(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 126-150 தொடர்ச்சி)

kaalamthoarum-thamizh-heading

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175

 

  1. செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 325.2

  1. ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால்

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 326.3

  1. மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச்

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 327.2

  1. பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும்

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 330.2

  1. பெரு வாய்மைத் தமிழ்பாடி மருங்கு எங்கும் பிறப்பு அறுத்துல்

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 331.2

  1. தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர்

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 331.3

  1. சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 340.3

  1. ஒருவாத பெருந்திருத் தாண்டகம் முதலா ஓங்கு தமிழ்ப்

 – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 342.2

  1. தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார்.

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 349.4

  1. தப்பு உறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார்.

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 360.4

  1. மன்னும் தீம் தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த

–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 361.2

  1. கோது அறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 384.2

  1. பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித்

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 386.3

  1. பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 389.2

  1. தீந்தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னி

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 392.1

  1. சண்பை வரும் தமிழ் விரகர் எழுந்து அருளத் தாம் கேட்டு

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 393.1

  1. மண் குலவும் தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார்.

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 400.4

  1. அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 403.2

  1. செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார்

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 404.3

  1. பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 406.3

  1. பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 409.3

  1. பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலி

 – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 410.2

  1. தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 411.1

  1. தேம் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப்

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 412.1

  1. வைகும் நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார்.

– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 413.4

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

இலக்குவனார் திருவள்ளுவன்