இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? – தமிழ்நெஞ்சன்
இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி?
காலில் முள் குத்தினால்
கைபோகும் எடுக்க
கண்களில் கண்ணீர் வரும்
வலி உணர்த்தும் மூளை
இது உடலியக்கம்
உயிரியக்கம்
ஆனால்
இந்தியா ஒரே நாடு
என்றே கூப்பாடு
இருந்தும் ஏன்வரவில்லை
காவிரி? பாலாறு?
முல்லை பெரியாறு?
இந்தியா நாடல்ல
துணைக்கண்டம்
தமிழகம் மாநிலமல்ல
தனிநாடு
ஒரேநாடென்றால்
கருநாடகாவில் இருந்து
தமிழன் ஏதிலியாய்
தமிழ்நாட்டிற்கு வருவதேன்?
ஆங்கிலேயன் வருவதற்கு முன்
இந்தியா இல்லை
56 தேசமாக இருந்தது
இந்து ×தமிழன்
இந்தி ×தமிழ்மொழி
இந்தியா × தமிழ்நாடு
உலகில் உள்ள நாடுகளை
அந்தந்த இனமக்களே தான்
ஆள்கின்றனர்
தமிழ்நாட்டைத் தவிர
கருநாடகாவைக்
கன்னடன் ஆள்கிறான்
கேரளத்தை
மலையாளி ஆள்கிறான்
தமிழ்நாட்டை மட்டும்
தமிழனல்லாத
திராவிடனும் இந்தியனும்
ஆள்கிறானே ஏன்?
தமிழ்நாட்டை
தமிழன் தான் ஆளவேண்டும்
என்று சொன்னால்
இனவெறி என்கிறான்
தமிழா ! இனவுணர்வு கொள்
இனப்பகையை
இன இரண்டகத்தைக் கொல்
புதுவைத் தமிழ்நெஞ்சன்
Leave a Reply