தமிழினத்திற்கு வாழ்வா ? சாவா ? – புலவர் பழ.தமிழாளன்
தமிழினத்திற்கு வாழ்வா ? சாவா ?
1.
அன்றுதொட்டே இன்றுவரை அறத்தமிழை இனத்தினை
அழிக்கின்ற கொள்கைநிறை நஞ்சாரிய நெஞ்சுடன்
நன்றிகொன்று நாடோறும் ஞாலமதில் வாழ்பவர்
நடுநிலையும் நயன்மையையும் நாடாத இனமதே
இன்றுமுற்றாய் அழிப்பதற்கே ஏறியுமே ஆட்சியில்
இயற்றுகிற சட்டமதை எண்ணியுமே காத்திட
ஒன்றிணைய வேண்டுமென்றே உள்ளமதில் தேருக !
ஒன்றிணைய வில்லையெனில் ஒண்டமிழும் அழியுமே !
2.
தனதுநலம் புறந்தள்ளித் தமிழினத்தைக் காப்பதே
தலையாய கடனென்று தமிழினமே உணருதல்
தனதுநல முதற்படியாய் நெஞ்சமதில் தேருக !
தமிழ்மொழியே தன்னினத்தைக் காக்கவல்ல தென்றுமே
தனதுநெஞ்சில் பதித்தென்றும் குறியாககக் கொள்வதே
தமிழ்ப்பகையாம் ஆரியத்தை வெல்லுகின்ற கருவியே
இனங்காக்க மொழிகாக்க அடலேறாய்த் தமிழினம்
எழுகதிராய் எழுந்துபகை முடிப்பதற்கே ஒன்றுக !
புலவர் பழ.தமிழாளன்
இயக்குநர் -பைந்தமிழியக்கம்
திருச்சிராப்பள்ளி
Leave a Reply