சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!

சங்கத் தமிழே சாய்ந்தாடு!

செந்தமிழ்ப் பாவே சாய்ந்தாடு!

கலைவளர் தமிழே சாய்ந்தாடு!

ஏழிசைத்தமிழே சாய்ந்தாடு!

குன்றாத் தமிழே சாய்ந்தாடு!

 

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

சீர்மிகு தமிழே சாய்ந்தாடு!

தூய தமிழே சாய்ந்தாடு!

தெய்வத் தமிழே சாய்ந்தாடு!

மூவாத் தமிழே சாய்ந்தாடு!

மேன்மைத் தமிழே சாய்ந்தாடு!

 

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

சங்கத் தமிழே சாய்ந்தாடு!

இலக்குவனார் திருவள்ளுவன்