பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 – கருமலைத்தமிழாழன்
(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 – தொடர்ச்சி)
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8
கொல்லையிலே பூத்துளது என்ற போதும்
கொஞ்சுமெழில் நறுமணத்தை அறிவ தற்கே
முல்லைக்கும் விளம்பரங்கள் செய்யும் காலம்
முத்தமிழில் உள்ளதென நமக்கு நாமே
சொல்லுவதால் யாறறிந்தார் உலக மெல்லாம்
சொல்லுகின்ற வகையினுக்கே வழியென் செய்தோம்
வெல்லுகின்ற இலக்கியத்துக் கருத்தை யெல்லாம்
வெளிச்சத்தில் கடைவிரித்தே கூவ வேண்டும் !
கணியனவன் யாதும்ஊர் என்று ரைத்த
கருத்தின்று கணினிவழி வந்த திங்கே
தனித்தீவாய் வாழ்ந்துவந்த மக்க ளெல்லாம்
தமராக இணைகின்றார் இணையத் தாலே
இனிநம்மின் வீட்டிற்குள் இருந்த வாறே
இத்தரையின் நிகழ்ச்சிகளைப் பார்ப்ப தோடு
தனித்தனியாய் தம்மொழியில் பேசு தற்கும்
தகவல்கள் பெறுதற்கும் வாய்ப்பைப் பெற்றோம் !
(தொடரும்)
பாவலர் கருமலைத்தமிழாழன்
9443458550
ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம்
சித்திரைத்திருவிழா கவியரங்கம்
நாள்: சித்திரை 02, 2048 / 15 -4 – 2017
தலைமை : முனைவர் ஆனைவாரி ஆனந்தன்
தலைப்பு : பல்துறையில் பசுந்தமிழ்
Leave a Reply