(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 54 : எரிந்த ஏடுகள் – தொடர்ச்சி)

 அணங்கிற் கின்பம் அகத்தினிற் பொங்க

அன்னாய் என்னுயிர் அன்னாய்! தமிழே!

ஒன்னார் மனமும் உருக்குந் கமிழே!

அகப்பகை புறப்பகை கடந்தாய் தமிழே !

தகப்பன் தாயெனத்  தகுவழி  காட்டி

மிகப்பல் லறநூல் மொழிந்தாய் தமிழே!

          உலகம் வியக்க ஒப்பிலாக் குறளால்       135

          கலகம் தவிர்ப்பாய் கன்னித் தமிழே!

இறக்கும் வரைநின் பணியே யல்லால்

துறக்கமொன் றுண்டெனத் துணியேன் தமிழே!

இடுக்கண் வருங்கால் துடைப்பாய் தமிழே!   

          மொழிவளம் மிகுந்தாய் முதன்மைத் தமிழே!  140

          பழியிலா நின்னைத் தொழுதக வல்லது

வாழ்த்துதற் கென்வாய் வகையறி யாதே’       

பூங்கொடி தாயகம் மீளல்

          இவ்வணம் பலபட இசைத்து, முதுமை

கவ்விய அன்னையைக் கைகுவித் தேத்திப்    

          பவ்வங் கடந்து பாவை பூங்கொடி 145

.

          பிரிவாற் கலங்கிப் பேதுறும் நெஞ்சத்

தருண்மொழி வதியும் ஆயிடைத் தோன்றித்

துயரங் களைந்து தூயநற் றமிழால்

இயலுங் கூத்துநூல் இசைநூல் காட்டி,    

          `நமக்கிவை துணையாம் நாட்டில் தமிழிசை   150

          முழக்குதற் கினிநாம் முயலுதல் வேண்டும்;

தடுப்பார் தமக்குக் கொடுப்போம் ஓலை

படிப்பார் அறிவர் பைந்தமிழ் இசையை’                  

என்றாங் கிருந்தனள் இவ்வுரை மொழிந்தே.

—————————————————————

          அணங்கு – பூங்கொடி, ஒன்னார் – பகைவர், துறக்கம் – வீடுபேறு, பவ்வம் – கடல்

(தொடரும்)