தலைப்பு-அகமேவாழ்த்துக : thalaippu_akamenee vaazhthuga

அகமே நீ வாழ்த்துக!

கதிரவன் கிரணக் கையால்

            கடவுளைத் தொழுவான் புட்கள்

சுதியொடும் ஆடிப் பாடித்

            துதிசெயும் தருக்க ளெல்லாம்

பொதியலர் தூவிப் போற்றும்

            பூதம்தம் தொழில்செய் தேத்தும்

அதிர்கடல் ஒலியால் வாழ்த்தும்

            அகமேநீ வாழ்த்தா தென்னே

மேதை வேதநாயகம் பிள்ளை: நீதித்திரட்டு

vethanayakam01