தமிழ்த்தாய் வணக்கம் 6-10 : நாரா. நாச்சியப்பன்
(தமிழ்த்தாய் வணக்கம் 1-5 தொடர்ச்சி)
தமிழ்த்தாய் வணக்கம் 6-10
மஞ்சள் முகமலர்ந்து மாதர் கரும்புமொழி
கொஞ்சி வழங்கக் குதுகலிக்கும்-நெஞ்சுடனே
சங்கொலித்துப் பால்பொங்கும் தைத்திருநாள் இன்றுனது
பங்கயத்தாள் சார்ந்தோம் பணிந்து! (6)
இன்னமு தாகிய என்னனே யேஉனை
என்னித யாசன மேற்றினேன்-கன்னலின்
செந்தமி ழாகிய தேன் கவி பாய்ந்திட
வந்தருள் செய்கவே வாழ்த்து. (7)
வாழ்த்துகவி யாலிந்த் வையக முற்றுமே
ஆழ்த்துவேன் இன்பநல ஆக்கமெலாம்-சூழ்ந்திடவே
நன்னெறியே பாடி நலஞ்சேர்ப்பேன் எந்நாளும்
உன்னருளே தாராய் உவந்து. (8)
தமிழ்படித்த தாலிவர்கள் தாழ்ந்தோர் எனவே
நமைப்பழித்தார் எல்லாமிந் நாட்டில்-அமைதியொடு
வாழ விடுங்கொடுமை நாட்டில் மறைந்தொழிய
ஆளவரு வாய்நீயம் மா! (9)
பாழும் பகைசூழ்ந்து பைந்தமிழின் வேரறுத்து
வாழும் நிலைகண்டேன் வையத்தே-தாழும்
தமிழர் கிளர்ந்தெழவே தாயே நின் சக்தி
அமிழ்தை வழங்கி யருள். (10)
(தொடரும்)
–பாவலர் நாரா. நாச்சியப்பன்
Leave a Reply