
திருக்குறள் அருவினையாளர்கள் தொகுப்பு – விவரம் தருக!
திருக்குறள் அருவினையாளர்கள் தொகுப்பு – விவரம் தருக! உலகத் திருக்குறள் மையம் சார்பில் நிறுவனர் முனைவர் கு.மோகனராசு, திருக்குறள் அருவினையாளர்கள் விவரங்களைத் தொகுத்து வெளியிட உள்ளார். தாம் அறிந்த விவரங்களைத் தொகுத்துள்ளார். அவை கீழே தரப்பட்டுள்ளன. இவற்றில் தேவைப்படும் திருத்தங்கள், கூடுதல் விவரங்கள், புதிய சேர்க்கைகள் ஆகியவற்றை உலகத் தமிழன்கர்கள் தருமாறு வேண்டுகிறார். எனவே, இவற்றைப் படித்துப்பார்த்து உரிய திருத்தங்கள் இருப்பின் அவற்றையும் புதிய விவரங்களையும் தருமாறு வேண்டுகிறோம்.
புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு
புலவர் தி.வே.விசயலட்சுமியின் இரு நூல் வெளியீடு உலகத் திருக்குறள் மையத்தின் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா வள்ளுவர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்டாசி 30, 2046 / 17.10.2015 காலை 10.00மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆய்வியல் நிறைஞர், புலவர் தி.வே. விசயலட்சுமி எழுதிய `திருக்குறள் அலைகள்’, `ஒரு வரியில் வள்ளுவம்’ என்ற இரு நூல்கள் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டன. அமுதசுரபி ஆசிரியர் முனைவர்திருப்பூர் கிருட்டிணன் நூல்களைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். பேராசிரியர் முனைவர்…
